மெல்லச் சுருங்கும் மேற்கத்திய உலகம்

This entry is part [part not set] of 40 in the series 20071101_Issue

நரேந்திரன்



“In a time of universal deceit, telling the truth is a revolutionary act.”
– George Orwell

ஆம். மேற்கத்திய உலகம் தேய்ந்து கொண்டுதான் இருக்கின்றது. நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக. தேய்வது நிலப்பரப்பில் அல்ல. மக்கள் தொகையில். இரண்டாம் உலகப் போருக்குப் பின், உலக மக்கள் தொகையை ஒப்பிடுகையில், 1970 மற்றும் 2000 ஆண்டுகளுக்கு மத்தியில் மேற்கத்திய நாடுகளின் மக்கள் தொகையானது, 30 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாகக் குறைந்திருக்கிறது. இதனால் மேற்குலகில் ஏற்பட இருக்கும் அல்லது ஏற்படத் துவங்கி இருக்கும் புவியியல் மற்றும் சமுதாய ரீதியிலான மாற்றங்களின் தாக்கம் அச்சமூட்டும் வகையில் அமைந்திருக்கருக்கின்றது. எனவே அது குறித்து நாம் அனைவரும் அறிந்து கொள்வது அவசியமே.

எந்த நூற்றாண்டிலும் இல்லாத வகையில் இந்த நூற்றாண்டில் பெரும் மாற்றத்திற்குத் தன்னைத் தயாராக்கிக் கொண்டிருக்கின்றது மேற்கத்திய உலகம்.

அமெரிக்காவைத் தவிர்த்து அனைத்து மேற்கத்திய நாடுகளிலும் மக்கள் தொகை மிக வேகமாகக் குறைந்து வருகிறது. ஒவ்வொரு ஆயிரம் பேருக்கும் எத்தனை குழந்தைகள் பிறக்கிறார்கள் என்பதனை வைத்து இதனைத் தீர்மானிக்கையில், கிரீஸின் மக்கள் தொகைப் பெருக்கம் 1.3, இத்தாலி 1.1, ஸ்பெயின் 1.1, அமெரிக்கா 2.1, ரஷ்யா 1.14 என்று கண்டறிந்திருக்கிறார்கள்.

இன்றைய கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பலவற்றின் மக்கள் தொகையில் பெரும்பாலானவர்கள் முதியவர்களே. 2050 ஆம் வருடத்திற்குள் 60 சதவீத இத்தாலியர்களுக்கு பெற்றோரைத் தவிர வேறு உறவினர்களே இருக்க மாட்டார்கள் என்பது ஆச்சரியச் செய்தி. இன்னும் முப்பதாண்டுகளில் சகோதர, சகோதரி, மாமன், அத்தை, சிற்றப்பன் என்ற உறவுகள் அனைத்தும் இழந்திருப்பார்கள் இத்தாலியர்கள். அந்த அளவிற்கு இத்தாலிய மக்கள் தொகை படுபாதாளத்திற்குச் சென்று கொண்டிருக்கிறது.

மற்ற ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் இதே நிலைமைதான். ரஷ்யாவின் நிலைதான் இதில் மிகவும் மோசமானது. லெனின் தள்ளிவிட்டுச் சென்ற மார்க்ஸியப் படுகுழியிலிருந்து இன்னும் ரஷ்யர்களால் மீளமுடியவில்லை. வறுமையும், விபச்சாரமும், போதை மருந்துக் கலாச்சாரமும் இன்றைய ரஷ்யாவைச் சீரழித்துக் கொண்டிருக்கிறது. ரஷ்யாவின் 140 மில்லியன் மக்கள் தொகை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. உலகில் மிக அதிக கருக்கலைப்பு செய்து கொள்பவர்கள் ரஷ்யப் பெண்களே. நாட்டின் எல்லைகளைக் காக்கப் போதுமான ராணுவ வீரர்கள் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறது ரஷ்யா. அதன் 83 குடியரசுகளில், 61-இல் இதே நிலைமைதான். அதற்கு மாறாக 12 இஸ்லாமியக் குடியரசுகளில் மக்கள் பெருக்கம் க்ட்டுக்கடங்காமல் பெருகி வருவது கவனிக்கத்தக்கது.

கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களில் வசிக்கும் ஜெர்மனிய மக்கள் தொகை நம்பவே முடியாத அளவிற்குச் சரிந்து விட்டது. உதாரணமாக, சில ஜெர்மானிய சிறு கிராமங்களில் வடிகால் (sewer system) இயக்கம் முற்றிலும் இயங்குவது நின்று போகும் அளவிற்கு நிலைமை மோசமாகி இருக்கிறது. காரணம், பூமிக்கடியில் அமைக்கப்பட்டிருக்கும் பெரிய பைப்புகள் கொண்ட வடிகால் சரியாக செயல்படுவதற்கு ஒரு குறிப்பிட்ட அளவு மக்கள் அதனைத் தொடர்ந்து உபயோகிக்கவேண்டும். அதன் மூலம் தேவையான அழுத்தம் பெறப்பட்டு, கழிவு நீர் தங்கு தடையின்று வடிந்து செல்லும். உபயோகிப்பாளர்கனின்றி சீரழிந்து கிடக்கும் வடிகால்களை தொடர்ந்து இயக்கும் பொருட்டு, பெரிதான பைப்புகளை அகற்றி, சிறிய பைப்புகள் அமைக்கும் பணியினை ஜெர்மனிய அரசாங்கம் பல பில்லியன் டாலர்கள் செலவில் இன்றைக்குச் செய்து கொண்டிருக்கிறது என்பதிலிருந்தே நிலைமையின் தீவிரத்தை ஓரளவு உணரலாம்.

ஆசிய நாடுகள் பலவற்றிலும் மக்கள் பெருக்கம் குறைந்து வருகிறது. ஜப்பானின் பெரும்பான்மை மக்கள் முதியோர்களே. 1970-ஆம் ஆண்டிற்குப் பிறகு பிறந்த ஜப்பானியப் பெண்களில் 51 சதவீதத்தினர் திருமணம் செய்து கொள்ளாமல் தனித்து வாழ்வதால் குழந்தை பிறப்பு விகிதம் மிகவும் குறைந்திருக்கின்றது அங்கே. 2050-இல் சீனர்களில் பெரும்பான்மையோர் முதியோர்களே. இந்திய நடுத்தர வர்க்கமும் தன் பங்கிற்கு குழந்தை பெற்றுக் கொள்வதைத் தவிர்த்தே வருகிறது என்பது நாம் அறிந்ததே.

இன்றைய ஐரோப்பிய மக்கள் தொகைக்கு வயதாகிக் கொண்டிருக்கிறது. சோஷியல் செக்யூரிட்டி, பென்ஷன் மற்றும் முதியோர் பராமரிப்பு போன்றவை தொடர்ந்து நடைபெற வேண்டுமெனில், பிற நாடுகளிலிருந்து மக்களை குடியமர்த்தச் செய்வதே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன ஐரோப்பிய நாடுகள். ஒவ்வொரு வெற்றிகர நாட்டிற்கும் மனிதச் சக்தி அதிகம் தேவைப்படுகிறது. அதிக நுகர்வோர், அதிக உற்பத்தி. அதிக உற்பத்தி, அதிக வேலை வாய்ப்பு. அதிக வேலை வாய்ப்பு உறுதியான பொருளாதாரத்திற்கு அடிப்படை. எனவே மக்கள் தொகை குறைந்து வருவதால் கவலை கொள்ளும் நாடுகள், குடியேற்றங்களை அனுமதிக்கிறார்கள். இன்றைக்கு அவ்வாறு குடியேறுபவர்களில் பெரும்பாலோர் இஸ்லாமியர்களாகவே இருக்கிறார்கள்.

ஐரோப்பிய மக்கள் தொகை குறைந்து வரும் அதே சமயம், இஸ்லாமிய நாடுகளின் மக்கள் தொகை 15 முதல் 20 சதவீதம் வரை அதிகரித்திருக்கிறது. இன்னொரு விதமாகக் கூறுவதென்றால், ஒப்பீட்டளவில், 1970களில் இஸ்லாமிய நாடுகளை விடவும் இரண்டு மடங்கு அதிகமாக இருந்த மேற்கத்திய நாடுகளின் மக்கள் தொகை, 2000-ஆம் வருடம் அதே இஸ்லாமிய நாடுகளின் மக்கள் தொகைக்குச் சமமாகக் குறைந்து விட்டது. பதினைந்து வயதிற்கும் குறைவானவர்கள் ஜெர்மனி 14 சதமும், இங்கிலாந்து 18 சதமும், அமெரிக்கா 21 சதமும் இருக்கிறார்கள். அதே சமயம் சவூதி அரேபியாவில் 39 சதம், பாகிஸ்தானில் 40 சதம், ஏமனில் 47 சதம் பேர் இருக்கிறார்கள்.

