ஒரு தலைராகம்

This entry is part [part not set] of 41 in the series 20040909_Issue

சிங்கை சுவின்


கண்டதும் காதலா ?
சினிமாத்தனமாக
இருக்கிறதே!

ஆயிரத்தில் ஒருத்தியாக
என் உள்ளம்
கவர்ந்திட்டாளே!

“ஓ” நிலைத்தேர்வு
“ஓகோதான்!”
துடித்தது முளை!

மனமே
மறந்துவிடு!
துள்ளியது மனம்!

இருளில் ஒளியாய்
தேனின் இனிப்பாய்
மொழிகளில் தமிழாய்

இனித்தாள் அவள்!
இளித்தேன்
நான்!

தலைக்கு ‘ஷாம்பாய் ‘
பற்களுக்குக் ‘கோல்கெட்டாய் ‘
இத்தனைக் கனவுகள்
எத்தனை நினைவுகள்!

நேற்றுவரை நரகம்
இன்று முதல் கனவு
நாளைக்கும்
சூனியமா ?

காதல் தூது ஒன்று
புலியாய்ச் சென்று
பூனையாய்த்
திரும்பியதே!

நிலத்திலும் இல்லாமல்
நீரிலும்இல்லாமல் ஒரு
பதில்!
உண்டில்லை! ?

அப்போதே
அந்த்க்கணமே
துறந்திருக்க வேண்டும்
உயிரை!

மனமில்லை!
திரிந்தேன்
தாடி வைக்காத
தேவதாசாக!

எளவு!
தாடிகூட வளரவில்லையே!
என்ன செய்ய நான் ?

நண்பர்களாகவே
இருப்போம் என்றாள்!
தொடர்ந்தோம்!

நண்பனாக
அவளுக்கு நான்!
காதலியாக எனக்கு அவள்!

ஒரு தலைக்காதலில்
முழுத்தலையே
மூழ்கிவிட்டது!

விட்டதையாவது
பிடிப்போம் என்ற
எண்ணம் எழுந்தது!

அவளை இல்லை
பாதியில் விட்ட
என் படிப்பைதான்!

எஸ்.எம்.எஸ்சைத்
துறந்தேன்!
ஆனால்
அவளையே
நினைத்தேன!

நினைத்து
நினைத்து
என்னையே
மறந்தேன்!

இதயம் துடிக்கிறது
உனக்காக!
எனது மூச்சிலும்
பேச்சிலும்
நீ வாழ்கிறாய்!

நீ இல்லையென்றாலும்
உண்டு என்பேன்!
நீ வராவிட்டாலும்
காத்திருப்பேன்!!

தனியே நிற்கும்
ஒற்றை மரமாய் நான்!
ஓ… இதுதான்
ஒரு தலை ராகமோ ?

-சிங்கை சுவின், அண்டர்சன் தொடக்கக்கல்லூரி

Series Navigation

சிங்கை சுவின்

சிங்கை சுவின்