நீர் வளர்ப்பீர்

This entry is part of 46 in the series 20040520_Issue

சாந்தி மனோகரன்


வெட்டி வீழ்த்தப்பட்டு-மரங்கள்
தரைமட்டம் ஆக்கப்படும்போது
நீர்மட்டம் குறையத்தான் செய்கிறது-ஆம்
வேர்க்காதலன் இல்லாத இடத்தில்
நீர்க்காதலி வசிப்பதில்லை
வேரிடம் வெற்றிடமாகையில்
வேறிடம் பெயர்கிறாள்..காதலி

காடு மரங்கள் தொலைத்திடும் நிலம்
சுடுகாட்டில் கணவனை தொலைத்திடல் தகும்
செல்லுங்கள்…!
தண்ணீருக்காக கையேந்தி
காத்திருத்தல் விட்டுவிட்டு
விதை தூவி செடி நட்டு
மரம் செய்து .. நீர் வளர்ப்பீர்

ஆம்…
நீர்மட்டம் உண்மையில் உயரும்போது-இங்கே
நிலவிவரும் பஞ்ச நிலை மாறக்கூடும்-உலகமெங்கும்
பசுமைமுகம் மலரக்கூடும்..எனவெ
காத்திருத்தல் விட்டுவிட்டு
விதை தூவி செடி நட்டு
மரம் செய்வீர் .. நீர் வளர்ப்பீர்…!!!

-shanthi_yem@yahoo.com

Series Navigation