இந்துத்துவம் = சர்வ மத சமத்துவ சம்மதத்துவம்

This entry is part [part not set] of 72 in the series 20040415_Issue

ஜோதிர்லதா கிரிஜா


அன்மைக் காலத்தில் அடிபட்டுவரும் இந்துத்துவம் என்னும் சொல்லைப் போல், வேறு எந்தச் சொல்லும் எக்காலத்திலும் இந்த அளவுக்கு அடி பட்ட தில்லை என்றே தோன்றுகிறது. இக்கட்டுரையின் தலைப்பில் உள்ள ‘சர்வ மத சமத்துவ சம்மதத்துவம் ‘ என்னும் சொற்றொடர் அனைத்திந்திய மாநிலங்களில் உள்ள மக்கள் யாவராலும் எளிதில் புரிந்துகொள்ளப்

படக்கூடிய வடமொழிச்சொல் என்பது நமக்குத் தான் தெரியுமே! இதைத் தமிழ் மக்கள் மிக அழகாய் ‘எம்மதமும் சம்மதமே ‘ என்று சொல்லுக்ிறார்கள். இந்துத்துவம் என்பதன் உள்ளார்ந்த மெய்ப்பொருளை இதைவிடவும் எளிமையாகவும், பொருத்தமாகவும், சுருக்கமாகவும், கருத்துச் செறிவுடனும் சொல்லவும் இயலுமோ ?

சில நாள் முன்பு இந்தியப் பிரதமர் வாஜ்பேயி அவர்களும் கூட

சுவாமி விவேகானந்தருடைய புரட்சிகரமான கருத்துகளின் அடிப்படையில் இந்துத்துவத்தின்

விளக்கத்தை வெளியிட்டபோது, மதவெறியர்களைத் தவிர ஏனைய மக்கள் அனைவரும்

அவரது கூற்றைப் புரிந்துகொண்டு வரவேற்றனர். ஆனால், விஸ்வ ஹிந்து பரிஷத்தைச்

சேர்ந்தவர்களுக்கும் இன்ன பிற அதீத மதப்பற்று (வெறி) உள்ளவர்களுக்கும் தான் அவர் வெளியிட்ட விவேகானந்தரின் கருத்துகளுடன் ஒப்புதலோ உடன்பாடோ அறவே இல்லை!

எல்லா மதங்களுமே மனிதர்களுக்கு, ‘நீங்கள் நல்லவர்களாக

இருங்கள் ‘ என்றுதான் அறிவுரை கூறுகின்றன. மதங்களை மகான்கள் நிறுவியதன் நோக்கமே மனிதர்களை நல்வழியில் செலுத்தி அவர்களைப் பக்குவப்படுத்தவேண்டும் என்பதுதான். எல்லா மதங்களுமே மனிதர்களுக்கு நற்போதனைகளையே கூறிவந்துள்ள நிலையில் பிற மதங்களைப் பழிப்பதும், தமது மதமே யாவற்றிலும் சிறந்தது என்று இறுமாப்புக்கொள்ளுவதும், பிற மதத்தினருக்கு ஆசை காட்டியோ, பணம் கொடுத்தோ-இந்த இரண்டுமே இல்லாமல் அவர்களைக் கட்டாயப்

படுத்தியோ – தமது மதத்துக்கு இழுப்பதும் மனிதர்களுக்கு இருக்கக்கூடாத மதவெறியின் வெளிப்பாடேயாகும். தமது மதத்தைச் சிறுகச் சிறுகப் பரப்பி, நாளடைவில் இந்த உலகம் முழுவதையும் தமது மதக்குடையின் கீழ்க் கொண்டுவந்துவிட ஒரு மதத்தலைவர் பேராசையுற்றால், அந்தத் தலைவரும் அவரது ஆர்வத்துக்கும் செயலுக்கும் துணை போகிறவர்களும் ‘அனைத்து உலகத்தையும் ஜெர்மனியின் ஆளுகையின் கீழ்க் கொண்டுவந்துவிட வேண்டும்; ஏனெனில், ஜெர்மானியர்களே இவ்வுலகை ஆளப் பிறந்தவர்கள் ‘ என்று பேராசைப்பட்ட ஹிட்லருக்கு ஒப்பானவர்களே!

