தீருமா சென்னையின் தாகம் ?

This entry is part [part not set] of 50 in the series 20040715_Issue

கோ. ஜோதி


சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் இந்தியாவின் நான்காவது பெரு நகரமாகிய சென்னை நகரம் குடிக்க நீரின்றி தத்தளித்துக்கொண்டிருக்கிறது. சென்னை நகர பெண்களும் ஆண்களும் ஆங்காங்கே காலிக் குடங்களுடன் காத்திருக்கின்றனர். சென்னை நகர சாலைகளில் அப்பாவி மக்கள் தண்ணீர் லாரிகளால் உயிரிழக்கின்றனர். பல தொற்று நோயும், காலராவும் பரவும் அபாயம். ஆங்காங்கே புற்றீசல்போல் கிளம்பும் தண்ணீர் கம்பெனிகள். இவைகளுக்கெல்லாம் எந்தக் கட்டுப்பாடோ அல்லது தர நிர்ணயமோ இல்லை. ஏன் இந்த அவலம் ? எதிர்காலங்களில் இதே நிலை நீடித்தால் மக்கள் சென்னை நகரைவிட்டு வெளியேற வேண்டிய அபாயமான சூழ்நிலை ஏற்படலாம்.

இன்று வரை சென்னை நகரின் குடிநீர் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு நிரந்தரத் திட்டங்கள் எதுவுமே செயலாக்கப்பட வில்லை. முதன்முதலாக சென்னை நகரின் குடிநீர் விநியோகத்திற்காக 1782ஆம் ஆண்டு தனியாரிடமிருந்து 7லிருந்து 9 மீட்டர் ஆழழுள்ள 10 கிணறுகளை அரசாங்கம் விலைகொடுத்து வாங்கியது. இதன் மூலம் 3 கி.மீட்டர் சுற்றளவிற்கு தண்ணீர் விநியோகம் நடைபெற்றது. மொத்தம் 10 கிணறுகளில், 7 கிணறுகள் மட்டும் நன்கு பயன்பட்டதால் நாளடைவில் இப்பகுதியே ‘ஏழு கிணறு ‘ பகுதி என்றழைக்கப்பட்டது. இதன் பிறகு பெருகிவத்ம் மக்கள் தொகையை கணக்கில்கொண்ட் தாமரைப்பாக்கம், சோழாவரம், ரெட் ?ில்ஸ் ம்தலிய ஏரி நீரை உபயோகப்படுத்த முடிவு செய்யப்பட்டு, 1872ஆம் ஆண்டு திட்டம் தொடங்கப்பட்டது. இதற்காக 1914 – 18ஆம் ஆண்டில் கீழ்ப்பாக்கம் பகுதியில் நீரைச் சுத்தப்படுத்தும் நிலையம் அமைக்கப்பட்டது. 1944ல் கட்டி முடிக்கப்பட்ட பூண்டி அணைக்கட்டுத் திட்டம் இதனோடு சேர்க்கப்பட்டது. 1963ஆம் ஆண்ய்களில் ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம் மேற்கொண்ட ஆய்வுகளின்படி ஆரணியார் – கொசத்தலையார் பகுதிகளில் நல்ல நிலத்தடி நீர்வளம் உள்ளது கண்டறியப்பட்ட, அந்த நீரைப் பயன்படுத்த முடியும் என்ற முடிவு எடுக்கப்பட்டது. இத் திட்டத்தின்படி 1965முதல் 1987 வரை மிஞ்சூர், தாமரைப்பாக்கம், பஞ்சுமி கணிகைப்பேர் மற்றும் பூண்டி முதலிய பகுதிகளில் 76 கிணறுகள் தோண்டப்பட்டு அதன் மூலம் 148 மிலியன் லிய்டர் நீர் தினந்தோறும் கிடைத்தது.

