‘பாரதி பாடாத பாட்டு ‘

This entry is part [part not set] of 34 in the series 20030427_Issue

கரு.திருவரசு


பாரதி பாடாத பாட்டு – இனிக்கும்
பழத்தமிழே உனக்குத் தாலாட்டு – இது
பாரதி பாடாத பாட்டு -பாரதி

சீரதிகம் படைத்த தமிழ்த்தாயே
செல்வன் தாலாட்ட அருள்வாயே -பாரதி

தூங்காமல் தூங்கிடும் சுகத்துக்குத் தாலாட்டு
துடித்தெழுந்தே உழைத்துக் களைத்தோர்க்குத் தாலாட்டு
ஓங்கார ஒலிக்குள்ளே உறங்குது தாலாட்டு
உணர்ந்து தெளிந்தவர்க்கே உதவிடும் தாலாட்டு -பாரதி

thiruv@pc.jaring.my

Series Navigation

கரு.திருவரசு

கரு.திருவரசு