ஓட்டப்பந்தயம்

This entry is part [part not set] of 72 in the series 20040415_Issue

ஆர் டி லெய்ங் (தமிழில் : புதுவை ஞானம்)


****

காலத்துக்கு எதிரானதோர்
ஓட்டப்பந்தயம் நடக்கிறது.

‘நமக்குள் ஒருவன் ‘ – என
மனிதர்கள் உணர்ந்தால்
மாற்றங்கள் உண்டாகும்
மேலும் மேலும்.
முட்டாள்தனமான
சுயநலத்தின் அடிப்படையில்
பார்த்தால் கூட
‘அவர்களை ‘ அழிப்பதன் மூலம்
‘நம்மை ‘ -யும் அழித்துக் கொள்வதும்
‘நாமும் ‘ அவர்களும் கடக்கப்பட்டு
மனித இனத்தின் முழுமையாய்
மாற வேண்டும் ‘ என்பதும்
புலப்படும்.
யுத்தம் தொடர்கையில்
இரு அணிகளுமே
ஒன்றையொன்று ஒத்ததாகவே
காட்சியளிக்கின்றன.
தன் வாலைத் தானே விழுங்குகிறது
தறுதலை உடும்பு.
முற்றிலும் சுழலுகிறது காலச்சக்கரம்
நாமும் அவர்களும்
ஒருவருக் கொருவரின்
நிழல்கள் என்பதை
நாம் அறிவோமா ?
நமக்கு அவர்கள்
அயலார் என்பது போலவே
அவர்களுக்கு நாம்
அயலார் என்பதை அறிவோமா ?

எப்போது விலகும்
மறைத்திட மூடிய மாய இருள்.
எப்போது மாறும்
சாடைப் பேச்சுகள்
கேளிக்கையாக.
இன்னமும் கூட
தொழுநோயாளிகளை
முத்தமிடுகின்றனர்
பாதிரியார்கள்.
தொழுநோயாளிகள்
பாதிரியார்களை
முத்தமிடும் நேரம் நெருங்குகிறது.

(–R.D.LAING- politics of experience)

****

Series Navigation

புதுவை ஞானம்

புதுவை ஞானம்