அரவிந்தன் நீலகண்டன்
ஆசியாவிலிருந்து இயற்பியலில் முதல் நோபெல் பரிசு பெற்ற ராமன் தன் பரிசளிப்பு விழாவில் முக்கியமாக நினைவு கூர்ந்தது அப்போது இந்திய சிறையிலிருந்து தன் மகிழ்ச்சியை தெரிவித்திருந்த ஒரு நண்பரை. ராமன் அதை பரிசளிப்பு விழாவில் தெரிவித்தது விழாவில் பங்கு கொள்ள வந்திருந்த பிரிட்டிஷ் அதிகாரிகளை முகம் சுளிக்க வைத்தது.
ஏனெனில் ராமனின் அந்த சிறை நண்பர் வேறு யாருமல்ல மகாத்மா காந்திதான்.
பொதுவாக நிறுவன காந்தியவாதிகள் இராட்டையை ஏதுமற்ற சடங்குக் குறியீடாகவும் இன்னமும் ஒரு படி கீழாக தொழில்நுட்ப-அறிவியல் முன்னேற்றத்தின் எதிர்ப்பினை காட்டும் காந்திய சின்னமாகவும் பயன்படுத்தியும் அறிந்தும் வருகின்றனர். இத்தகையதோர் அறிதலின் பின்புலத்தில் மகாத்மா ஒரு லூயிடைட்டாக வெகுஜன தளத்தில் குறிப்பாக அறிவியல் சமூகத்தில் அறியப்படுவதில் அதிசயமில்லை.
ஆனால் அவர் உண்மையிலேயே ஒரு அறிவியல்-தொழில்நுட்ப எதிர்ப்பாளராக இருக்கும் பட்சத்தில் ஏன் அன்றைய பாரதத்தின் மிகச் சிறந்த இயற்பியலாளர், தன் வாழ்வின் உன்னத தருண மொன்றில் மகாத்மாவை குறிப்பிட வேண்டும் ? மகாத்மாவின் அறியாத ஒரு பரிமாணம் அவரது அறிவியல் ஆர்வம். அது குறித்து ஆவணப்பதிவுகள் செய்ய முடிந்த ஒரு மனிதர் ராமன். அது நடக்க இனி வாய்ப்புகள் அரிது. ஆனால் மகாத்மாவின் அறிவியல் பார்வை எந்த அளவு ராமனை கவர்ந்ததென்பதை ராமன் சுதந்திர பாரத அரசிடம் அது வெளியிடும் அறிவியல் பாடநூல்களின் அட்டையில் மகாத்மாவின் படம் இடம் பெற வேண்டும் என்று கூறியதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.
மகாத்மாவின் பல எழுத்துக்களை அவர் நவீன தொழில்நுட்பத்திற்கு எதிரானவர் என்பதற்கு எடுத்துக்காட்டாக காட்டலாம். ஆனால் சத்திய தேடலை தன் வாழ்வின் அடிப்படையாக கொண்டதில் மகாத்மா தூய அறிவியலின் உயிர் துடிப்பை தன் வாழ்வுடன் இணைத்துக் கொண்டார். அரசியல்-பொருளாதார-சமூக தளத்தில் செயலாற்றிய அவர் அத்தளத்தில் அறிவியலின் வலிமையான வெளிப்பாடான தொழில்நுட்பத்துடன் தன் தத்துவார்த்த சோதனைகளை நடத்தினார். அவர் ஒரு தொழில்நுட்ப வாதியல்ல. ஏன் தத்துவ ஞானியோ அல்லது பொருளாதாரத்தை முறையாக பயின்றவரோ அல்ல.
