என்னைப் பொறுத்தவரை

This entry is part of 72 in the series 20040415_Issue

புதுவை ஞானம்


****

என்னைப் பொறுத்தவரை
சாமானிய வாழ்க்கை
ஒன்று தான் வாழ்க்கை
ஆம்….
வாழ்வதற்கு ஒரு வழி இருக்கிறது
அதன்
அழகோடும்
அசிங்கத்தோடும்
விழிப்புணர்வுடனும் அல்லது
விழிப்பற்றும்
வழக்கத்துக்குப் புறம்பாகவும்
மிக நேர்த்தியாகவும்
வாழ முடியும்
புனிதமாக மாறுமளவு
இருப்பினும்
இதைத் தவிர
வேறு
வாழ்க்கை ஒன்றில்லை.

(புதுவை ஞானம் எங்கோ படித்தது. யார் சொன்னது ?)

****

Series Navigation