1966ஆம் ஆண்டில் காவேரி ஆற்றிலிருந்து திருச்சி மாவட்டம் குளித்தலை வட்டம் மாயனூர் என்ற இடத்திலிருந்து திறந்தவெளிக் கால்வாய் மூலமாக (சுமார் 451 கி.மீ. தூரம்) நீரை சென்னைக்குக் கொண்டு வரலாம் என்ற திட்டம் ஆலோசிக்கப்பட்டு வறண்ட மாவட்டங்களின் வழியே திறந்த வெளிக்கால்வாய் மூலம் நீரைக்கொண்டு வருவது சாத்தியமற்றது என்ற முடிவு செய்யப்பட்டு அத்திட்டம் கைவிடப்பட்டது. 1967ஆம் ஆண்டில் தினந்தோறும் 180 மில்லியன் லிட்டர் நீர் கிடைப்பதற்காக வடஆற்காடு மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரியிலிருந்து குழாய் அமைத்து சென்னை நீர்கொண்டு வரும் திட்டம் தீட்டப்பட்டது. 220 கி.மீ. தூரத்திற்கு குழாய்கள் அமைத்து நீரைக் கொண்டு வர 23 கோடி ரூபாயில் திட்டம் தீட்டப்பட்டது. ஒப்பந்ததாரர்களின் வழக்குகளினால் இத்திட்டம் கைவிடப்பட்டதாக அரசு தரப்பில் கூறப்பட்டது. ஆனால் இத்திட்டத்திற்காக தயாரிக்கப்பய்ட குழாய்கள் தரமற்றதாக இருந்தது என்றும் நம்படுகிறது. தற்போது இக்குழாய்கள் அனைத்தும் திருக்கழுக்குன்றம் அருகே குவித்து வைக்கப்பட்டுள்ளன. பாலாறு பகுதிகளில் பழைய சீவரம், ஆயப்பாக்கம் முதலிய இடங்களில் ஆற்றில் கிணறுகள் அமைக்கப்பட்டு ஆலந்தூர், பல்லாவரம், தாம்பரம், மறைமலைநகர், ஃபோர்டு மோட்டார் தொழிற்சாலை, தாம்பரத்தில் உள்ள சென்னை ஏற்றுமதி வளாகம் (விணிறிஞீ) முதலிய பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் நடைபெறுகிறது. 1978ல் நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத்திலிருந்து எடுக்கப்படும் தண்ணீரை சென்னை நகருக்கு பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற திட்டம் ஆலோசிக்கப்பட்டது. ஆனால் தங்களுடைய விஸ்தரிப்பிற்காக தங்களுக்கு தேவை என்று நெய்வேலி சுரங்க நிர்வாகம் கூறிவிட்டது.

ஈரோடு அருகில் உள்ள பள்ளிபாளையம், தர்மபுரி மாவய்டத்திலுள்ள ஹோகேனக்கல் ஆகிய பகுதிகளிலிருந்து திறந்த வெளிக்கால்வாய்கள் மூலம் காவிரி நீரைக் கொண்டு வரலாம் என பல திறமைவாய்ந்த பொறியாளர்களும், வல்லுநர்களும் திட்டங்களை வகுத்தனர். இவைகள் செயல்வடிவம் பெறவில்லை.

1976ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் நாள் பாரதப் பிரதமர் முன்னிலையில் தமிழக முதல்வர், ஆந்திர முதல்வர்கள் இடையே ஒரு ஒப்பந்தம் உருவானது. இதன்படி ஆந்திராவின் கிருஷ்ணா நதியிலிருந்து 5 டி.எம்.சி. தண்ணீரை குடிநீர் உபயோகத்திற்காக சென்னைக்குத் தருவது என்று முடிவு செய்யப்பட்டது. இதன்படி சென்னை நகரம் முழுவதும் குழாய்கள் பதிக்கப்பட்டு, தண்ணீரை சேமிக்க தொட்டிகளும் (ஷிuனீஜீ) பெரும் பொருள் செலவில் கட்டி முடிக்கப்பய்டன. ஆனால் இத்திட்டத்தின் மூலமாக ஒரு செட்ட்டு நீரைக்கூட நம்மால் பெறமுடியவில்லை. இன்றளவும் இந்தத் திட்டம் பற்றிய முழு விவரங்களும் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்படவில்லை. தற்போது மறுபடியும் ரூ.750 கோடி செலவில் ‘புதிய வீராணம் ‘ என்று திட்டம் தொடங்கப்பட்டு, சென்னை வரை குழாய்கள் பதிக்கப்பட்டுள்ள நிலையில் வீராணம் பகுதி மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