அதனால் அவர் சத்திய தேடல் உடைய ஒரு பாரதியன் தொழில்நுட்பத்தை எவ்வாறு அதன் முழுத்தாக்கங்களுடன் தன் வாழ்க்கையில் ஏற்பதை பரிசீலிப்பானோ அவ்வாறு அதனை பரிசீலித்தார். அதன் மூலம் அவர் தொழில்நுட்பத்தினை எவ்வாறு உணர்ந்தாரோ அவ்வாறே அதனை கூறினார். அன்றைய காலகட்டத்தின் தொழில்நுட்பம் சார்ந்திருந்த மதிப்பீடுகள் பாரத சமுதாயத்திற்கு செய்திருந்த ஊறினை முழுமையாக உணர்ந்திருந்த அவர் அத்தொழில்நுட்பத்தை முழுமையாக மறுத்தார்.இவ்விதத்தில் அவர் தொழில்நுட்பத்தின் வருங்கால பரிணாம வளர்ச்சி முழுமையான மனமண்டல மாற்றத்திலிருந்து வளர வேண்டும் என விரும்பினார். குவித்தன்மையற்ற பரவல் தன்மை உடைய மாசற்ற தொழில்நுட்பமே பாரத மண்ணுக்கு நலமானது என்பதனை அவர் கண்டறிந்தார். அத்தகையதோர் தொழில்நுட்பத்தின் ஓர் குறியீடாக – அதாவது வருங்கால தொழில்நுட்ப குறியீடாக – அவர் இராட்டையை முன்னிறுத்தினார்.
ரவீந்திரநாத் தாகூர் மகாத்மாவின் இராட்டை பார்வையை கடுமையாக எதிர்த்தவர். ஒரு தேக்க நிலை நோக்கி நம்மை அது அழைத்துச் சென்று விடும் என கருதிய தாகூர் ‘சர்க்காவின் உபாசனை மார்க்கம் ‘ (The cult of Charka) என கேலியான கடுமையுடன் விமர்சித்தார். (தாகூர் சூழலியலின் முக்கியத்துவம் தெரியாதவரோ அல்லது சுதேசி இயக்க எதிர்ப்பு உடையவரோ அல்ல. மாறாக அவரது விமர்சனம் இராட்டை ஒரு உயிரற்ற சடங்காக தேக்க நிலையையும் ஒற்றைத்தன்மையை ஏற்படுத்துவதாகவும் அமையும் என்பதாக இருந்தது. ஒருவிதத்தில் நிறுவன காந்தியர்களும் செமினார்வாலாக்களும் தாகூரின் தீர்க்கதரிசனத்தை திறமையுடன் நிறைவேற்றினார்கள் எனலாம். ‘இராட்டை கலாச்சாரத்தை ‘ மிகக்கடுமையாக எதிர்த்த மற்றொரு வங்காள புதல்வர் ஸ்ரீ அரவிந்தர்.)
இதற்கான பதிலில் இராட்டை எவ்விதத்தில் ஒரு குறியீடாக விளங்குகிறது என்பதனை மகாத்மா விளக்கியிருந்தார். மகாத்மாவின் வார்த்தைகளில், ‘பாரதத்தின் பல்வேறு ரூபங்களினூடே ஓடும் ஒருமையின் குறியீடாக இராட்டையினை கருதுகிறேன்….இக்குடிசை தொழில் உபகரணத்தில் செய்யப்படும் எவ்வித தொழில்நுட்ப மேம்பாட்டையும் நான் வரவேற்பேன் ஆனால் அதன் ஆற்றலின் தன்மையை மாற்றுவதை அல்ல….இராட்டையை சுற்றி அமையும் தேசிய வாழ்வின் புனருத்தாரணத்தினை கருதும் தேசிய சேவகன் மலேரியா விரட்டல், கழிவுகளகற்றல், சுமுக சமுதாய வாழ்வு, கால்நடை பராமரிப்பு மற்றும் தரம் மேம்படுத்தல் கிய அனைத்தையும் அமைக்கமுடியும். ‘ தெளிவாகவே சமுதாயத்தினூடே ற்றல் ஓட்டம் எனும் முக்கிய சூழலியல் உண்மையை கணக்கில் கொண்டு மகாத்மா தொழில்நுட்ப மேம்பாட்டினை பாரத சூழலில் மகாத்மா நோக்கினார் என்பது தெளிவு. மண் சார்ந்த மரபுகளுடன் அறிவியல் இணைந்து செயல்படுகையில் ‘மண்ணில் தெரியும் வானம் ‘ என்பதே மகாத்மாவின் தொழில்நுட்ப கருத்தியலின் எளிமையான