போட்டோக் கவிதை…

This entry is part [part not set] of 41 in the series 20040909_Issue

கோச்சா (எ) கோவிந்த்


—-
யார் கண்டது
பழையதாகிப் போய் விட்டது என்று
பரணில் தூக்கிப் போட்டிருக்கலாம்….
இல்லை
‘கராஜ் சேலில் ‘ 25 சென்ட்டிற்க்கு
வித்திருக்கலாம்….!!!
ஆனால் நடந்ததுவோ…. ?

சில மனிதர்கள் வெறிச் செயலால்
இந்த
மிருக பொம்மையில்
இவளுக்கு தன் –
குழந்தையின் தரிசனம்…!

பார்க்க பார்க்க
விழியில்
கண்ணீர் ததும்புகிறது..
அக்
கண்ணீர்த் ததும்பலில்
தத்தளிக்கும்-
அவள் குழந்தையின்
நினைவு.

துப்பாக்கியும் துப்பாக்கியும்
மோதிக் கொண்டதில்
துர்ப்பாக்கியம்
ஆனாது பலர் வாழ்வு

நிலத்தைக் காக்கத்
தான்
இரு கோஷ்டியும்
போரிடுகின்றன..
நிலம் காக்கத் துடிப்பது எதற்காக… ?
கல்லறைத் தோட்டம்
அமைக்கவா…. ?
—-
gocha2004@yahoo.com

Series Navigation

கோச்சா (எ) கோவிந்த்

கோச்சா (எ) கோவிந்த்