நம்பி
‘புஷ்பந்தர்சிங் ‘ (புஷ்பம் தந்த சிங்கக்குட்டி) அல்லது தமிழ் ஆர்வக் கோளாறுகளுக்கு ‘மலர்மன்னன் ‘ – என்றழைக்கப்படும் விவேக் ஏறக்குறைய அப்பி ராணி. இல்லையென்றால் சும்மா ஏற்றிவிடும் உசுப்புக்கெல்லாம் போய் பூ கொடுத்து வாங்கி கட்டிக்கொள்வானா ?. அவன் ‘பங்கர ‘ சிராஜின் அறைத் தோழனானது எந்த ஜென்மத்திலோ ஓடுகிற நாயை விரட்டி கல்லால் அடித்த பாவம்தான்.
அதிலிருந்து மூன்று அறை தள்ளிதான் ‘போடி ‘ கோவிந்தனின் அறை. அதுதான் எங்கள் விடுதியில் லாஸ் வேகாஸ். விடிய விடிய சீட்டாட்டம். விடிந்த பின்னும் தொடரும். உள்ளே நுழைந்தால் குப்பையும் கூளமுமாக இருக்கும். மாசக் கடைசியில் கையில் காசி ல்லாதா பயல்கள் அங்கே போய் துண்டு பீடி பொறுக்கி பணம் அனுப்பாததால் புண்பட்ட மணத்தை புகைவிட்டு ஆற்றிக்கொள்வார்கள்.
இந்த போடிக்கும் பங்கரைக்கும் போட்டா போட்டி. உச்ச கட்ட கெட்ட வார்த்தையில் யார் பெயரை முன்னால் வைப்பது என்று. எங்கள் கல்லூரியில் ஒரு வழக்கம். ‘பண்ண ‘ என்றால் அது சிவராமனை மட்டும்தான் குறிக்கும். அவனைத் தவிர வேறு யாரை கூப்பி ட்டாலும் சண்டைக்கு அழைப்பதாக அர்த்தம். பதிலுக்கு கூப்பிடப்பட்டவன் ‘பங்கர ‘ என்றால் ‘நானும் தயார். வா. ஒரு கை பார்க்கலாம் ‘ என்று அர்த்தம். இந்த நேரத்தில் யாராவது சமாதானம் செய்ய வேண்டும். இல்லையென்றாம் அடுத்தவன் ‘போடி ‘ என்பான். அப்படி சொல்லிவிட்டால் தாமதிக்காமல் கையில் கிடைக்கும் ஆயுதத்தை ….. அது குண்டு ஊசியோ, அரை பிளேடோ எடுத்து எதிராளியை கொலை பண்ணிவிட வேண்டும். அதையும் தாண்டி ஒருவன் ‘சுதா ‘ என்று திட்டிவி ட்டால் திட்டப்பட்டவன் வடக்கிருந்தோ, வெளிக்கிருந்தோ தற்கொலை செய்துகொள்ள வேண்டும். ஒரு முறை ‘சைண்டிஸ்ட் ‘ விஜயராகவனை புஷ்பந்தர்சிங் ‘சுதா ‘ என்று தி ட்டிவிட ஒரு வாரம் அறையிலேயே வெளிக்கிருந்து எல்லோர் உயிரையும் எடுத்தான். இப்படி போடி ஒரு படி திட்டுவதில் மேலே இருந்ததால் பழிதீர்க்க பங்கர சமயம் பார்த்துக் கொண்டிருந்தான்.
போடி சீட்டாடுவதில் மன்னன். அவன் அறையில் எப்போதும் கூட்டம் ஜே ஜே என்று இருக்கும். மணிக்கு ஒரு தடவை மரணவிலாஸில் இருந்து டா வரும். மரண விலாஸ் டாயை ஓசியில் குடிக்க வேண்டும் என்றால் போடி அறைக்குப் போனால் தானாகவே கி டைக்கும். தற்கொலை எண்ணம் உள்ளவர்கள் முயற்சி செய்யலாம். இப்படி விடிய வி டிய கண் முழித்து, விடிந்த பின்னும் சீட்டே ஆடிக் கொண்டிருந்ததால் போடி கிட்டதட்ட ஓணான் போல் ஆகிவிட்டான்.