மேற்கத்திய நாடுகள் பலவற்றிலும், அமெரிக்காவிலும் மிக வேகமாக வளர்ந்து வரும் மதம் இஸ்லாம் என்பது உண்மையே. கடந்த இருபது ஆண்டு காலங்களில், இந்நாடுகளுக்கு குடியேறும் இஸ்லாமிய மக்களின் சதவீதம் மிகவும் அதிகரித்திருக்கிறது. பொருளாதார மற்றும் அரசியல் காரணங்களுக்காக குடியேறுபவர்கள் இவர்களில் அதிகம் பேருண்டு. உலகில் இருக்கும் நாற்பத்தாறு இஸ்லாமிய நாடுகளில், மூன்றே மூன்று நாடுகளைத் தவிர பிற நாடுகளில் சர்வாதிகாரிகளால் நசுக்கப்படும் முஸ்லிம்கள், மேற்கத்திய நாடுகளில் காணப்படும் குடியேற்றச் சட்ட ஓட்டைகளைப் பயன்படுத்தி அங்கு குடியேறுவது தொடர்ந்து நடைபெறுகிறது.

இன்றைக்கு இருபது மில்லியன் முஸ்லிம்கள் ஐரோப்பிய நாடுகளில் வசிக்கிறார்கள். அரசாங்கக் கணக்கு அது. அன்-அ·பிசியலாக இன்னும் அதிகம் இருக்கலாம் அல்லது இல்லாமலும் போகலாம். இருபது மில்லியன் என்பது டேனிஷ், ஐரிஷ், பெல்ஜியன் மற்றும் எஸ்டோனிய ஜனத்தொகையின் மொத்த கூட்டுத் தொகைக்கும் ஈடானது.

டென்மார்க்கில் மட்டும் ஐந்து மில்லியன் முஸ்லிம்கள் வசிக்கின்றார்கள் என்கிறது ஒரு புள்ளி விவரம். ரோட்டர்டாம் நகரின் மொத்த ஜனத்தொகையில் 40 சதவீதம் முஸ்லிம்களே. ·பிரான்ஸ்சின் நகரப்பகுதிகளில் 30 சதவீதம் முஸ்லிம்கள். இன்னும் பல ·பிரான்சின் சிறு நகரங்களில் 45 சதவீதம் வரை முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். பெல்ஜியத்திலும், ஆம்ஸ்டர்டாமிலும், இங்கிலாந்திலும், மால்மோவிலும் சிறுவர்களுக்கு வைக்கப்படும் அதிகபட்சப் பெயர் “மொஹம்மது” என்பது குறித்து நாம் ஆச்சரிப்பட்டுக் கொள்ளலாம். ஐரோப்பிய ஜனத்தொகை முதிர்ச்சியடைந்து குறைந்து வரும் வேளையில், பெருகும் இளம் முஸ்லிம் மக்களின் ஜனத்தொகை பல மடங்கு அதிகரிது வருகிறது.

***

கிறிஸ்தவ Europe இஸ்லாமிய Eurobia ஆக மாறுவது வெகுதூரத்தில் இல்லை என்று நம்பத் தகுந்த சூழ்நிலை நிலவுகிறது அங்கே. எந்த ஐரோப்பிய நாடு முதலில் இஸ்லாமிய நாடாகும் என்பதுதான் கேள்விக்குறி. முதலில் அல்பேனியா. அடுத்ததாக ·ப்ரான்ஸ். பின்னர் இங்கிலாந்து.. அதனைத் தொடர்ந்து ஜெர்மனி…?

வரலாற்றின் பக்கங்களைப் புரட்டுகையில், இன்றைக்கு ஆயிரத்து இருநூறு வருடங்களுக்கு முன்பே இஸ்லாமிய மயமாவதிலிருந்து மயிரிழையில் ஐரோப்பா தப்பியிருப்பது தெரிய வரும்.

