கயிறுகள்

This entry is part [part not set] of 44 in the series 20040115_Issue

அருண்பிரசாத்


தாவிப் பிடிக்கையில்
தாங்கும் சில கயிறுகள்.

மாலையென மகிழ்கையில்
மெல்ல கழுத்திறுக்கும் ஒரு சில.

ஊசலின் நீள அகல
மதிப்பீடுகளால் கைவிடுவன மற்றும் சில.

உள்ளே விழுதாகும்
நம்பிக்கையின் உறுதியுடன் வெகு சில.

everminnal@yahoo.com

Series Navigation

அருண்பிரசாத்

அருண்பிரசாத்