தாவோ க்ஷேத்ரத்தில் போகேண்டதெங்ஙனெ ? (சச்சிதானந்தனின் மலையாளக் கவிதை. மொழியாக்கம் )

This entry is part [part not set] of 46 in the series 20041014_Issue

இரா.மு


வீடு பூட்டருது.
புலரியுடெ செரிவிலூடெ
இளங்காற்றிலெ இலயெப்போலெ
கனமில்லாதெ போவுக.

ஏறெ வெளுத்திட்டெங்ஙில்
சாரம் பூசிப் போவுக.
கூடிய புத்தியெங்ஙில்
பாதி மயக்கத்தில் போவுக.

வேகம் கூடியது
வேகம் தளரும்.
பதுக்கெ போவுக.
நிச்சலதயோளம் பதுக்கெ.

ஜலம் போலெ அரூபியாவுக.
தாண இடத்துத் தங்ஙுக
முகளிலேக்கு உயரான்
பரிச்ரமிக்கயே வேண்டா.
வலத்து வெய்க்கேண்டா.
சூன்யதய்க்கிடம்வலமில்ல.
முன்னும் பின்னுமில்ல.

பேர் விளிக்கேண்டா.
இவன்றெ பேரினு பேரில்ல.

வழிபாடுகள் வேண்டா,
ஒழிஞ்ஞ பாத்ரம்
கொண்டுபோவுக
நிரஞ்ஞ பாத்ரத்தேக்காள் எளுப்பம்.

பிரார்த்திக்கயும் வேண்டா.
ஆக்ரங்ஙள் உள்ளவர்க்கு
இடமல்லிது.

ஸம்ஸாரிக்கணமெங்ஙில்
நிச்சப்த்ம் ஸம்ஸாரிக்குக.
பாற மரங்ஙளோடும்

மரங்ஙள் பூக்களோடும்
என்னபோல.

ஏற்றவும் மதுரமாய சப்தம்
மெளனமாகுன்னு.
ஏற்றவும் மனோஹரமாய வர்ணம்
இல்லாய்மயுடேதும்.

வருன்னது ஆரும் காணேண்டா

போகுன்னதும் காணேண்டா.
தணுப்பில் புழ கடக்குன்னவனெப்போலெ
நாலில் ஒண்ணாயிச் சுருங்கி வேணம்
கோபுரம் கடக்கான்.

அலியுன்ன மஞ்ஞின் துள்ளியெப்போலெ
ஒரு ஞொடியே நினக்குள்ளு.

நாட்யமருது.
நீ இனியும் ரூபப்பெட்டில்ல.

தேஷ்யமருது.
பொடிபோலும் நின்றெ வருதியிலல்ல.

கேதமருது.
அதொண்ணினெயும் பாதிக்குன்னில்ல.

கீர்த்தி விளிச்சால்
வழிமாறி நடக்குக.
ஒரு காலடிப்பாடுபோலும்
பாக்கியிடாதிரிக்குக.

கைகள் உபயோகிக்குகயே வேண்டா
அவ எப்போழும் சிந்திக்குன்னது
ஹிம்ஸயெக்குரிச்சாணு.

மஹத்வத்தெ நிராகரிக்குக
மஹத்வத்திலேக்கு வேறெ வழியில்ல.

புழயிலெ மீன் புழயில் கிடக்கட்டெ
மரத்திலெ பழம் மரத்திலும்.

கடுப்பமேறியது ஒடியும்
ம்ருதுவாயது அதிஜீவிக்கும்
நாவு பல்லினெ என்னபோலெ.

ஒண்ணும் செய்யாத்தவனே
எல்லாம் செய்யானாவு.

படி கடன்னு செல்லு.
நின்னெக் காத்திருக்குன்னு
நிர்மிக்கப்பெடாத்த விக்ரகம்.

மொழியாக்கம்

தாவோ கோவிலுக்கு எப்படிப் போவது ?
—-

வீட்டைப் பூட்டாதே.
விடியலின் பள்ளத்தாக்கில்
இளங்காற்றில் இலைபோல்
கனமில்லாமல் போ.

வெளுத்த மேனியென்றால்
சாம்பல் பூசி மறைத்துப்போ.
அதிகம் அறிவுண்டென்றால்
அரைத் தூக்கத்தில் போ.

வேகம் மிகுந்தது
வேகம் தளரும்.
மெல்லப் போ.
நிலைத்தது போல் மெல்ல.

நீர்போல் வடிவமற்று இரு.
அடங்கி இரு.
உச்சிக்கு உயர
முயலவே வேண்டாம்.

பிரதட்சிணம் செய்யவேண்டாம்.
வெறுமைக்கு இடம்வலமில்லை
முன்னும் பின்னுமில்லை.

பெயர்சொல்லி
அழைக்க வேண்டாம்.
இவன் பெயருக்குப் பெயரில்லை.

வழிபாடுகள் வேண்டாம்.
வெறுங்குடத்தோடு போ.

நிறைகுடத்தைவிட
சுமக்க எளிது.

பிரார்த்திக்கவும் வேண்டாம்.
கோரிக்கையோடு
வருகிறவர்களுக்கான
இடமில்லை இது.

பேசியே ஆகவேண்டுமானால்
மவுனமாகப் பேசு.
பாறை மரங்களோடு
பேசுவதுபோல்
மரங்கள் பூக்களோடு
பேசுவதுபோல்.

மிக இனிய ஒலி மெளனம்
மிகச் சிறந்த நிறம்
வெறுமையினது.

நீ வருவதை யாரும்
பார்க்க வேண்டாம்.
திரும்பிப் போவதையும்
பார்க்க வேண்டாம்.
குளிரில் ஆற்றைக் கடக்கிறவன் போல்
சுருண்டு குறுகிக் கோபுரம் கடந்து போ.

உருகும் பனித்துளிபோல் உனக்கு
ஒரு நொடிதான் நேரம்.

பெருமிதம் வேண்டாம்.
நீ இன்னும் உருவாகவே இல்லை.

கோபம் வேண்டாம்.
தூசித் துகள்கூட உன் அதிகாரத்துக்கு
உட்பட்டதில்லை.

துக்கம் வேண்டாம்.
அதனால் எதுவும் பயனில்லை.

புகழ் அழைத்தால் விலக்கி நட.
ஒரு கால்தடத்தையும்
விட்டுப் போகாதே.

கைகளைப் பயன்படுத்தவே வேண்டாம்
அவை எப்போதும்
துன்பம் செய்வது பற்றியே சிந்திக்கும்.

மகத்துவத்தைத் துறந்துவிடு.
மகத்துவமடைய வேறே வழியில்லை.

ஆற்று மீன் ஆற்றில் கிடக்கட்டும்.
பழம் மரத்தில் இருக்கட்டும்.

உறுதியானது ஒடியும்.
மென்மையானது நீண்டு வாழும்.
பல் நடுவே நாக்கு போல்.

ஒன்றும் செய்யாதவனுக்கே
எல்லாம் செய்ய முடியும்.

படி கடந்து போ.
உனக்காகக் காத்திருக்கிறது
இன்னும் உருவாகாத விக்கிரகம்.


Series Navigation

இரா.மு

இரா.மு