காடுகளால் ஆன இனம்

This entry is part of 52 in the series 20040422_Issue

கவிஞர் ராக்குட்டி


காட்டில் அனைத்து மரங்களும்
நடப்பட்ட ஆண்கள் என நிற்கின்றன.
கிளைகள் விறைத்த ஆண் குறியாகவும்
காய்கள் விதைப் பையாகவும்
யாரோ ஒரு பெண்ணிற்காக
ஆயுள் முழுதும் காத்துக் கிடக்கின்றன.
மரத்திற்கேற்றபடி தன் உறவுகளுக்காக

கொலைகாரி, திருடி.குடிகாரி
துரோகி, மோசக்காரி, ஊழல் ராணி,
ஏமாற்றுக்காரி, விபச்சாரி
காம சாதி மத இன மோகினிகள்
இவாகள் யாரையும் காடு கைவிட்டு விடுவதில்லை
அவரவருக்கான மர நிழல் எப்போதும் இருக்கிறது.

உடல் தொட்டிலாகவும், ஆண்குறி கட்டிலாகவும் இருந்து
விந்து உடலாகி உயிரளித்து
அரவணைத்து பாதுகாக்கப்படும்
பெண் பந்தங்கள்
பெண்கள் காட்டைப் புணாவதன் மூலம்
மரத்தை வளாக்கிறாாகள்.
ஆண்களையல்ல
காலத்தை ஆளும் ஆண்கள் காடாவதில்லை.
—-

rawkutty04@hotmail.com

Series Navigation