சாரம். கூறுவது எளிது னால் அதனை நடைமுறைப்படுத்த மிகக்கடினமான வாழ்நாள் தவங்கள் தேவைப்படும். லாரி பேக்கரை அல்லது குமரப்பாவை அல்லது கலாமை போல. உதாரணமாக மகாத்மாவின் கண்ணோட்டம் எவ்வாறு தொழில்நுட்ப மக்கள் இயக்கத்திற்கு வழி வகுத்ததென்பதை தெளிவாக லாரி பேக்கரில் நாம் காண முடியும். மகாத்மா கட்டுமான தொழில்நுட்பம் தன்நிறைவு கொண்டதாகவும், ஒரு கட்டிடம் அது கட்டப்படும் இடத்தின் சுற்றுவட்டாரம் சார்ந்த பொருட்களாலேயே கட்டப்பட தக்கதாகவும் இருக்கவேண்டும் என கூறுகிறார். பிர்மிங்காம் கட்டிடக்கலை தொழில்நுட்பக் கல்லூரி மாணவரான லாரி பேக்கர் இரண்டாம் உலகப்போரில் மருத்துவ உதவியாளராக பர்மா சீனா பகுதிகளில் பணியாற்றிய போது பாரதம் வந்து மகாத்மா காந்தியை சந்தித்தது அவரது வாழ்வில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. இந்த இளம் க்வாக்கர் மகாத்மாவின் கட்டிடக்கலை குறித்த பார்வையால் கவரப்பட்டார். பின்னர் தன் வாழ்வை பாரத சமுதாயத்தின் ஏழை எளியோருடனும், வனவாசிகளுடனும் வாழ்ந்து அவர்களின் வீடு கட்டும் சிக்கன அதே சமயம் பாரம்பரியமும் பன்மையும் சார்ந்த தொழில்நுட்பங்களால் கவரப்பட்டார். குறிப்பாக மண் சேற்றினாலான வீடு கட்டும் முறை அவரை மிகவும் கவர்ந்தது. இவ்வாறு கட்டப்படும் வீடுகள் 50-100 ண்டுகளுக்கு தாக்குப்பிடிப்பதையும் அவர் கண்டார். இந்த 5000 வருட பாரம்பரியம் அந்நிய தொழில்நுட்ப மோகத்தால் படித்த மேல்தட்டு அதிகார வர்க்கத்தால் அழிக்கப்படுவதையும் அவர்களை கீழ்தட்டு மக்களும் பின்பற்றி வருவதையும் கண்ட பேக்கர், பாரம்பரிய கட்டுமான தொழில்நுட்பத்தை மீள்கொணர தன் வாழ்வினை செலவிட்டார். இம்மண் சார்ந்த தொழில்நுட்பங்களை மேம்படுத்தவும் செய்தார். உதாரணமாக துவாரங்கள் உள்ள பாரம்பரிய பாரத பலகணிகள் மரத்தால் செய்யப்படுபவை. பேக்கர் இப்பலகணிகளை மீண்டும் கட்டிடங்களில் இணைத்தார் னால் மரத்தாலானவையாக அல்ல மாறாக சேற்று செங்கற்களால். அதன் விளைவினை பேக்கர் பணி புரிந்த கேரளத்தில் குறிப்பாகவும் பாரதம் முழுமையிலும் காணலாம். 1985 இல் பழைய கேரள முதலமைச்சரான அச்சுத மேனனின் உதவியுடன் பேக்கர் உருவாக்கிய COSTFORD (Centre for Science and Technology for Rural Development) இன்று முக்கிய குவிதன்மையற்ற தொழில் நுட்பத்தின் பரவுமையமாகியுள்ளது. மண்சேற்றுக் கட்டிடங்கள் தம் இயல்பிலேயே பேபல் கோபுரங்களல்ல. அவை வீடுகள். அவை வசிக்கவும் உழைக்கவுமான கட்டிடங்கள். அவை அதிகாரத்தின் வெளிப்பாடாக, அகங்காரத்தின் வெளிப்பாடாக எழும் விண் முட்டும் கோபுரங்களாக முடியாதவை. னால் அவை இந்த மண்ணின் தட்ப வெப்ப சூழ்நிலைகளுக்கும் மானுட சூழ்நிலைகளுக்கும் உகந்தவை. மகாத்மாவின் தொழில்நுட்ப பார்வைக்கு சான்று பகர்வதாக அமைந்துள்ளது லாரி பேக்கரின் வாழ்வு.
