பிப்ரவரி 3, 2005 – இந்த வாரம் (ஏசி , காண்டலீசா ரைஸ், ஆயில்)

This entry is part [part not set] of 39 in the series 20050203_Issue

குண்டலகேசி


சூர்யா அவர்கள் தன் அடுத்த படத்திற்கு ஏசி என்று இரண்டு தமிழ் எழுத்துகளை தலைப்பாக வைத்திருக்கிறார் என்று குமுதம் சொல்லுகிறது. அவருக்கு நம் வாழ்த்துக்கள். கமலஹாசனுக்கு இந்த தைரியம் வராது என்றே நினைக்கிறேன். கலைஞர்களின் படைப்புகளில் ஓவராக தலையிடும் போக்கை மாற்றிக் கொள்ளவேண்டும். அல்லது குறைந்த பட்சம் தன் மகன் டாக்டர் அன்புமணியையும், தமிழ் காவலரின் தங்க பேரனையும் முதலில் தமிழர் பண்பாட்டை பிரதிபலிக்கும் வண்ணம் வெள்ளை வேட்டி அணிந்து பாராளுமன்றம் போக சொல்ல வேண்டும். நம் பார்க்கும் போட்டோக்களில் இருவரும் சீமைத்துரை போல மேற்கத்திய பாணி 3 பீச் சூட் அணிந்து இருப்பதேன் ? பிரதம மந்திரி, ஜனாதிபதி, வெளிநாட்டு சோனியா என்று அனைத்து தலைவர்களும் இந்திய பாரம்பரிய உடைகளை அணிகின்றனர். தமிழ்நாட்டிலும் அனைத்து தலைவர்களும் வேட்டியில் தான் காட்சி தருகின்றனர், (சில கமாண்டோக்கள் தவிர.) இவர்கள் வீட்டிலிருப்பவர்களே இந்திய பண்பாட்டை மதிக்காதபோது மற்றவர்களை மட்டும் ஏன் குறை சொல்ல வேண்டும் ?

காண்டலீசா ரைஸ் அமெரிக்காவின் secretary of state ஆக பதவியேற்றுள்ளார். ஆனால் அமெரிக்க செனட்டர்கள் லேசில் இவரை ஏற்றுக்கொள்ளவில்லை. இவர் எப்பொழுதோ பேசிய பேச்சுகளிலிருந்து நோண்டி நோண்டி கேள்வி கேட்டு துளைத்து எடுத்துவிட்டார்கள்- குறிப்பாக இராக் போருக்கு இவர்கள் வெவ்வேறு கட்டத்தில் சொல்லி வந்த காரணங்களை துருவி எடுத்தார்கள். ஒரு கட்டத்தில் என் நேர்மையை இழிவுபடுத்தாதீர்கள் என்று சூடாகவே சொன்னார். நம் இந்தியாவில் தான் இது போன்ற பிரச்சினைகள் இல்லை. எத்தனை முறை மாற்றி, மாற்றி பேசினாலும், ஜிம்னாஸ்ட் மாதிரி முன்பல்டி பின் பல்டி என்று மாற்றி மாற்றி அடித்தாலும் பொறுமையுடன் ஏற்றுக்கொள்ளும் மக்களை கொண்ட நாடு. எங்கள் ஆட்சியில் நாடு ஒளிரவில்லை, இனி என்று ஒளிராமல் இருக்க எங்களுக்கே ஓட்டு போடுங்கள் என்று கேட்டவர்களுக்கு கூட நாற்பதையும் அள்ளில் கொடுத்த தயாள மனம் படைத்தவர்கள்.

சென்ற வருட ஆச்கருக்கு முன்னனியில் இருப்பது இரண்டு படங்கள்- The aviator மற்றும் Million Dollar Baby. சென்ற வருடம் பெரிதும் பேசப்பட்டு வசூல் கொட்டிய farenheit 911 படத்தை மைகேல் மூர் டாக்குமெந்தரி போட்டியிலிருந்து விலக்கிக்கொண்டார் என்று கேள்வி. இந்த படம் போட்டியில் இடம் பெற்றிருந்தால் விவாதங்கள் அனல் பறந்திருக்கும்.

அமெரிக்க ரேடியோவில் கேட்டது- எதிர்காலத்தில் இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் மெகா பொருளாதாரங்களை கட்டுபடுத்தும் சக்தி ஆயிலுக்கே உண்டு.அந்த ஆயிலை கட்டுபடுத்தும் ரிமோட் கன்ற்றோல் எவர் கையில் உள்ளதோ அவனே எதிர்காலத்தில் வல்லரசாக இருக்க முடியும். கலிபோர்னியா அளவுள்ள இராக்கிற்கு சென்று இவ்வளவு நாளாகியும் அங்கு நிலைமையை கட்டுக்கு கொண்டு வர முடியவில்லை. வெறும் மூவாயிரம் பிரிட்டிஷ் அபீஸர்கள் எப்படி அவ்வளவு பெரிய இந்தியாவை ஆண்டார்கள் ? இந்த கேள்விக்கு திண்ணை வாசகர்களின் பதில் என்ன ?

(பி.கு. – இந்திய சிப்பாய் கலகத்தின்போது இந்தியாவில் இருந்த ‘இந்திய ‘ சிப்பாய் படை உலகெங்கிலும் உள்ள பிரிட்டிஷ் படைகளைக் காட்டிலும் மூன்று மடங்கு பெரியதாக இருந்தது.)

http://www.sarkaritel.com/news_and_features/aug2004/03minhfw_ima.htm


kundalakesi_s@yahoo.com

Series Navigation

குண்டலகேசி

குண்டலகேசி