படைப்பாளியின் தார்மீக உரிமைகளும், சில கேள்விகளும்

This entry is part [part not set] of 27 in the series 20030413_Issue

K.ரவி ஸ்ரீனிவாஸ்


திண்ணையில் வெளியான அரவிந்தன் நீீலகண்டன் கட்டுரை கோவை ஞானி குறித்து தவறான தகவல்களை தருகிறது. மேலும் அவரது நிலைப்பாட்டினை திரித்து ஒரு பொய்யை மெய்யாக்க அரவிந்தன் முயன்றுள்ளார்.அரவிந்தன் இப்படி செய்வது இது முதல் முறை அல்ல. அவர் ரோமிலா தாப்பர் கட்டுரையை எப்படி திரித்து எழுதியுள்ளார் என்பதை திண்ணை ஆசிரியர் குழுவிற்கு நான் விரிவாக எழுதினேன். அதற்கு இது வரை பதில் வரவில்லை. அரவிந்தன் எழுத்துக்கள் குறித்து விவாத களத்தில் விரிவான விமரிசனங்கள் உள்ளன. லைசென்கொ மற்றும் ஹால்டேன் பற்றி அவர் எழுதியவை தகவல் பிழைகள் அல்ல.உண்மையை மறைக்கும் முயற்சிகள். ஹால்டேன் பொது வாழ்வை விட்டு ஒதுந்கியதாக அரவிந்தன் குறிப்பிட்டது பொய் என்று அனாமிகா நிருபித்தார்.இது போல் பல முறை அவர் பொய்களை உண்மைகள் என்று எழுதியுள்ளார்.அரவிந்தனின் நோக்கம் இடதுசாரிகளை வசைபாடுவது, அதற்காக சான்றுகள் என்று பொய்களை கலந்து எழுதுவது.

சு.ராவை அவர் விமர்சனம் என்ற பெயரில் வசை பாடி, வழக்கம் போல், சு.ராவின் கருத்துகளை திரித்து பொருள் கூறினார்.அது கூட வெளியானது. நேற்று சு.ரா , இன்று கோவை ஞானி, ஞாநி, நாளை யாரோ ?,

இததகைய கட்டுரைகளை தொடர்ந்து பிரசுரித்ததன் மூலம் திண்ணை தன் நம்பக தன்மையை பெருமளவிற்கு இழந்து விட்டது. ஒருவர் கருத்துக்களை விமர்சிப்பது என்பது வேறு, அவற்றை திரித்து கூறுவது என்பது வேறு. ஒருவர் மாகாத்மா காந்தி வன்முறையை ஆதரித்தார், அனைவரும் ஆயுதம் ஏந்தி இந்தியர்யல்லாதோரை கொல்வது சரியானது என்று கூறினார் என்று எழுதி அனுப்பினால் அதை திண்ணை பிரசுரிக்க கூடும். அது அவரது கருத்து என்று விளக்கம் தரக் கூடும். ஆனால் படைப்பாளியின் தார்மீக உரிமைகளை பற்றி திண்ணை அக்கரை கொண்டிருந்தால் அர்விந்தன் கட்டுரையை அப்படியே வெளியிட்டு இருக்காது. தன் கருத்துகளை பிறர் திரித்து கூறுவது, தான் கூறாத ஒரு கருத்தை தன் கருத்தாக பிரசுரிப்பது போன்றவற்றை சட்ட ரீதியாக தன் தார்மீக உரிமை மீறல்களாக கருதி அதற்கு காரணமானவர்கள் மீது வழக்கு தொடரும் உரிமை ஒரு படைப்பாளிக்கு உண்டு. தார்மீக உரிமை இந்தியா உட்பட பல நாடுகளில் சட்ட ரீதியாக ஒப்புக்கொள்ளப்பட்டுள்ள ஒரு உரிமை.

கோவை ஞானி நிகழ் உட்பட பல வெளியீடுகளில் பசுமைப் புரட்சி, நவீன வேளாண்மை குறித்து தன் கருத்துகளை முன் வைத்துள்ளார். நம்மாழ்வாரின் கருத்துகளை சிறு பத்திரிகை உலகில் பலர் அறியச் செய்தவர் அவர்.நிகழ் மூலம் இயற்கை வேளாண்மை குறித்து சில சிறு நூல்களை வெளியிட்டவர்.க்யுபாவில் மாற்று வேளாண்மை முயற்சிகள் குறித்து நிகழில் கட்டுரை வெளியிட்டவர்.இன்றும் தமிழ் நேயம் மூலம் அணு உலை எதிர்ப்பு, இயற்கை வேளாண்மை குறித்து தன் கருத்துக்களை கூறி வருபவர். ஏப்ரல் மாத தீரா நதி இதழில் பேட்டியை காண்க. ஆனால் அரவிந்தன் தன் கட்டுரையில் என்ன எழுதியிள்ளார் அதற்கு அவர் என்ன சான்றுகள் முன் வைக்கிறார் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். எந்த ஆதாரமும் இன்றி எதற்காக அப்படி எழுத வேண்டும், அதனை திண்ணை ஏன் பிரசுரிக்க வேண்டும்.திண்ணை ஆசிரியர் குழுவினருக்கு கோவை ஞானியின் கருத்துக்கள் பற்றி தெரியாதா , அல்லது எதை வேண்டுமானலும் பிரசுரிப்பது என்பது திண்ணை ஆசிரியர் குழுவினர் முடிவா.

மேலும் அவர் ‘ஆனால் ஸ்டாலினிய பொருளாதாரத்தை பாரதத்தில் செயல்முறை படுத்தி பின்னர் அதன் விளைவை ‘ஹிந்து வளர்ச்சி வேகம் ‘ என நம்மையே குறை கூறி இன்று பெப்ஸியில் சூடாறும் பொருளாதார மேதாவிகளும், பாரத மண் சார்ந்த எந்த அறிவையும் கொச்சைபடுத்தும் ஞாநி/னிகளும் இவ்வுண்மையை உணர்ந்துய்வதெக்காலம் ? ‘ என்று எழுதியுள்ளார். இந்தியாவில் எத்தகைய பொருளாதாரக் கொள்கை அமுலில் இருந்தது. நிலம் யார் வசம் இருந்தது. கூட்டு அல்லது கல்ப்பு பொருளாதார ளெ¢கை இருந்தது. இதில் தனியார் துறை, பொதுத் துைறை ஆகிய இரு துறைகளும் செயல் பட வகை செய்யப்படது.

அரவிந்தன் திண்ணை வாசகர்கள் ஒன்றும் அறியாத முட்டாள்கள் என்று கருதுகிறார் போலும். இத்தகைய அபத்தமான கருத்துக்களையும், பொய்களை பிரசுரம் செய்வது திண்ணையின் மதிப்பையும், நம்பக தன்மையையும் பாதிக்கும். அரவிந்தன் கட்டுரைகள் என்ற பெயரில் எழுதியுள்ள அரை,முக்கால்,முழுப் பொய்களுக்கு பதில் சொல்லுவது என் வேலை அல்ல.ஆனால் அவர் எழுதிய இந்த கட்டுரைக்கு விரிவான பதிலை விரைவில் இணையத்தில் முன்வைப்பேன்.

***

ravisrinivas@rediffmail.com

Series Navigation