இப்படிப்பட்ட வெறித்தனமான மதப்பற்று இந்துக்களிடம் கிடையாது என்பது வரலாற்று உண்மை. இந்துகளின் மிக முக்கியமான அடையாளங்களில் இந்த வெறி

யின்மை தலையாயது.

இரண்டாவதாக, பிற மதங்களை அவதூறாகப் பேசுவதோ, பழிப்பதோ,

கிண்டல் செய்வதோ இந்துக்களின் இரத்தத்தில் இல்லாதது.

மூன்றாவதாக, தமது மதமே உலகத்தில் அதிக aளவில் இருக்கவேண்டும்

என்னும் தகாத வெறியுணர்வும், பிற மதத்தவரை முடிகிற அளவுக்கேனும் இந்துக்களாக மதமாற்றம் செய்யவேண்டும் என்னும் சுயமதாபிமானமும் இவர்களுக்குக் கொஞ்சமும் கிடையாது. ‘இந்துக்கள் மட்டுமே புண்ணியாத்மாக்கள்; மற்ற மதத்தினர் அனைவரும் பாவிகள் ‘ என்னும் இறுமாப்பு நிறைந்த

செருக்கும் இவர்களுக்குக் கிடையாது. அதனால்தான், தெரு முச்சந்திகளிலும், நாற்சந்திகளிலும், பேருந்து நிறுத்தங்களிலும், இரயில் பெட்டிகளிலும், திரைப்படக்கொட்டகை வாயில்களிலும், இன்னபிற

பெரிய அளவில் மக்கள் கூடுகின்ற பொது இடங்களிலும் மதப்பிரசாரத் துண்டுக் காகிதங்களும், கையடக்க மத நூல்களுமாய் நின்றுகொண்டு இவர்கள் அவற்றைப் பிற மதத்தவருக்கு விநியோகம்

2

செய்வதில்லை.

நான்காவதாக, மற்ற மதத்தவர் தங்களைப் பாவிகளென்று குறிப்பிட்டுக் கூவி இழிவுசெய்தாலும், ‘நீங்கள் யார் எங்களைப் பாவிகள் என்று விமர்சிப்பதற்கு ? ‘ என்னும்

ஆத்திரக் கேள்வியுடன் அவர்களை இந்துக்கள் சண்டைக்கோ வாதுக்கோ இழுப்பதும்

கிடையாது! மாறாக, அவர்கள் கொடுக்கும் துண்டுப் பிரசுரங்களை வாங்கிக்கொள்ளவும்

செய்வார்கள். (ஆனால், பிற மதத்தவரைப் பாவிகள் என்று கூசாது குறிப்பிடும் இவர்களிடம்

இப்படி ஒரு பண்பாட்டை எதிர்பார்க்கவே முடியாது.)

