கூரை எரிந்ததில் நிலவை ரசிக்கும் நான்…

This entry is part [part not set] of 31 in the series 20020217_Issue

வசந்தி ராஜா


காசு கொடுத்து
ஆம்பிளை வாங்கி
அதற்கு
பணிவிடையும் செய்யும் அவலங்கள்,
நான் சொல்ல
விழி விரித்துக் கேட்கிறாள் மகள்
ராஜா ராணி கதை கேட்கும் பாவனையில்.

போர் தருகின்ற
சோகங்களுக்குள்ளாலேயும்
ரகசியமாய்
சிலிர்த்துக் கொள்கிறேன்.
புலம் பெயர்ந்தமை
தங்கத் தட்டில் தந்திட்ட சுதந்திரம்
என் மகள்களுக்கும்
நம் பெண்களுக்கும்.

(பறத்தல் அதன் சுதந்திரம் – தமிழ்ப் பெண் கவிதைகள் தொகுப்பிலிருந்து)

Series Navigation

வசந்தி ராஜா

வசந்தி ராஜா