முன்னேறு

This entry is part [part not set] of 41 in the series 20050415_Issue

முகம்மது றியாஜத்


நீ
நடந்து செல்வதால்
புதியதொரு தெரு
உருவாகுமென்றால்,
நீ நடந்து செல்லும்
இருண்ட பாதை
உன்னால்தான்
ஒளி பெறுமென்றால
இருட்டுள்ள இடமெல்லாம்
உன் பாதச் சுவடுகள்
முத்தமிடட்டும்.

உன் தோலின்
பாதத்துக்குத்தான்
விலகுவோம் என
அடம் பிடிக்கம் நெருஞ்சி முட்களுக்கு
உன் தோல்
போர்வையாகட்டும்
இன்னொரு காலைக்
காப்பதற்காய்.

அடுத்த ஒரு அடி
இருட்டில்தான்
என்றாலும்
மற்றைய அடிகள்
ஒளிவீசும்
எதிர்காலத்திற்கென்றால்
ஏன்
அடுத்த வினாடிக்காய்
காத்திருக்க வேண்டும் ?
இந்த வினாடியின்
இறப்பால்
உன் வசந்தம்
உயிர் கொண்டால்
இறந்த வினாடி
சாந்தியடையும்.

உன் தலை
எாிவதில்தான்
இந்தத் தீபங்கள்
உயிர் பெறுமென்றால்
கழுத்தையும் கொடு.

கடந்துபோ
காலத்துக்காயும்
கரைந்துவிட்ட
நேரத்துக்காயும்
கையசைத்துப்போன
காதலுக்காயும்
காலாவதியான
காத்திருப்புக்காயும்
கற்பனைக்கெட்டாத
கனவுகளுக்காயும்
காய்ந்துபோன
கால்வயிற்றுக்காயும்
கனத்துப்போன
மனங்களுக்காயும்
ஏன்
இன்னும் கண்ணீா; ?

காத்திருக்கும் எதிர்காலம்
நாளை உன்
கட்டியம் கூறும்
காலைத்துாக்கி
முன்னே வை
கண்ணுக்கெட்டிய
துாரத்தில்தான்
இன்னும் தொிகிறது
விடிவெள்ளி.

—-

Series Navigation

முகம்மது றியாஜத்

முகம்மது றியாஜத்