மேக நிழலில் ஓர் பொழுது …

This entry is part [part not set] of 30 in the series 20030125_Issue

வசீகர் நாகராஜன்


அலைபாயா அவசரமின்றி
அலைக்கழிக்கா பரபரப்பின்றி
வேலையன்றி ஓர் வேளை
கணினி முன் கழித்ததுண்டா ?

நிதம் நிரம்பி வழியும் மின்கடிதங்கள் மூட
காவிரி நீர் வேண்டும் தஞ்சைப் பயிராயிட ,
அரைமணிக்கொரு முறை தேநீர் அருந்திட,
அசையாமல் அமைதி அணிந்திடும் கடிகாரம்

யாஹூவும் கூகுலும் வலைவிரித்து
அகப்பட்ட வாசல்கள் அனைத்தும் நுழைந்து
குமுதமும் விகடனும் மறுபடி படித்துக் களைக்கையில்
மந்தமாய் மயங்கி வந்திடும் மதிய உணவுவேளை

உணவின் கனம் உணர்த்திடும் களைப்பு
செயலற்றுப் போனதொரு செயல்நிலை
உணர்வுகள் உறங்கிட விழித்திருக்கும் விழிகள்
வீணடித்த கணங்கள் மனதில் வீற்றிடும் கனம்

சக நண்பர் சிரிப்பொலியில் கரைந்திடும் அயர்வு
அலுவலின் சுமையில் மறந்திருந்த மடல்களுக்கு
நலம் நாடி நட்பு புதுப்பித்து மனது லேசாகையில்
கண்சிமிட்டி சிரித்திடும் மனதின் ஓரம் ஓர் கவிதை .. ..

vasikar@சுahoo.com
VNagarajan@us.imshealth.com

Series Navigation

வசீகர் நாகராஜன் - ஆங்கில மூலம் : லேங்ஸ்டன் ஹுயுக்ஸ் (1902-1967)

வசீகர் நாகராஜன் - ஆங்கில மூலம் : லேங்ஸ்டன் ஹுயுக்ஸ் (1902-1967)