பாரதிய அறிவியல் வரலாற்றறிஞரும் காந்திய சிந்தனையாளருமான தரம்பால் நம் தொழில்நுட்பத்தின் தன்மையை அதன் சாதனைகளை தொகுத்துள்ளார். ‘உணவினை மிகுதியாக உற்பத்தி செய்து பகிர்ந்து உண்ணுங்கள் ‘ எனும் வேத பாரம்பரியத்தின் தொடர்ச்சியாக பாரதமெங்கும் பல யிரம் ண்டுகளாக நமது உழவு தொழில்நுட்பம் குறித்த அவரது பதிவுகள் முக்கியமானவை. அவரது வழிகாட்டுதலில் உருவான சென்னையைச் சார்ந்த Center for Indian Knowledge Systems (CIKS) நம் தேசம் சார்ந்த நெல்வகைகளை மீட்டெடுத்து வணப்படுத்தும் முயற்சியில் வெற்றி அடைந்துள்ளனர். இன்று காஞ்சிபுரத்தில் 20 கிராமங்களைச் சார்ந்த 300 விவசாயிகள் இம்முயற்சியில் CIKS வேளாண்மை அறிவியலாளர்கள் மற்றும் வேளாண்மை தொழில்நுட்ப வல்லுநர்களுடம் இணைந்து ஈடுபட்டுள்ளனர். தொடரும் பயணம் இது. வெற்றிகள் முடிவுகள் என கருதமுடியாதவை கும். ஒவ்வொரு வகை நெல்லும் ஒவ்வொரு வித வேளாண் சூழலில் உருவானதாகும். எனவே அவற்றின் விதைத்தல் முதல் அறுவடை வரையிலான வேளாண் நடவடிக்கைகள் மற்றும் நவீன அறிவியலின் வெளிச்சத்தில் அவற்றை மேம்படுத்துதற்கான வழிவகைகளும் மாறுபடும். அவற்றை அறிய அறிவியலாளர்கள் மண் சார்ந்து சிந்தித்து செயல்படுவது அவசியமாகும். அத்தகைய முயற்சிகள் மேலும் அறிவியல் வளரவும் வழி வகுக்கும்.