ஐந்தாவதாக, இந்துக்கள் மற்ற மதங்களின் தொழுகைத் தலங்களின் புனிதத்தை இகழ்ந்ததாகவோ, அவற்றை இடித்துத் தரைமட்டமாக்கியதாகவோ, அங்கிருந்த தொழுகைப் பொருள்களையோ, வழிபாட்டுச் சிலைகளையோ தாங்கள் மிதித்து ஏறும் வாசல்படிகளில் புதைத்ததாகவோ வரலாறு கிடையாது. இத்தகு இழிசெயல் இந்துக்களால் நினைத்துப் பார்க்கப்படவும் முடியாத ஒன்றாகும். இத்தகைய மத நல்லிணக்கப் பரம்பரைப் பண்புகள் கொண்ட இந்துக்களிடையே பிடுங்கி எறியப்பட வேண்டிய புல்லுருவிகளாய்ச் சில மதத்தீவிரவாதிகள் தோன்றிச் சில நாள்களுக்கு முன்னர் பாப்ரி மஸ்ஜிதை இடித்துத் தகர்த்தது மாபெரும் துரதிருஷ்டமே. இந்துக்களை முதலாளிகளாகவும், ஆசிரியர்களாகவும் கொண்ட பத்திரிகைகள் இந்த இழி செயலைக் கண்டித்துத் தலையங்கமே எழுதி, ‘பாப்ரி மஸ்ஜிதை இந்துக்கள் இடித்ததைக் கண்டிப்பதே உண்மையான இந்துத்துவத்தின் அடையாளம் ‘ என்பதை மெய்ப்பித்தன.

ஆறாவதாக, இதுகாறும் இவ்வுலகில் தோன்றியுள்ள அனைத்து மதங்களிலும் சனாதன தருமம் என்று அறியப்பட்ட இந்துமதமே மிக மூத்த ஆதிமதமுமாகும். இந்து மதமும் கடவுளுக்கு உருவம் கிடையாது என்கிறது. கடவுள் ஒருவரே என்கிறது. அவரை ‘அரூபன் ‘ – அதாவது உருவம் இல்லாதவன் – என்கிறது. ஆனால் அதே நேரத்தில், உருவமே இல்லாத ஒன்றின் இருப்பின் மீது நம்பிக்கை கொள்ளுவதும், அதன் மீது ஒருமிப்புக்கொள்ளுவதும் மன முதிர்ச்சியற்ற கற்கால மனிதர்களுக்கு இயலாதிருந்ததால், மன ஒன்றிப்புக் கருதி அவரவர் தத்தமக்கு ஏற்ற வகையில் எந்த உருவத்தின் மீதும் – அதைக் கடவுளாகப் பாவித்து – கவனம் கொள்ளலாம் எனும் சலுகையை இத் தருமம் அவர்களுக்கு அளித்தது. ஏராளமான கடவுளர்கள் இந்துமத வழிபாட்டில் மலிந்துவிட்டது கற்கால மனிதர்களுக்கு அளிக்கப்பட்ட இச் சலுகையால்தான்!

கல்லாத மக்களுக்கு நீதிகளைப் போதித்துப் புரியவைக்கும் நோக்கத்தில்

தான் புராண, இதிகாசக் கதைகளும் இயற்றப்பட்டன. இவற்றின் கதை மாந்தர்களையும்

மக்கள் கடவுளர் ஆக்கிவிட்டனர்! இந்த நிலை இங்கிலாந்து நாட்டு அறிஞர் பெர்னார்ட் ஷா அவர்களால் போற்றப் பட்டுள்ளது! ‘இந்து மதத்தினர் இத்தனை கடவுள்களையா வழி

படுகிறார்கள் என்னும் பிரமிப்பு முதலில் ஏற்பட்டாலும், எந்தப் பிற மதத்தவர் ‘இதுவே எங்கள் கடவுள் ‘ என்று கூறி எதைக் காட்டினாலும், இந்துக்கள் அதை மதித்து ஏற்பார்கள் ‘

என்று பாராட்டியுள்ளார்!

இத்தகைய நிலைப்பாடு உடையவர்கள் ‘இந்தியா முழுவதுமே ராமஜென்ம பூமிதான் ‘ என்னும் உண்மையான இந்துத்துவக் கோட்பாட்டைப் புறக்கணித்து

இந்துக் கோயில் இருந்ததாய்ச் சொல்லப்படும் பாப்ரி மஸ்ஜித் இருந்த இடத்தில்தான்

ராமருக்குக் கோயில் கட்டுவோம் என்று பிடிவாதம் பிடிப்பது எத்தகைய அசட்டுத்தனம்!

