கல்லூரிக் காலம் – 4 -Frustration

This entry is part [part not set] of 42 in the series 20031023_Issue

நம்பி.


‘கழுதை தினம் தினம் பொதி சுமக்கும். சிங்கம் எப்பவாச்சும்தான் வேட்டைக்கு போகும் ‘னு அடிக்கடி வகுப்புக்கு மட்டம் போடும் ‘KOK ‘ வேல்முருகன் சொல்லி க்கொள்வான். எப்பவாச்சும் வெளிய கிளம்பினான்னா KOKக்கு kafalnikov Onthropolis Kasparove-னு எதாச்சும் அர்த்தம் சொல்லிக்கிட்டு வழிய வழிய ஜொள் ஊ த்திட்டு எவனயாவது எங்கயாச்சும் மாட்டிவிட்டு கம்பி நீட்டிடுவான். குரங்கையே ஒரு-கை- பார்த்த கேணை-தான் KOK-க்கு அர்த்தம்னு பலபேருக்கு தெரியாது.

போனதடவ வேட்டைக்கு கெளம்புனப்ப Field Theory-II assignment கொடுக்க வேண்டியிருந்தது. ஒரே ஒரு நாளைக்கு மட்டும் போட்டுக்க ஜட்டி கடன் கொடுக்காத ‘தாயம்ஸ் ‘ வாசுவுக்கும் சேர்த்து assignment எழுதினான். பாலகுமாரன் கதைகளில் அனுசக்தி சோதனைகள் – அப்படிங்க்ற தலைப்புல எழுதி வாசு பேர போட்டு கொடுத்துட்டான். ‘நாட்டு வைத்தியர் ‘ ரங்கராஜன்தான் எங்கள் பிரிவுக்கு தலைமை. வாசு பேரு போட்டு பாலகுமாரன பத்தி எழுதியிருந்தத படிச்சுட்டு கடுப்பாகி வாசுவ அறைக்கு அழைச்சுகிட்டு போயி ஏன், எதுக்குன்னு கேக்காம ஒரு மணி நேரம் ‘பம்ப் ‘ அடிச்சு அனுப்பி வைச்சாரு. வேர்த்து வெடவெடத்து போயி வெளிய வந்த வாசுக்கு தலையும் புரியல, காலும் புரியல. கஞ்சி போட்டு மொட மொடப்பா கட்டியி ருந்த பருத்தி புடவைய பக்கவாட்டுல திரும்பி வெறிச்சு பார்த்ததுக்காக இப்படியா மனுசன் பம்ப் அடிக்கிறதுன்னு ராத்திரி சாப்ட்டு முடிஞ்சப்பறம் சொன்னான். ‘அவரோட ஜபருதஸ்தெல்லாம் எங்கிட்ட காமிச்சதுக்கு ஒரு கடி கடிச்சிருக்கலாம். தொன்னுத்தி ஆறு தடவ ஊசி போட்டுகிட்டா சரியா போயிருக்கும். இனிமே அந்த ஆள்மேல பட்டு வர்ற காத்துகூட ஆகாது ‘ ன்னு வாசு ஒரு வாரம் புலம்பிகிட்டே இருந்தான்.

நாட்டு வைத்தியர சமாளிக்குறதே வர வர பெரிய சாவால் ஆயிடிச்சு. மனுசனுக்கு ஞாபக மறதி வேற. மூன்றம் ஆண்டுக்கு எடுக்க வேண்டிய பாடத்த போயி முதல் ஆண்டுக்கு எடுப்பாரு. எதுவா இருந்தாலும் புரியாத முதல் வருடத்து பசங்க தேமேன்னு உட்கார்ந்து இருக்கும். மத்தியான சாப்பட்டுக்கு மணியடிச்ச போது, அடுத்த வகுப்புக்கான மணின்னு நினைச்சுகிட்டு முதல் ஆண்டு மாணவர்கள வகுப்பு உள்ளேயே பசியோட உட்காரவச்சி பின்னி எடுத்தாரு. அப்புறம் முதல்வர் செய்தி கேள்விபட்டு ஆள் அனுப்பி மாணவர்கள வி டுவிச்சாரு.

இப்படி ஒரு வழியா காலத்த ஓட்டிகிட்டு இருக்குறப்ப எந்த கல்லூரியிலோ தறி கெட்டு அலைந்த ‘50% ‘ அகஸ்டின் விரிவுரையாளரா வந்து சேர்ந்தாரு. சேர்ந்த அன்னையிலேருந்து நாட்டுல வெள்ளப்பெருக்கு. வேறென்ன ஜொள்தான். எப்பவும் வெள்ள சட்டை, பேண்ட்லதான் வருவாரு. திடார்னு ஒரு நாள் கல்லூரியே பரபரப்பாயிடுச்சு. எப்பவாவது இந்த மாதிரி சில அதிசயங்கள் நடக்கும். (நதியா)மொய்து பத்மா லோஹிப்பும், ஸ்லீவ்லெஸுமா கலங்கடிக்கறா. மொய்து நேவல் அதிகாரியாயி ட்டான்னு கேள்விபட்ட KOK அவசரமா வேட்டைக்கு கிளம்பிட்டான்.