2

வீராணம் ஏரி என்பது காவேரி ஆற்றின் கடைமடைப் பகுதியிலுள்ள ஏரியாகும். கடந்த 10 வருடங்களுக்கு மேலாக வீராணம் ஏரி நிரம்பியது இல்லை. இதனால் அப்பகுதி விவசாயிகள் ஒரு போகம் கூட பயிர் செய்ய இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இத்திட்டம் தோல்வியைத்தான் தழுவும். இதை மறைப்பதற்காக கடலூர் பகுதிகளில் 1000 அடிக்குமேல் ஆழ்குழாய் கிணறுகளை எடுத்து அதன்மூலம் சென்னைக்குத் தண்ணீர் அனுப்பத் திட்டமிட்டுள்ளனர். இதனால் அப்பகுதிகளில் கடல்நீர் உள்புகுந்து நிலத்தடி நீர் முற்றிலும் வீணாவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு. இவ்வாறு வட சென்னைப் பகுதியிலுள்ள மீஞ்சூர் போன்ற இடங்களில் நிலத்தடி நீரை அளவிற்கு அதிகமாக உறிஞ்சியதால் 10 வருடங்களுக்கு முன்பே இப்பகுதிகள் பாதிக்கப்பட்டன.

இந்த ஆண்டின் துவக்கத்தில் தமிழகத்திற்கு பெரிய ஏரிகளுள் ஒன்றான மதுராந்தகம் ஏரியிலிருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு வருவதற்கான அறிகுறியும் தென்பட்டது. அப்பகுதி மக்கள் இணைந்து மனித சங்கிலி போராட்டத்தை நடத்தினர். சென்னைக்கு அருகிலுள்ள செங்கல்பட்டு கொளவாய் ஏரியிலிருந்து ஒருபகுதி நீரை சென்னைக்கு எடுத்துச்செல்ல பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது.

இவ்வளவு திட்டங்கள் தீட்டப்பட்டும், கோடிக்கணக்கான மக்கள் வரிப்பணம் செலவழிக்கப்பட்டும் இன்றளவும் சென்னையின் குடிநீர்ப் பிரச்சனை கேள்விக்குறியாகவே உள்ளது. சென்னையின் குடிநீர்ப் பிரச்சனையைத் தீர்க்க தற்போது கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் பேசப்பட்டு வருகிறது. இதற்கான செலவீனங்கள் மிகவும் அதிகமானது. இது நடைமுறை சாத்தியம் இல்லை.

2003ஆம் ஆண்டின் இறுதியிலேயே, சென்னையின் குடிநீர்ப் பஞ்சம் துவங்கிவிட்டது. இப்பிரச்சனையைச் சமாளிப்பதற்காக சென்னையைச் சுற்றியுள்ள கிராமங்களில் விவசாயத்திற்கு பயன்பட்டு வரும் கிணறுகள் மற்றும் ஆழ்குழாய் கிணறுகளின் நீரை சென்னை நகர குடிநீர் வாரியம் கொள் முதல் செய்யத் துவங்கியது. இதற்காக செங்கல்பட்டு, மதுராந்தகம், திருப்போரூர், பூந்தமல்லி, படப்பை, திருவள்ளூர், கிழக்குத் தாம்பரம், மீஞ்சூர், பஞ்சட்டி, தாமரைப்பாக்கம் ஆகிய பகுதிகளிலுள்ள சுமார் 100 கிராமங்களுக்கு மேல் தேர்வு செய்யப்பட்டு, 12000, 20000 கொள்ளளவு உள்ள டேங்கர் லாரிகள் மூலம் தினந்தோந்ம் 7000 நடைக்குமேல் தண்ணீர் விநியோகம் நடைபெற்று வந்தது. இதைத் தவிர தனியார் டேங்கர் லாரிகளும் நாளன்றுக்கு சுமார் 5000 நடைகள் தண்ணீரை விநியோகம் செய்து வருகின்றன. இதற்காக தினந்தோறும் அரசு 1.5 கோடி ரூபாய்கள் செலவழிப்பதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதால் இக்கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருகிறது. இக்கிராமங்களில் விவசாயம் பெயரளவிற்கே நடந்துவருகிறது. பெரும் ஆழ்குழாய்க் கிணறுகள் மூலம் சென்னைப் பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் அளிக்கும் கிராமங்களில் தங்கள் தேவைக்குக் கூட குடிநீர் இல்லை. பல கிராமங்களில் தங்கள் கிராமங்களில் குடிநீர் எடுப்பதைக் கண்டித்து போராட்டங்களைத் துவக்கியுள்ளனர். இப்பகுதிகளில் அடிக்கடி விபத்துக்கள் நடைபெற்று வருகின்றன.