இந்துத்துவத்தின் ‘இலட்சணம் ‘ இதுதானா ? இந்துக்களிடையே இவ்வாறு என்றுமில்லாத

வாறு மதத்தீவிரவாதிகள் முளைக்கக் காரணம் என்னவென்று யோசித்தால், தவறு முழுக்க,

முழுக்க இந்துக்களுடையதன்று என்பது புலப்படும். ஓர் இஸ்லாமியப் பெரியவர் முன்னொரு

சமயம் எனக்கு எழுதிய கடிதம் ஒன்றில் முஸ்லிம்களுக்கு, அவர்கள் பல தலைமுறைகளாய் வாழ்கிற

3

நாடாகவே ஒரு நாடு இருந்தாலும், அது தங்கள் தாய் நாடு என்கிற தேசபக்தி இருக்கத்

தேவையில்லை என்றும், இஸ்லாமிய நாடு என்பதாய் அறிவிக்கப்பட்ட நாடாக இருந்தால் மட்டுமே அது தங்களால் தங்கள் தாய்நாடு என்று கருதப்படும் என்றும், அப்படித்தான் திருக்குரானிலேயே சொல்லப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தார். இவ்வாறு அந்த நன்பர் எழுதியதை நம்பமுடியவில்லை. தவறான புரிதல் என்றே நினைக்கத் தோன்றுகிறது.இவரது கருத்துச் சரியானதுதானா என்பதைத் திருக்குரானை நன்கு அறிந்த இஸ்லாமிய அன்பர்கள்தான் தெளிவுபடுத்தவேண்டும். இந்துக்களில் சிலர் தங்கள் மத நூல்கள் சொல்லாதவற்றை யெல்லாம் அவை சொல்லுவதாய்ச் சொல்லிக்கொண்டு அலைவதைப் போல், இவரும் திருக்குரானைத் தப்பாய்ப் புரிந்துகொண்டுள்ள இஸ்லாமியச் சகோதரருள் ஒருவரோ என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.

இதனை இங்கு நினைவு கூர்ந்தமைக்குக் காரணம் முஸ்லிம்கள் பக்கம்

தவறே இல்லை என்று சொல்லிவிடுவதற்கில்லை என்பதைச் சுட்டிக்காட்டத்தான். தலை

முறை தலைமுறையாகத் தாங்கள் வாழ்கின்ற நாடாகவே இருப்பினும், இஸ்லாமிய நாடு

என்று அறிவிக்கப்படாத அந்த நாடு தங்களது தாய்நாடாகாது என்னும் கருத்து உள்ளத்தில்

உறைந்தால், பிற முஸ்லிம் நாடுகளுக்குத்தானே விசுவாசமாக இருக்கத் தோன்றும் ? இந்தத் தப்பான மனப்பான்மையின் விளைவுதானே இங்குள்ள முஸ்லிம்களில் சிலர் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் வெற்றி பெறும்போதெல்லாம் பட்டாசு கொளுத்திக் கொண்டாடுவது!

இவ்வாறு சொல்லும் போது ஏதோ இந்துக்கள் அனைவரும் ஒட்டுமொத்த

மாய் நாட்டுப்பற்று மிக்கவர்கள் என்று சான்றிதழ் வழங்குவதாக யாரும் எண்ணிவிட வேண்டாம். அண்மையில் மக்களவையில் நடந்த குண்டுவெடிப்பில் முஸ்லிம் தீவிரவாத அமைப்புக்கு உதவியவர்களில் ஓர் இந்துவும் இருந்ததை நாம் மறக்கவோ புறக்கணிக்கவோ இல்லை! ஆகமொத்தம் நாட்டுப் பற்று இல்லாதவர்கள் எல்லா மத, இனத்தவரிலும் உள்ளனர் என்பதே கசப்பான உண்மை. ஆனால் –

‘இந்துக்கள் பெரும்பான்மையினராக உள்ள இந்தியா நமது தாய்நாடாக

முடியாது ‘ என்னும் தவறான எண்ணம் மனத்தில் பதிந்தால், பெரும்பான்மையான இனத்தின

ரிடையே இருக்கக்கூடிய தேசத்துரோகிகளைவிடவும் சிறுபான்மையினரிடையே தேசத்துரோகிகள் அதிக எண்ணிக்கையில் தோன்றும் அபாயம் உள்ளதென்பதை மறுக்க இயலாது.