எப்படியோ மொய்த மடக்கி ரெண்டு மணி நேரம் ஜொள் ஊத்திட்டு எல்லாரோட வயித்தெறி ச்சலையும் வாங்கிகிட்டு KOK பந்தா காமிச்சான். 50% அகஸ்டினுக்கு பத்தி எரியுது. சாங்காலம் ரெண்டு பாட்டில் பீர் போட்டாலும் அணையாது. மறுநாள் வந்த உடனேயே மொய்து பத்மாவ கூப்பிட்டு ‘இப்படி கண்ட கண்ட பசங்களோட நீ மணிக்கனக்கா நி ன்னு பேசிகிட்டு இருந்தா கல்லூரி மதிப்பு என்னாறது. உன்ன படிக்க அனுப்பி ருக்காங்க. வகுப்புக்கு மட்டம் போட்டின்னா என்ன அர்த்தம் ? ‘ அப்படின்னு காந்தி கணக்கா அறிவுரை சொல்லி மனச ஆத்திகிட்டாரு. அதுலேர்ந்து எல்லா மாணவிகளும் KOKவையும் சரி, 50%யும் சரி பார்த்தாலே பதுங்கிடுங்க. பயலுவ ரெண்டு பேரும் ஜொள் பார்ட்டின்னு தெரிஞ்சி போச்சு. KOK கடுப்பாயிட்டான். ஏதோ அப்பப்ப வேட்டைக்கு வந்தமா ஜொள் ஊத்துனமான்னு இருந்தப்ப இந்த ஆளு பூந்து அடி மடியிலேயே கைவச்சுட்டாரேன்னு.

நச்சுன்னு புதன் கிழமைய புடிச்சான் KOK. அன்னைக்கு இரண்டாம் பாடம் நாட்டு வைத்தி யரோடது. மூனாவது பாடம் 50%. வெள்ள சட்ட, வெள்ள பேண்ட் எப்படியோ தேத்தி போட்டுகிட்டான். முடிய கூட படிய வாரியிருந்ததா ஞாபகம். அடக்கமா நாட்டு வைத்தியர் வகுப்புல உட்கார்ந்து இருந்தவன், முடியறதுக்கு மூனு நிமிஷம் முன்னாடி எழுந்து எல்லாருக்கும் கொஞ்சம் இஞ்சி மொரப்பா வழங்கினான்.

‘பாடத்த கவனிக்காம என்ன பண்ற ? ‘ நாட்டுவைத்தியர் இன்னிக்கு பம்ப் அடிக்க ஆள் கி டைச்ச சந்தோஷத்துல கேட்டாரு.

‘ இஞ்சி மொரப்பா கொடுக்குறன் சார். நீங்களும் ஒன்னு எடுத்துகுங்க ‘

‘What nonsense ? ‘

‘Frustration, Sir ‘

‘Frustrationன்னா என்ன அர்த்தம் தெரியுமா ?. என்ன அறைக்கு வந்து பாரு ‘ ன்னுட்டு போயிட்டாரு.

இத இதத்தான் எதிபார்த்தேன்னு மனசுல நெனச்சுகிட்டு, வெள்ள சட்ட மேலெ அந்த வெய்யில்லயும் ஒரு ஜெர்கின போட்டுகிட்டு, தலைய கலச்சி விட்டுட்டு நேரா 50%கிட்ட போனான்.

‘ உங்கள வகுப்புக்கு வரதுக்கு முன்னால HOD பார்க்கச் சொன்னாரு ‘ன்னான்.

என்ன ஏதுன்னு பதறிப் போயி அறைக்குள்ள போன 50% வெளிய வரதுக்கு ரெண்டு மணி நேரம் ஆயிடிச்சி.

அறைக்குள்ள நிற்க வைச்சே Frustrationன்னா என்னன்னு பம்ப் அடிச்சிருக்காரு. 50%, ‘அரை நாள் விடுப்புக்கு விண்னப்பம் போட்டது ஒரு தப்பா. இதுக்கு போயி மனுசன் நிக்க வெச்சு விளாசுறாரே ‘ன்னு நொந்து போயிட்டாரு.

அதுலேர்ந்து தேர்வுல எல்லா பாடத்துலயும் ‘கப் ‘ வாங்குனாகூட எவனும் Frustrationன்னு சொல்லமாட்டான்.


nambi_ca@yahoo.com

Series Navigation

நம்பி

நம்பி