AD 732, அக்டோபரில் மூரிஷ் ஜெனரல் (Moorish) அப்த்-அல்-ரஹ்மானின் தலைமையிலான இஸ்லாமியப் படை, ஜிப்ரால்டரின் வடக்கே ஆயிரம் மைல்கள் வரை முன்னேறியது. மூர்க்கத்தனமாக போர் புரிந்த இஸ்லாமியப் படைகளை எதிர்த்து நிற்கத் திராணியற்ற ஐரோப்பிய கிறிஸ்தவப் படைகள் பெரும் தோல்விகளைச் சந்தித்தன. ஸ்பெயினையும், ·பிரான்ஸ்சின் தென்பகுதியையும் கைப்பற்றிய அப்த்-அல்-ரஹ்மானின் இஸ்லாமியப் படை, பாரிஸ் நகருக்கு ஏறக்குறைய இருநூறு மைல்கள் தொலைவில் இருக்கும் லோய்ர் (Loire) நதிக்கரையை வந்தடைந்தது. ·ப்ரான்சைச் சேர்ந்த சார்ல்ஸ் ·ப்ரான்கிஷ் (Charles Frankish) என்பவர் தலைமியிலான ஐரோப்பிய கிறிஸ்தவப் படையினர், இன்றைய ·ப்ரான்சின் பொய்ட்டியர்ஸ் (Poitiers) மற்றும் டூர்ஸ் (Tours) நகரங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் அப்த்-அல்-ரஹ்மானின் இஸ்லாமியப் படையினரை எதிர்த்து நின்றார்கள். ஒரு வார காலம் நிகழ்ந்த கடுமையான போரின் போது பிற ஐரோப்பிய கிறிஸ்தவப் படைகளைப் போலப் பின்வாங்கி ஓடாமல் ·ப்ரான்கிஷின் படையினர் எதிர்த்து நின்றார்கள். ஜெனரல் அப்த்-அல்-ரஹ்மான் கொல்லப்பட, இஸ்லாமியப்படை பின் வாங்கிச் சிதறியோடியது.

பொய்ட்டியர்ஸ் போர் ஐரோப்பாவின் திருப்பு முனை எனலாம். அப்த்-அல்-ரஹ்மானின் இஸ்லாமியப் படை இப்போரில் வென்றிருந்தால் ஐரோப்பாவின், ஏன் உலகின் தலையெழுத்தே வேறாக இருந்திருக்கக் கூடும். பாரிஸ் நகரைக் கைப்பற்றி அதற்கும் மேலாக ரைன் நதியையும் தாண்டிச் செல்லவே அப்த்-அல்-ரஹ்மான் முயன்றிருப்பார் என நம்பலாம்.

அவ்வாறு நிகழ்ந்திருந்தால், இன்றைய நடைமுறைகளைப் போலல்லாமல், ஆக்ஸ்·போர்டிலும் மற்ற ஐரோப்பிய பல்கலக்கழகங்களிலும் குர்-ஆன் மற்றும் ஹதீஸ்கள் குறித்த பாடங்களை மாணவர்கள் படித்துக் கொண்டிருப்பார்கள். கிறிஸ்தவ மதம் என்ற ஒன்று இல்லாமலேயே போயிருக்கலாம். ஐரோப்பாவிலிருந்து புலம் பெயர்ந்து வட அமெரிக்கா சென்றவர்கள் இஸ்லாமியர்களாக இருந்திருப்பார்கள். ஒசாமா பின்-லேடன், கலீ·பா பின்-லேடனாகி இருக்கலாம். 911 தவிர்கப்பட்டிருக்கக் கூடும்… இத்தியாதி. இத்தியாதி. எக்ஸெட்ரா. எக்ஸெட்ரா. இன்ன பிற.

எதிர் வருக் காலங்களில் இஸ்லாமியர்கள் அதிகமாகும் ஐரோப்பிய நாடுகளில் ஜனநாயகயம் தொட அனுமதிக்கப்படுமா அல்லது இஸ்லாமிய ஷரியா அடிப்படையிலான அரசாங்கம் அமையுமா என்பது யோசிக்கச் சுவராசியமான விஷயங்களே.

எனக்கென்னவோ இரண்டாவதுதான் நிகழும் என்று தோன்றுகிறது.

