நீண்ட இரவு தொடர்கிறது…

This entry is part [part not set] of 55 in the series 20041104_Issue

புஷ்பா கிறிஸ்ரி


எரிந்த வெய்யிலின் காந்தம் தணிந்தது

இலையுதிர் காலத்து இளந்தென்றல் கூட

சுள்ளென்று வந்து குளிராகத் தைக்கிறது

மரங்களில் இலைகள் எப்படித் தம்

நிறங்களை மாற்றிக் கொள்கின்றனவோ ?

பட்ட மரங்களாய் சில மரங்கள்

பரிணாமம் பெறுகின்றன.

கண்ணுக்குக் குளிர்வூட்டிய

பச்சைப் புல்வெளிகளெல்லாம்

பனிக்காலத்து வாட்டம் கொள்கின்றன

இனிதாய் தன் கடமையைச் செய்கிறது

இயற்கை.. சிரித்தபடி..

இடம் பெயர்ந்து வந்த இடம் தேடி

பறவைகள் மீண்டும் பறக்கின்றன

நீண்ட பகற்பொழுது மெதுவாய் மெதுவாய்

குறைந்து சென்று

நீண்ட இரவுப் பொழுதுகளில்

சங்கமிக்கின்றன…

(கலைப்) புஷ்பா கிறிஸ்ரி
pushpa_christy@yahoo.com

Series Navigation

புஷ்பா கிறிஸ்ரி

புஷ்பா கிறிஸ்ரி