சென்னையின் குடிநீர்ப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு அரசு நிரந்தர வழிகளைப் பற்றி ஆலோசிக்கவே இல்லை. சென்னையின் குடிநீர்ப் பிரச்சனையை நிரத்தரமாகத் தீர்ப்பதற்கு அரசு உடனடியாக முன்வரவேண்டும். * செனனை நகரைச் சுற்றிலும் 25 கி.மீ. சுற்றளவிற்கு ஏராளமான மிகப்பெரிய ஏரிகள் உள்ளன. அவைகள் நல்ல நிலையிலும் உள்ளன. நகர எல்லைகள் விரிவடைந்துவிட்டதால் இந்த ஏரிகள் விவசாயத்திற்குப் பயன்படுவதில்லை. இந்த ஏரிகளைக் கணக்கெடுத்து அவைகளைத் தூரெடுத்து, மழைக்காலங்களில் நீரைத் தேக்கி வைக்கலாம். இந்த நீரை சுத்திகரித்து ஏரிக்கு அருகில் உள்ள நகரப் பகுதிகளுக்கு விநியோகம் செய்யலாம்.

* சென்னை நகரைச் சுற்றிலும் சுமார் 100 கோயில் குளங்கள் உள்ளன. இவற்றை நல்ல முறையில் சீர் செய்து பருவகாலங்களில் நீரை நீரப்பலாம். இதனால் அப்பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயருவதற்கு வாய்ப்புள்ளது. இந்த நீரை மக்கள் மற்ற உபயோகங்களுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

* தனிநபர் குடிநீர் உபயோகத்தை மட்டும் உரிய முறையில் கணக்கெடுத்து குடிநீர் உபயோகம், மற்றவைகளுக்கான நீர் உபயோகம் (குளியல், கழிவறை உபயோகம், தோட்டம் போன்றவை) இவைகளைத் தனியாகப் பிரித்து விநியோகம் செய்யலாம்.

* சென்னை நகரில் ஓரிரு இடங்களிலிருந்து நீர் விநியோகம் என்பதை மாற்றி, பல்வேறு பகுதிகளிலிருந்து நீரை விநியோகிக்கலாம்.

* சென்னை அன்றாடம் பயன்படுத்தப்படும் கழிவு நீர் அனைத்தும், ஆறுகளிலும் அந்தந்த பகுதியில் வெளியேற்றப்படுகின்றன. இந்தக் கழிவுநீரை அந்தந்த பகுதிகளில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து மக்களுக்கே மற்ற உபயோகங்களுக்காக விநியோகிக்கலாம். தற்போது சென்னையில் நான்கு இடங்களில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளன. ஆனால் அவைகள் செயல்படுவதில்லை. அவைகள் பெயரளவிற்கே உள்ளன.

சென்னை நகரின் குடிநீர்ப் பிரச்சனை நிரந்தரமாகத் தீர்க்கப்படவேண்டும். தற்காலிகமான தீர்வுகள் இதற்குப் பயன்தராது என்பதை ஆட்சியாளர்கள் உணரவேண்டும். செயலாக்க முடியாத திட்டங்களை தீட்டி அதன் மூலம் ஆதாயங்களைத் தேடிகொள்ளும் போக்கினைக் கைவிடவேண்டும்.

..

Series Navigation

கோ. ஜோதி, ஆராய்ச்சியாளர், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம்.

கோ. ஜோதி, ஆராய்ச்சியாளர், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம்.