அன்பே வெல்லும்

This entry is part [part not set] of 57 in the series 20030717_Issue

பா.ஸ்ரீராம், மயிலாடுதுறை.


இரவு நேரமாகியும் ரமேஷ் வரவில்லை.அவன் அம்மாவும், அப்பாவும் வீட்டின் வெளியிலே காத்துக்கொண்டிருந்தார்கள்.

‘ஏங்க ரமேஷ் எங்க போய் இருப்பான் நீங்க வேணா போயி அவனோட friends வீட்டுல பாத்துடு வாங்களேன் என்று ரமேஷின் அம்மா கண்களில் கண்ணீர் கலங்க சொன்னாள்..

‘எங்கடி போய் இருப்பான் அவன் என்ன குழந்தையா வந்துடுவான் நீ போயி பேசாம படு என்று மன வருத்தத்துடன் சொன்னார் ரமேஷின் அப்பா ‘

சிறிது நேரம் கழித்து ரமேஷ் வந்தான் தள்ளாடியப்படி… அவன் மேல் ஏதோ ஒரு மாறுப்பட்ட நாற்றம்

‘என்னடா ஒரு மாதிரியா நாறுது.எங்க போய்டு வற சொல்லு..என்றார்.

அவனால் பேசவே முடியவில்லை. வாய் குலறியப்படி..ஒண்ணும் இல்லபா என்னோட friend நாளைக்கு வெளிநாடு போறான் அதுக்காக ஒரு party வச்சான் அதுகு போனேன் எல்லாருமா சேர்ந்து மது அருந்த சொன்னாங்க..வேண்டாம்னு சொன்னேன் ரொம்ப வற்புறுத்தினாங்க அதான் கொஞ்சமா சாப்பிட்டு வந்தேன் என்று பயத்துடன் சொன்னான் ரமேஷ்.

அவன் அப்பாவிற்கு என்ன செய்வதென்றே புரியவில்லை…இந்த சூழ்நிலையில் அறிவுரைக்கொடுத்தாலோ, அடித்து உதைத்தாலோ உபயோகப்படாது என்று புரிந்துக் கொண்டு ‘சரி சரி உங்க அம்மா உள்ள நீ வரலனு பயந்துப் போய் படுத்துக்கிட்டு இருக்கா…நீ போய் மொட்ட மாடில படு…காலைல பாத்துக்கலாம் நீ night வராதது மாதிரியே நான் அம்மாகிட்ட சொல்லிகிறேன் என்று ரமேஷை மாடிக்கு அழைத்து சென்று படுக்க வைத்து விட்டு கீழே வந்து அறைக்கு போனார் ‘

‘என்னங்க இன்னும் வரலையா என்று கேட்டாள் ‘

‘இல்லடி அவனோட friend வந்து சொல்லிடு போறான்..ரமேஷ் எதோ அவரச விஷயமா வெளிவூர் போய் இருக்கானாம்..நாளைக்கு வருவானு இப்பதான் சொல்லிடு போறான்.. என்றார்…

எங்க போனா என்ன ஒரு வார்த்த சொல்லிடு போலாம்ல என்றாள் ரமேஷின் அம்மா.

பொழுது விடிந்தது…ரமேஷின் அப்பா அவனை சீக்கிரமே எழுப்பி கீழே அழைத்து வந்து உள்ளே படுக்க வைத்தார். ரமேஷின் அம்மா எழுந்து பார்க்கும் போது அவன் பக்கத்தில் படுத்து இருந்தான்.

‘ரமேஷ் நேத்து எங்கடா போன சொல்லுடா என்று தூங்குவதுப் போல் நடித்துக் கொண்டிருந்த அவனை எழுப்பி கேட்க இல்லமா என்னோட friendகு திடாருனு உடம்பு சரியில்லாம போச்சு…அவன பாக்க போய்டு சீக்கிரமா வந்துடலாம்னுதான் போனேன்..ஆனா அங்க லேட் ஆயிடுசு அதான் காலைல வந்தேன்…நீ தூங்கிட்டு இருந்த அப்பா வந்து கதவை திறந்து விட்டார் என்று பொய்க்கு மேல் பொய் சொன்னான் ரமேஷ்.

இனிமே எங்க போனாலும் சொல்லிடுதான் போனும் புரியுதா..என்னால கவலப்பட முடியல..என்றாள்.

மன்னிசிக்க இனிமே சொல்லிடு போறேன் என்று பணிவாக சொன்னான் ரமேஷ்.