அதற்கு ஆதாரமாக இரண்டு உதாரணங்களை உங்கள் முன் வைக்கிறேன். முதலாவது இங்கிலாந்திலிருந்து. இரண்டாவது அமெரிக்காவிலிருந்து.

இங்கிலாந்தில் வசிக்கும் முப்பத்து ஒன்பது வயதான இஸ்லாமியத் தலைவர் அன்ஜம் சவுதிரி. நியூயார்க் உலக வர்த்தக மையத்தில் நிகழ்ந்த 911 தாக்குதலை “அற்புதம்” என்று வர்ணித்த அவர், அத்தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளை “ஹீரோக்கள்” என்றார். இலண்டனில் நடந்த ட்யூப் ரயில் தாக்குதலை ஒரு பெரும் வெற்றியாக அறிவித்ததுடன், அத்தாக்குதல் குறித்து இங்கிலாந்து போலிசாரும், அரசாங்கமும் மேற்கொண்ட விசாரணைகளுக்கு முஸ்லிம்கள் ஒத்துழைக்கக் கூடாது என்று முட்டுக்கட்டை போட்டவர்.

அன்னார் அன்ஜம் சவுதிரியின் இலட்சியம், இங்கிலாந்தில் இஸ்லாமிய ஷரியா ஆட்சி கொண்டு வருவது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், திரு. சவுதிரியும் அவரது மனைவியும் இங்கிலாந்து அரசாங்கத்தின் மாதாந்திர உதவித் தொகை பெறுபவர்கள் (கணிசமான தொகை என்பதனை விளக்க வேண்டியதில்லை!). அதாவது, மேற்கில் புலம் பெயர்ந்த பெரும்பாலான, கல்வித் திறமைகள் அற்ற பெரும்பாலான முஸ்லிம்களைப் போலவே அவர் அலுவலகப் பணியோ அல்லது வேறு உபயோகமான பணியோ என்றும் எதுவும் செய்வதில்லை. அப்படியாகப்பட்ட அவரை BBC-யில் பேட்டி கண்டார்கள். பேட்டி எடுத்த மகானுபாவர் அவரிடம், “Why don’t you move to some other country where islamic sharia is already in place?” எனக் கேட்டு வைக்க, அதற்கு திருவாளர் சவுதிரி அளித்த பதில் உலகப் பிரசித்தமானது.

“Who says you own Britain? Britain belongs to Allah! The whole world belongs to Allah! If I go to the jungle, I’m not going to live like the animals. I’m going to propogate a superior way of life. Islam is the superior way of life!” என்று ஒரு போடு போட்டர். பேட்டி எடுத்தவர் அனேகமாக ஒரு இங்கிலாந்து “காட்டுவாசி”யாகத்தான் இருந்திருப்பார் என்று நம்புகிறேன். அவர் நிலை குறித்து நாம் பரிதாபப்படுவதைத் தவிர வேறு வழியில்லை.

இரண்டாவது உதாரணம் அமெரிக்க மிச்சிகன் மாநிலத்தில் வசிக்கும் சிறுவர் பள்ளி (கிண்டர் கார்டன்) ஆசிரியையான நஸ்ரா குரேஷியினுடையது. ஆங்கிலத்தில் அளிப்பதே சாலப் பொருத்தம் ஆதலால் அதனை மொழி பெயர்க்க முற்படவில்லை. Lansing State Journal பத்திரிகையிலிருந்து இது. இனி நஸ்ரா,

…….. Islam is the guide of humanity, for all times, until the day of judgement. It is forbidden in Islam to convert to any other religion. The penalty is death. There is no disagreement about it.

Islam is being embraced by people of other faiths all the times. They should know they can embrace Islam, but cannot get out. This rule is not made by Muslims; It is the supreme law of God.

Please do not ask us Muslims to pick some rules and disregard other rules. Muslims are supposed to embrace Islam in its totality….

அ·ப்கோர்ஸ் இது மெஜாரிடி முஸ்லிம்களின் பார்வையில்லை. குறைவான முஸ்லிம்களே இத்தகைய மனோபாவம் உடையவர்கள் என்று நம்புவோமாக.

Peace be upon you.

ஆதாரம் : “America Alone – The end of the world as we know it” by Mark Steyn.


narenthiranps@yahoo.com

Series Navigation

நரேந்திரன்

நரேந்திரன்