காலம் எழுதிய கவிதை – ஒன்று

This entry is part of 34 in the series 20050206_Issue

அஸ்காாி


– இலங்கை

காலம்
வளியின் வெளியில்
கடினமான கவிதைக்கு
பிள்ளையார் சுழி போடும்.

கவிதை வென்று
காாியம் படைக்க
கடல் தாண்டி
உடம்பு போகும்.

காலக் கவிதையுடன்
மனமோ
சூனியவெளியில்
சண்டை போடும்
ரெளத்ரம் பாடும்.

உடலை உருக்கி
மனதை வென்று
உன்னடி தேடி ஓடி வருகையிலே
காற்று வெளி வந்து
தடுத்து காதம் சொல்லும்
உடம்போ மாித்துப் போகும்
மனதோ மீண்டும் வரும்
மீண்டு வரும்.

தற்காலிகத்திற்கு
அன்பு மட்டுமே உறவின் பாலம்
காலச் சுழலின் கவிதை
விட்டுப்போன புதிாின்
சூக்குமம் காண
முடிச்சு அவிழ்க்க
அதில் நான்
புரளாமலாமலுமிருக்க.

அஸ்காாி – இலங்கை
riyasahame@yahoo.co.uk

Series Navigation