அந்தத் தருணங்களில்…!

This entry is part of 45 in the series 20040916_Issue

நளாயினி தாமரைச்செல்வன்


நாம் இடைக்கிடை
சந்தி;க்கும்
அந்த
மாலைப் பொழுதுகளில்
உன்னை
ஆரத்தழுவ துடிக்கும்
என்கைகளை
வலுக்கட்டாயமாக
இழுத்துப் பிடிக்கிறேன்.
உன்னை முத்தமிட
துடிக்கும்
என் உதடுகளை
பற்களால்
அடிக்கடி கடித்து
தண்டனை கொடுக்கிறேன்.
உன் கை விரல்களுடன்
கை கோர்க்க துடிக்கும்
என் விரல்களை
கை றேகைகளுடன்
பின்னிக்கொள்கிறேன்.
நீயும் நானும்
அருகருகே
இருந்து
பேசும் போது கூட
நமக்கிடையில்
மனத்திரையில்
முள்வேலி
போட்டுக்கொள்கிறேன்.
என்ன இவள்
கட்டுப்பெட்டி என
உன் மனதுள்
நினைக்கலாம்.
எம் காதல்
அ ?ீரணமாக
கூடாது பார்.
நளாயினி தாமரைச்செல்வன்
சுவிற்சலாந்து.
—-
thamarachselvan@hotmail.com

Series Navigation