உதிர்ந்த இசைமலர்

This entry is part [part not set] of 20 in the series 20011202_Issue

பசுபதி


இங்கிலாந்து நமக்கீந்த இனியஜார்ஜ் ஹாரிஸனே !
வங்கதேச உதவிக்கு வந்துநிதி தந்தவனே !

இந்தியரின் தயத்தில் என்றும்வாழ் இசையுனதே !
இன்றிந்த இசையுலகை இருள்கவிந்து மூடியதே !

ரவிசங்கர் நட்புற்றாய் ! இறைதேடும் பண்புற்றாய் !
அரேகிருஷ்ண நாமமதை அரவணைத்தே இன்புற்றாய் !

ஞாலமெங்கும் புகழ்பெற்ற நால்வரின் நாதம்நீயோ ?
காலனைக் கிதாரிசையால் கவர்ந்திடவே கடுகினையோ ?

கீர்த்திபல பெற்றாலும் குடவிளக்காய் சுடர்ந்தனையே !
கார்த்திகைத் தீபமெனக் கர்த்தருடன் கலந்தனையோ !

பாரதம்சொல் ஆன்மீகம் பலர்நாடக் காரணம்நீ !
ஹாரிஸனே ! உன்னாத்மா ஹரிஈசன் பக்கமினி !

‘கதிரவன் எழுங்காட்சி கணநேரம் மீறிடுமோ ?
அதிர்ந்திடும் அடைமழையும் அதிகநேரம் பெய்திடுமோ ?

உதிப்பதெல்லாம் ஒடுங்கும் ‘எனும் உன்னுரையோ மெய்யென்றும் !
உதிர்ந்தசை மலர்மணமும் உலகெங்கும் வீசட்டும்!

*****

Series Navigation

பசுபதி

பசுபதி