ரசூலை மீட்க இனியொரு விதி உண்டோ…?

This entry is part [part not set] of 41 in the series 20071206_Issue

ஜி.எஸ்.தயாளன்


மதங்கள் மனிதர்களைப் பண்படுத்தும் நோக்கினை எட்ட இயலாமல் தொடர்ந்து தோல்வியடைந்து வருவதின் சமீபத்திய உதாரணம் ரசூலின் ஊர்விலக்கம்.

வாசிப்பை மூச்சாகவும் எழுத்தை வாழ்வாகவும் கொண்டவர் ரசூல்.மென்மையான உணர்வுகளின் வழியே அழுத்தமான அதிர்வுகளை உருவாக்கும் வரிகளால் அறியப்படுபவர்.வீர்யமும் சாந்தமும் கொண்ட மனதின் நுட்பமான தேடலாக அவர்எழுத்துக்கள் வியாபிக்கின்றன.

மார்க்சிசம்,சூபிசம்,பின்நவீனத்துவம்,நவகாலனியப் புரிதல் போன்ற எந்த தத்துவத்துக்குள்ளும் அடைபட்டு விடாமல் இவை எல்லாவற்றின் பலங்களோடும் சாதி மற்றும் சகல அதிகாரங்களுக்கும் எதிராக இதய சுத்தியோடு இயங்கி வருபவர்.எழுத்தாளர் என்ற அடையாளம் தவிர வேறு எந்த அடையாளமும் அவருடைய ஆன்மாவிற்கு பொருத்தமாக அமையாது.இதுவே இவ் ஊர்விலக்கத்தின் அடிப்படைக் காரணமாக தோன்றுகிறது.

குடும்பத்தோடு ஊர்விலக்கம் செய்யப்பட்ட ரசூலின் விரல்பிடித்து நடந்து எழுந்த எழுத்தாளர்களில் மிகக் கொஞ்சமாக எழுதிய நான் உட்பட பலரும் இந்த எழுத்து எதிர்வினையையும் வேடிக்கைப் பார்ப்பதையும் தவிர எதையும் செய்ய இயலாத இயலாமையை இந்த ஊர்விலக்கம் வெளிக்காட்ட உதவியது.

இந்திய அளவிலும் உலக அளவிலும் தீவிரவாதப் பெயரால் ஒதுக்கப்பட்டுவரும் இஸ்லாமிய சமூகத்திற்கு ஆதரவாக எழுத்தாளர்கள் களப்பணி ஆற்றுகையில் அவர்களுக்கெதிராக அச் சமூகத்தினரே ஊர்விலக்கம் போன்ற தண்டனைகள் நிகழ்த்துவது சரியான புரிதலை அடைய அவர்கள் கடந்து செல்ல வெகுதூரம் இடையிலிருப்பதை வெகுளித்தனமாய் வெளிச்சமாக்கிக் கொள்கிறார்கள்.

ரசூல் அஞ்சுவன்னம் ஜமாத்தின் உறுப்பினர். ஆனால் தமிழிலக்கியத்தின் தமிழர்களின் பொதுச் சொத்து. அறியாமையின் அண்டையில் நின்று கொண்டு அவரை பார்ப்பது சாத்தியமற்றுப் போகும் போது தண்டனையால் தண்டிப்பதுதான் சாத்தியப்படுகிறது. தண்டனைக்கு காரணமான கட்டுரையில் ரசூலின் கருத்துக்களாக எதுவுமில்லை. மார்க்க அறிஞர்களின் கருத்துக் கோர்வை மட்டுமே அது. ஒரு விவாதத்திற்கான தொடக்கப் புள்ளி அது. ஆனால் ஒரு வாதமும் வைக்காமல் உள்ளூர் இயலாமைகள் மறைந்து கொள்ளும் களமாக உச்ச பட்ச தண்டனைகள் அமைந்துவிடுவது மிகவும் கண்கூடு.

அறிவுத்துறையினர் அனைவரும் ரசூலுக்கு ஆதரவுக் குரல் கொடுப்பதிலிருந்து ரசூலை ��=8 � அவரது கட்டுரையை புரிந்து கொள்ள தகுதியற்றவர்களின் தண்டனையாக ஊர்விலக்கம் நிரூபணம் ஆகிறது.

பொதுவாகவே எழுத்தாளர்களுக்கு வாழும் காலத்தில் எதிர்மறை அங்கீகாரம்தான் கிடைக்கிறது. அது மைலாஞ்சி தொடங்கி இன்றுவரை ரசூலுக்கு நிறையவே கிடைத்திருக்கிறது.அதிக பட்ச தண்டனை தீவிர எழுத்தாளனுக்கு உயரியவிருதாகக் கொண்டால் இத் தண்டனையின் நல்ல அம்சமாக அதனை கொள்ளலாம்.

தன்னை சுயம்புவாக சித்தரிக்க கையில் கசையோடு அலைபவர்களிடம் கசையடி கொள்ளும் ரசூலை மீட்க இனியொரு விதி உண்டா


Series Navigation

ஜி.எஸ். தயாளன்

ஜி.எஸ். தயாளன்