Langston Hughes கவிதைகள்

This entry is part [part not set] of 57 in the series 20030717_Issue

வசீகர் நாகராஜன்


(கறுப்பின மக்களின் வேதனை குறித்து எழுதியவை)

என் மக்கள்

இரவு அழகானது,
என் மக்களின் முகம் போல.

நட்சத்திரங்கள் அழகானது,
என் மக்களின் கண்கள் போல.

சூரியன் கூட அழகானது,
என் மக்களின் ஆத்மா போல.

ரங்கராட்டிணம்

எனக்காக ஒதுக்கப்பட்ட
நானேறும் குதிரை எங்கே ?

நான் வாழும் கீழ் தெற்கு ஊரில்
பக்கம் பக்கம் அமர முடியாது

நான் ஏறும் புகைவண்டியில்
தனியாகப் பெட்டி உண்டு

நான் போகும் பேருந்தில்
கடைசி இருக்கை எனக்குண்டு

இராட்டினம் இவ்விடத்தில்
முதலெது ? முடிவெது ?

கறுப்பினக் குழந்தை நான் ஏற
எக் குதிரை இங்குண்டு ?

கனவுகள்

கனவு காணுங்கள்

கனவுகள் இறந்து விட்டால்
வாழ்க்கை
பறக்க இயலா சிறகொடிந்த பறவை

கனவு காணுங்கள்

கனவுகள் போய் விட்டால்
வாழ்க்கை
பனி உறைந்த பாழ் நிலம்

VNagarajan@us.imshealth.com

Series Navigation

வசீகர் நாகராஜன் - ஆங்கில மூலம் : லேங்ஸ்டன் ஹுயுக்ஸ் (1902-1967)

வசீகர் நாகராஜன் - ஆங்கில மூலம் : லேங்ஸ்டன் ஹுயுக்ஸ் (1902-1967)