Lord Siva

This entry is part [part not set] of 35 in the series 20021207_Issue

கவியோகி வேதம்


சிவனே நமக்கொரு நெம்புகோல்!-எந்தத்
..தீமையும் ஓடிடும் உந்துகோல்!
அவனே அடியார்கள் மூலபலம்!-அவன்
..அன்பில் குளித்தோரே தேவகுலம்!
சிவனையே நாளும் தொழுதுநின்றால்,-எந்தச்
..சின்னப் பயமும் நெருங்கிடுமோ ?
அவனைத் தொடர்ந்து வணங்கினவர்-அடிகள்
….அறுபத் துமூவர் ஆனவர்கள்!
கவலையே வேண்டாமே உங்களுக்கு!-அவன்
..காலை நினைத்தால் சுகம்இஇருக்கு!
பவனி வரலாம் உலகமெலாம்!-முக்கண்
..பார்வையே பட்டால் அருள்பெறலாம்!
கலிகாலம் இஇஃது-அவன் அறிவான்-நமக்கு
..கடும்சோத னையே தரமாட்டான்!
துளியேனும் நம்மை நினைப்பானா ?,-என்றே
…தொடர்ந்து சிவன்-இஇங்கு ஏங்குகின்றான்!
கண்ணப்பன் நாமன்(று)! அவன் அறிவான்!
..கண்-கேட்கும் சோதனை செய்யமாட்டான்;(அஞ்சாதீர்!)-
சிறுத்தொண்டர் நாமன்(று)! அவன் அறிவான்!
..சிறுவன்-கறி கேட்டுத் தொல்லைகொடான்;!
சுற்றிலும் தீமை படுத்துவதை,-நமது
..சுற்றம் அழுக்காறில் பொங்குவதை
முற்றிலும் நம்சிவன் நன்குஅறிவான்!-அதனால்
..முழுதாய் அவனைச் சரண் அடைவீர்!
எத்தனை சோதனை வந்தாலும்-ஒரு ‘புல் ‘
..எழுந்து விழுந்து முளைக்கலையா ?
எத்தனை மேடுகள் தோன்றிடினும்-ஒரு-அருவி
..ஏறி மிதித்தே தவழலையா ?
அதனால்,
இஇங்கே ஒளிரும் சிவன்-அழகை-ஆகா!
…எளிதில் அருளும் அவன்வடிவை,
முங்கிப் பருகியே நம்மனத்தில்-ஒரு
..முழுமையாம் யோகம் பயின்றிடுவோம்.
பொங்கும் அருவிபோல் அவ்வடிவை-தினம்
..புதிது புதிதாகக் காணுகிற-அட,
உங்களின் ‘வேதம் ‘ உரைக்கின்றேன்;
..உணர்ந்து பணிவீர்,நீர் பாடுவிரே!

***
(கவியோகி வேதம்)-
***
sakthia@eth.net

Series Navigation

கவியோகி வேதம்

கவியோகி வேதம்