வீழ்த்துவதேன் ?

This entry is part of 48 in the series 20040506_Issue

பனசை நடராஜன், சிங்கப்பூர்


புவிநீரை ஆவியாக்கி
வளியோடு கலந்ததினால்
மழைநீரைப் பொழிந்தென்னை
மகிழ்வித்தது வானம்!

உதிர்த்த இலைகளை
உணவாக்கி வளமண்ணைக்
கழித்து என் உயிர்வளர்த்துக்
காத்திடும் மண்புழுக்கள்!

பசுந்தழையைத் தின்றுவிட்டு
தன்கழிவை உரமாக்கி
செழித்துயர்ந்து நான்வளரச்
செய்தனக் கால்நடைகள்!

காய்கனியும், உயிர்க்காற்றும்
தந்தபோதும் இரக்கமின்றி
சாய்த்துஎனை வேரோடு
வீழ்த்துவதேன் மனிதர்களே!

-பனசை நடராஜன், சிங்கப்பூர்-
(feenix75@yahoo.co.in)

Series Navigation