மகாத்மா நியூட்டானிய அறிவியல் காலனிய சூழலில் தொழில்நுட்பமாக உருவாகிய இயந்திரங்களைச் சந்தித்தார். கிறிஸ்தவ மதிப்பீடுகள்,காலனிய பார்வை, நியூட்டானிய-கார்ட்டாசிய பிரபஞ்சவியல் கியவை இணைந்து உருவாக்கிய இயந்திரங்கள் அவை. அவை சார்ந்த வாழ்க்கை, அவை சார்ந்த பொருளாதாரம் கியவை பாரத சூழலில் திணிக்கப்பட்டதன் விளைவாக பாரதியர்கள் தங்கள் சுதந்திரத்தை வெறும் அரசியல் அளவில் மட்டும் இழக்கவில்லை என்பதையும், இன்னமும் ழமான இழப்புகளை அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்பதனை அவர் உணர்ந்து கொண்டார். இதற்கு மாற்றாக தாம் இழந்தவற்றை மீட்டெடுக்க அவர் நம் சமுதாயங்களிலிருந்து, நம் சமுதாய மரபறிவு மற்றும் சமுதாய தேவைகள் கியவற்றிலிருந்து எழும் தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார அமைப்புகள் உருவாக்கப்படுவதன் மூலமே முடியுமென கருதினார். அத்தகைய தொழில்நுட்பம் குவிதன்மையற்றதாக இருக்கவேண்டும்; எளிமையுடையதாக இருக்கவேண்டும்; இயற்கையுடன் இணைந்ததாக இருக்கவேண்டும்; முழுமைதன்மை உடையதாக இருக்கவேண்டும் என அவர் கருதினார். சுருக்கமாக கூறினால் நியூட்டானிய அறிவியலுக்கு அப்பாலான முழுமைத்தன்மை கொண்ட அறிவியலால் ஏற்படக்கூடிய தொழில்நுட்பத்தை மகாத்மா எதிர்நோக்கினார் எனலாம். புகழ்பெற்ற வருங்காலவியலாளரும் சிரியருமான ல்வின் டாப்லர் புதிய இயற்பியல் சார்ந்த ற்றல் உற்பத்தி குவித்தன்மை அற்றிருப்பதையும் அத்தகைய ற்றலால் மற்றும் அது சார்ந்த தொழில்நுட்பத்தால் நெய்யப்படும் புதிய சமுதாயம் ‘மூன்றாம் அலை ‘யாக பரவுவதை குறிப்பிடுகிறார். வளரும் நாடுகளில் இந்த அலையின் தாக்கத்தை விவாதிக்கையில் அவர் எவ்வாறு இந்த தொழில்நுட்பம் காந்திய சிந்தனைகளுடன் ஒத்திசைகிறது என காட்டுகிறார். அவர் வார்த்தைகளில்,
‘எவ்வாறு கிராமம் நோக்கிய, மென்-ஓட்டமுடைய, முதல் அதிகமற்ற கிராம தொழில்நுட்பங்கள் சில தேர்ந்தெடுக்கப்பட்ட கடும் தொழில்நுட்பங்களுடன் இணைந்து, இவ்விரு தொழில்நுட்பங்களையும் மேம்படுத்தும் பொருளாதார அமைப்புகளை உருவாக்குவதென நம்மால் நம் மனக்கண் முன் காண முடிகிறது. ஜகதீஷ் கபூரின் வார்த்தைகளில் ‘ காந்திய பார்வையில் உருவாகும் அமைதியான பசுமை நிறைந்த கிராமக் குடியரசுகளுக்கும் இன்றைய அறிவியல் தரும் தொழில்நுட்பத்திற்கும் ஒரு இசைவினை உருவாக்க முடியும். ‘ அத்தகைய இசைவு என்பது எளிதில் உருவாவததல்ல. கபூர் கூறுகிறார், ‘அத்தகைய நடைமுறை சாத்தியமான இசைவு சமுதாயத்தின் முழுமையான மாற்றத்தை அவசியமாக்குகிறது. அம்மாற்றம் அதன் கல்வி அமைப்பில், அதன் குறியீடுகளில் அதன் மதிப்பீடுகளில், அதன் அறிவியல் தொழில்நுட்ப ராய்ச்சிகளில், அதன் ற்றல் மூலங்களின் பயன்பாட்டின் ஓட்டத்தில் என அனைத்திலும் பரவ வேண்டும்.”