ரமேஷ் அவன் அப்பாவை பயத்துடன் பார்த்தான்..என்னடா நான் எதாவது கேட்பேனு நினைக்கிறியா ? நல்லது கெட்டது சொல்ற வயது இல்ல உனக்கு..நீயே வீட்டு சூழ்நிலைய புரிஞ்சு நடந்துக்கணும் என்று சொன்னவுடனே ரமேஷ் கண்களில் கண்னீர் பெருக்கெடுத்து ஓட ஆரமித்தது.

ஏண்டா அழற நான் ஏதாவது தப்பா சொல்லிடனா…எதாவது தப்பா சொல்லி இருந்தா மன்னிசுக்கடா என்றார்.

முன்பை விட அதிகமாக அழ தொடங்கினான் ரமேஷ். இல்லபா நான் தான் தப்பு செஞ்சுடன் ‘மது குடிக்கிறது தப்புனு எனக்கு தெரியும்…friends சொல்றாங்கனு குடிச்சேன் ஆனா வீட்ட பத்தி நனைச்சுப் பாக்கால…நான் தான் குடிச்சுட்டு வந்தேன்..நீங்க என்ன ரெண்டு அடி அடிச்சு இருந்தாக் கூட நான் அழுது இருக்க மாட்டேன்…அன்பா என்ன கொண்டு மாடில படுக்க வச்சு…அம்மா கிட்ட மாட்டி விடாம ஒரு friendச விட அதிகமா என்ன காப்பாதுனிங்க….அத நனைச்சாதான் அழுகையாக வருது என்றான்.

ரமேஷின் அப்பா பேச தொடங்கினார். ‘ரமேஷ்..நீ ஒண்ணு புரிஞ்சுக்கனும்…இன்னிக்கு friend வெளிநாடு போறானு நீ குடிச்சுட்டு வந்த…ஒரு நாள் அடிச்சா பரவாயில்ல..நாளைக்கு இதுவே பழக்கமாயிடும்… நம்பலால வெளிநாடு போக முடியலையேனு குடிப்ப..அப்படியே படி படியா வளர்ந்துடும்..நீயும் அதுக்கு அடிமை ஆயிடுவ… அம்மா ஏற்கனவே இருதய நோயாளி நேத்து உன்ன அந்த சூழ்நிலையில பாத்து இருந்தா என்ன ஆயிருக்குமுனு சொல்ல முடியாது..அதுமட்டும் இல்ல தோலுக்கு மேல வளந்துட்ட உன் மேல கைவச்சா என்ன குடிச்சுட்டுப் போனா அப்பா அடிக்கதான செய்வாருனு நாளைல இருந்து தைரியமா குடிச்சுட்டு வீட்டுக்கு வருவ அதனாலதான் அன்பா உன் கிட்ட நடந்துகிட்டேன்..நானும் உன்னோட வயசுல எல்லாம் அப்படி இப்படி இருந்தவந்தான் அதனாலதான் நான் இப்படி இருக்கேன்..ஒழுங்கா படிச்சு கெட்ட பழக்கமல்லாம் இல்லாம இருந்தா நான் உன்னையே வெளிநாட்டுல படிக்க வச்சு இருப்பேன்…இப்பவே நீ நல்லா படிச்சு நல்ல வேலைக்கு போனா உன்னோடு பிள்ளைகல நீ நனைக்கிறா மாதிரி படிக்க வைக்களாம்…கல்யாணத்துக்கு அப்பறம்தான் எனக்கு புரிஞ்ச்சு…ஏன்னா எனக்கு அப்பா அம்மா இல்லா..சின்ன வயசா இருக்கும் போதே செத்து போய்டாங்க..தாத்தா பாட்டிகிட்ட வளந்ததுனால அப்படி எல்லாம் இருந்தேன் அவங்க வயசானவங்க என்ன கண்டிக்கக்கவோ அவலாஅ முடியல….உங்க அம்மாதான் என்ன மனிதனா மாத்தினா… உனக்கு அப்பா அம்மா இருக்கோம் அதனால அன்பா இப்பவே சொன்னா நீ திருந்திடுவனுதான் அப்படி நடந்துகிடேன்

ரமேஷ் உடனே அப்பா இனிமே என்னாலா உங்களுக்கு எந்த அவனமானமும் வராத மாதிரி நடந்துக்குவேன்… எனக்கு ஒரு friend மாதிரி இருந்து அறிவுரைமாதிரிக் கூட இல்லாம என்னோட அறிவுக்கு எட்டறா மாதிரி சொன்னீங்க உங்க பேர கடைசி வர காப்பாத்துவேன் என்று தன்னுடைய அப்பாவை அணைத்தப்படு ரமேஷ் கூறினான்.

***

balageethan@rediffmail.com

Series Navigation

பா.ஸ்ரீராம், மயிலாடுதுறை.

பா.ஸ்ரீராம், மயிலாடுதுறை.