திடாரென்று ஒரு மத்தியான வேளையில் போடியின் அப்பாவும், அம்மாவும் உறவினர் கல்யாணத்துக்கு வந்தவர்கள் பாசம் இழுக்க அவனை பார்க்க வந்துவிட்டார்கள். வருவதற்கு ஒரு வாரம் முன்னமே அவனுக்கு கடிதம் எழுதினார்களாம். மணியார்டருக்கு மட்டுமே கடிதம் படிக்கும் போடி, காலம் தவறி வந்ததால் வார்டன் ஏதோ மெமோ அனுப்பியிருப்பதாக நினைத்து பிரிக்காமலேயே குப்பையில் கடாசி வி ட்டான். அவனது பெற்றோர்கள் விடுதிக்கு வழி விசாரிக்கையில் புஷ்பந்தர்சிங் பார்த்துவி ட்டான். அவனுக்கு விபரீதம் புரிந்தது. இந்நேரம் போடி போக்கரோ, ரம்மியோ ஆடிக் கொண்டிருப்பான். இதைப் பார்த்தால் போடியின் கெளரவம் என்னாவது ?. பாசப்பி னைப்பில் வந்திருக்கும் இவர்கள்தான் எப்படி தாங்குவார்கள் ?. புஷ்பந்தர்சிங் போடியின் பெற்றோர்களை மறித்து தன் அறைக்கு அழைத்துப் போனான். போடி வகுப்புக்கு போயி ருப்பதாக கதை கட்டிவிட்டு, தெரியாமல் போடிக்கு விஷயத்தை சொல்லி அனுப்பினான். ஒரு நிமிடம் ஆடிப்போன போடி உடனே குளிக்கப் போறேன் என்று மெஸ்ஸுக்கு ஓடினான். அவனுக்கு தெரிந்த ஒரே இடம் அதுதான். அவனை அடக்கி ஒரு வழியாக குளி யல் அறைக்கு வழிகாட்டி கொஞ்சம் மனுசனாக மாற்றிய பிறகு புஷ்பந்தர்சி ங் அறைக்குப் அனுப்பி வைத்தார்கள்.
ஓணான் போல் இருந்த போடியைப் பார்த்ததும் அவன் அம்மாவுக்கு அழுகை வந்துவி ட்டது. ‘நீ ஒரு மாசம் வீட்டுக்கு வா. உடம்பை தேத்திகிட்டு அப்புறம் வந்து படிக்கலாம். உடம்புதான் முக்கியம் ‘ என்று புலம்ப ஆரம்பித்துவிட்டார்கள். போடிக்கு விபரீதம் புரி ந்தது. ‘என்னது ?, ஒரு மாசம் லீவு போடுறதா ?. நான் பெயிலாகனும்னு நினைக்கறி யா ?. ராப்பகலா படிக்கம்போதே இந்த நிலமை. ஒரு மாசம் லீவு போட்டா அவ்வளவுதான் ‘ என்று பீலா விட்டான்.
மகனுக்கு இருக்கும் பொறுப்பை பார்த்து சிவாஜியான அப்பா, உடனே போய் பெரிய ஹார்லிக்ஸ் பாட்டில் வாங்கி வந்தார். புஷ்பந்தர்சிங்கைப் பார்த்து, ‘தம்பி, இவன் படிக்குற ஞாபகத்துல இதெல்லாம் குடிக்க மாட்டான். உன்ன பார்த்தா நல்லவனா தெரி யுற. நீங்க ரெண்டு பேரும் ஒரே அறையில இருக்கிறது எங்களுக்கு நிம்மதியா இருக்கு. காலிப்பயலுவ கிட்ட சேராமா நல்லா படிங்க. ரெண்டு பேருக்கும்தான் ஹார்லிக்ஸ் வாங்கி யாந்தேன். மறக்காமா குடிங்க ‘ன்னாரு.
ஒரு வழியா அவங்க புறப்பட்டு போனதும், போடி ஆட்டத்துக்கு கிளம்பிட்டான். இதெ கேள்விப்பட்ட பங்கரக்கு வெறி ஆயிடிச்சு. கூட இருந்தே குழி பறிச்சிட்டானே புஷ்பந்தர்சி ங் அப்படின்னு கருவினான்.
காலையில ஆஞ்சு மணிக்கெல்லாம் தடமுடான்னு சத்தம். புஷ்பந்தர்சிங் ஹார்லிக்ஸ் கலக்குறான். ஒரே ஒரு கப் போட்டு போடி அறைக்கு எடுத்துகிட்டு போனான். அப்பதான் ரம்மி முடிச்சு, போக்கர் ஆடலாமா ப்ளாக் ஜாக் ஆடலாமன்னு வி வாதம் நடக்குது. புஷ்பந்தர்சிங் ஹார்லிக்ஸ கொடுத்துட்டு அறைக்கு வந்தான். எட்டு மணி க்கு முன்னால எழுந்து பழக்கமே இல்லாதா பங்கர முழிச்சுகிட்டு உட்காந்து இருக்கான். ‘மவனே.. புஷ்பந்தர்சிங்….. நான் ஒருத்தான் இங்க இருக்கேன். எனக்கு இல்லாம என்னாடா போடிக்கு மட்டும் கொடுக்குற ? ‘
‘ அது அவனுக்கு வாங்கி கொடுத்தது ‘
‘ அப்படின்னா உன்ன குடிக்க சொன்னாங்கல்ல. அத எனக்கு கொடு ‘
‘அதெல்லாம் முடியாது போடா. எல்லத்துக்கும் ஒரு நியாயம் இருக்குல்ல ‘
‘ ஓஹோ…. அவரு சீட்டு ஆடுவாரு. அதுக்கு நீரு உடம்ப தேத்தி விடுறீரு.