‘பலநாள் முன்பு என்றாலும், இந்துக்களின் எத்தனையோ கோவில்களை

இடித்தோம்; கொள்ளையடித்தோம். பெரும்பான்மையினராக இருக்கும் இந்துக்கள் இந்த

அட்டூழியத்துக்காக நம்மைப் பழி வாங்கியிருந்திருக்க முடியும். ஆனால், இரத்தத்தில்

கலந்துள்ள அவர்ளாது இயல்பான சகிப்புத்தன்மையின் விளைவாக அவர்கள் நம்மைப் பழி

வாங்கவில்லை. இந் நற்பன்பைப் பாராட்டுமுகமாக பாப்ரி மஸ்ஜித் இருந்த இடத்தில்

அவர்கள் ராமர் கோவிலைக் கட்ட விட்டுக்கொடுப்பது நம் மூதாதையர் செய்த பாவத்துக்கு

ஒரு கழுவாயாக அமையும் ‘ என்னும் பரந்த எண்ணம் முஸ்லிம்களுக்கு அறவே இல்லை.

கடவுளைச் சர்வ வியாபி – எல்லா இடங்களிலும் உறைபவர் – என்று

கூறும் இந்துத்துவத்தின் உண்மையான தத்துவத்ததைப் புறந்தள்ளி, மஸ்ஜித் இருந்த

இடத்தில்தான் ராமருக்குக் கோவில் கட்டுவோம் என்று வெறிகொண்டு அலையும் இந்துக்

களைத்தான் என்ன சொல்லித் திட்ட!

இஸ்லாமியர்கள் பெருவாரியாக வாழும் நாடுகளில் ஏனைய சிறுபான்மை

யினருக்குக் கொடுக்கப்படாத பல சலுகைகள் இந்துக்கள் பெருவாரியாக வாழும் இந்தியாவில் தங்களுக்குக் கொடுக்கப்பட்டிருப்பதை இஸ்லாமியர்கள் எண்ணிப் பார்த்துப் பெருந்தன்மையாக

நடந்துகொள்ளவேண்டிய பண்பை இந்திய முஸ்லிம் மதத்தலைவர்களும் அரசியல் தலைவர்களும் அவர்களுக்குப் புகட்டவேண்டும்.

4

பல நூறு ஆண்டுகளுக்கு முன்னால், முஸ்லிம் மதத்தீவிரவாதிகள் புரிந்த

அட்டூழியங்களுக்கு இன்று பழிவாங்க முனைதல் அன்றைய முஸ்லிம்களின் சகிப்பின்மைக்கும் இன்றைய இந்துக்களின் சகிப்பின்மைக்குமிடையே எந்த வேறுபாடும் இல்லை என்பதையே உணர்த்தும்.

இத்தகைய ததும்பும் சகிப்புத்தன்மையற்றனறிவீனம் ததும்பும் வெறிக்கு ஆளாகா

த்ிருத்தல் உண்மையான இந்துத்துவத்தின் மிக முக்கியமான அடையாளமாகும்!

குறிப்பிட்ட இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்பதும் அங்கே இந்துக்

கோவில் முன்பு இருந்தது என்பதும் உண்மையே யானாலும் கூட, அந்த இடத்தில் இஸ்லாமியர்கள் தொழுவது இந்துக்களுக்குப் பெருமையே அன்றோ!

….

jothigirija@vsnl.net

Series Navigation

ஜோதிர்லதா கிரிஜா

ஜோதிர்லதா கிரிஜா