கற்றுக்கொடேன்……..

This entry is part of 25 in the series 20010924_Issue

நா.பாஸ்கர்


காதலிக்கக் கற்றுக்கொடுத்தவளே நீதான்
உனை மட்டுமல்ல உலகத்தில் உள்ள
எல்லாவற்றையும் காதலிக்கமுடியுமென
உணர்த்தியவள் நீதானே

ஏனையவற்றின் மேல்
எனக்குள்ள காதலை
அவற்றிற்கு தெரியப்படுத்த வேண்டிய
கட்டாயம் எனக்கு கிடையாது.

உன் மேல் வைத்துள்ள
உள்ளக்காதலை மட்டும்
உனக்கு உணர்த்தவேண்டும்
அதற்க்கான வழி மட்டும் சொல்லேன்.

சாதாரண விஷயங்களை உன்னோடு
சம்பாஷிக்கும் பொழுதே வார்த்தைகள்
அங்கங்கே அடைப்பட்டு விடுகிறதே
காதலை எப்படிச் சொல்வேன் ?

நான் என்ன அமெரிக்க
உலக வர்த்தகக்கட்டிடமா
ஒ ?ாமாவாக மாறுகிறாயே ?

என் செய்கைகள்
வெளிக்காட்டாத காதலையா
என் மவுனம்
உனக்கு உரைத்துவிடப்போகிறது

இருந்தாலும் கடைசியாக
ஒன்று மட்டும் கற்றுக்கொடு
உன்னிடத்தில் காதல் சொல்லும் கலையை

Series Navigation