கேட்டாக்க நியாம் பேசுருரீரு. இருடி வக்கிறன் ஆப்பு ‘
அன்னைக்கு சாயங்காலம் வரைக்கும் பங்கரக்கு இருப்பு கொள்ளல. என்ன பண்ணலாம்னு. நேரா ‘கடமைவீரன் ‘ ஷெல்வ ஷுப்ரமணிகிட்ட போனான். பொறுமையா கேட்ட கடமைவீரன், ‘இவ்வளவுதானா மேட்டரு. உன் சாவிய எங்கிட்ட கொடு. அந்த புனா.சினா-வ எங்கி னாச்சும் தள்ளிக்கிட்டு போயிடு. நான் வேள முடிஞ்சதும் சிக்னல கொடுக்குறேன் ‘ அப்படின்னான்.
கடமைவீரன் மெஸ்ல இருந்து மைதாமாவு, சீனி, உப்பு எடுத்துகிட்டு, வந்தான். கூடவே சைண்டிஸ்ட். புஷ்பந்தர்சிங் பெட்டிய குடஞ்சி, ஹார்லிக்ஸ எடுத்து ஒரு சட்டில போட்டுட்டு மெஸ்ல இருந்து எடுத்து வந்தத பாட்டில்ல வச்சிட்டானுங்க. சட்டில போட்ட ஹார்லிக்ஸ களி கிண்டி இறக்கிட்டு, கடமைவீரன் அறைக்கு போயி விசி ல் அடிச்சான். புஷ்பந்தர்சிங்க கழட்டிவிட்டுட்டு வந்து ஹார்லிக்ஸ் களிய மூனு பேரும் – கடமைவீரன், சைண்டிஸ்ட், பங்கர மொக்குனானுவ. அப்படியும் மீந்து போனத நாய்க்கு போட்டுட்டு கமுக்கமா அமுங்கிட்டானுவ.
அது ஹார்லிக்ஸா, மைதாவான்னு தெரியாம போடி குடிச்சு தீர்த்தது வேற விஷயம்.
nambi_ca@yahoo.com
- பிரஞ்சிலக்கியம் பேசுகிறேன் – Francois Rabelais
- மதி
- ஒரே ஒரு வழிதான்
- மானுடமாகட்டும் பெண்மை
- வைரமுத்துக்களின் வானம்-6
- கல்பாக்கம் ஞாநிக்குப் பரிந்து ரோஸாவசந்த் கேட்ட அணுவியல் வினாக்கள்
- 2003 ஆண்டின் அறிவியல் நோபெல் பரிசுகள்
- எனக்குப் பிடித்த கதைகள் – 81 ஒருகணக் காட்சி -சிவசங்கரியின் ‘வைராக்கியம் ‘
- நகைச்சுவை நாயகன் மார்க் ட்வெய்ன் (1835 – 1910)
- பிரகடனங்களும், பிரமைகளும் – 1 (ஜெயகாந்தன் உரை குறித்து)
- அன்பின் பஞ்சு
- உயிர்மை அக்டோபர் இதழ்
- ஒரு சேட்டரின் (chatter) புலம்பல்
- அப்படியா ?
- என்னைத்தேடி
- முக வரிகள்
- மீட்சி
- வாலைச் சீண்டும் வானரம்
- நீ இருக்கிறாய்!
- கூட்டுக்கவிதை
- பரி-மலம்
- ஒ லி ச் சி த் தி ர ம்
- விடியும்!நாவல் – (18)
- அரசூர் வம்சம் – அத்தியாயம் இருபத்தெட்டு
- இதயங்களின் தேவாலயம்
- எ(பெ)ருமை முயற்சிதரும்
- கடிதங்கள்
- பழங்குடியினர் உலகமும் கிரிஸ்துவ வரலாறும் -1
- கவர்னர் Schwarzenegger
- வாரபலன் – அக்டோபர் 16,2003 – அமைதிக்குக் கத்தரி வாய்ப்பு
- ஜனனம்
- ஹார்லிக்ஸ் (கல்லூரிக் காலம் – 3)
- குமரி உலா 7 — வேலுத்தம்பி தளவாயின் அரண்மனை
- முடிவற்ற அறிதல் [பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு எளிய விளக்கம் ]
- பகுத்தறிவு குறித்த மூட நம்பிக்கைகள்
- பரு
- சந்திப்பு
- உன்னைப்போல் தான் நானும் ?!
- பாடி முடிக்கும் முன்னே…