எனினும் என்றென்றும் வளர்ந்து வரும் சிந்தனையாளர்கள், அறிவியலாளர்கள், சமுதாய சேவகர்கள் என ஒரு கூட்டம் இந்த இசைவினை நாம் அடைய உழைக்கின்றனர். சுருக்கமாக – காந்தி செயற்கை கோள் தொழில்நுட்பத்துடன். ‘ வளங்குன்றா வளமை காணும் தொழில்நுட்பம் முழுமையான அறிவியல் பார்வையையும் மரபினையும் இசைவிப்பதாக மாசற்றதாக எளிமையும் அழகும் கொண்டதாக மக்களின் சுயசார்பினை மேம்படுத்துவதாக அமைய வேண்டுமெனும் மகாத்மாவின் தொலை நோக்கு பார்வை க்வாண்டம் அறிவியல் புரட்சியால் சாத்தியமாயிற்று-குறிப்பாக தகவல் தொழில்நுட்ப புரட்சி இவ்விதத்தில் காந்திஜியின் கனவை நனவாக்கும் தன்மைத்தது. வளங்குன்றா தொழில்நுட்பங்களை வளர்த்தெடுத்து மக்கள் வாழ்வுடன் இசைவிப்பதில் அரசின் இயலாமையை மகாத்மா அறிந்திருந்தார். இதற்காக பாரத தொழில் முனைவோர் தம்மை தர்மகர்த்தாக்களாக மாற்றிக்கொண்டு மக்களுக்கு சேவை செய்ய தம்மை முற்படுத்த வேண்டுமேயன்றி மக்களிடமிருந்து செல்வத்தை அபகரிக்க முயலக்கூடாது என அவர் கூறினார். இந்திய வணிக சமுதாயங்கள் பொதுவாகவே இவ்விதியை அறிந்திருக்கின்றன. லாபத்தின் முன் சுபத்தினை வைப்பது (Welfare before Profit) அனைத்து பணியா மற்றும் வைசிக சமுதாயத்தினர் பாரதம் முழுவதும் அறிந்த ஒன்று. இன்றோ இது வெறும் நாள்காட்டியின் லஷ்மி படத்தின் மேல் பொறிக்கப்படும் வாசகமாக மாறிவிட்டது. எனினும் நாம் அம்மதிப்பீட்டினை நம்மில் இழந்து விடவில்லை. நம் பொருளாதார கல்வியில் இப்பொருளாதார பார்வை மீண்டும் கொணரப்பட வேண்டும். இன்று பசுமை முதலாளித்துவம் வளர்ந்த நாடுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. வளரும் நாடுகள் மீது அவை மற்றொரு சங்கிலியாக பிணைக்கப்படும் சாத்திய கூறும் உண்டு. நாமோ நம் தொழில்நுட்ப அணுகுமுறையையும் சர்வ தேச சந்தையின் தன்மையையும் அதன் விசைகளையும் நாம் முயன்றால் மாற்றி அமைக்க முடியும். அதற்கான உழைப்பு பன்முகத்தன்மை கொண்டதாகும். காந்திய இராட்டை அதற்கான வழிமுறைகளை கற்பிக்கிறது.
? மரபு சார்ந்த தொழில்நுட்பங்களை கண்டறிதல்
? அவற்றை அறிவியல் சார்ந்து மேம்படுத்தல்
? அவற்றுக்கான பிராந்திய சந்தைகளை ஏறப்டுத்துதல்
? அவற்றை இணைத்து ஒரு தேசிய சந்தையை ஏற்படுத்துதல்
உற்பத்தி-தேவை- இலாபம் மட்டுமல்லாது புண்ணியம்-சுபம் கியவை சந்தையுடன் இணைகையில் நாம் நமக்கு நம் நூறுகோடி மக்களின் உண்மையான தொழில்நுட்பத் தேவையையும் அதன் மேம்பாட்டையும் அத்தகைய தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய கற்றறிவை வழங்கும் கல்வி அமைப்பையும் உருவாக்குவோம். மொழியியல் பன்மை, இறையியல் பன்மை கியவை ஒருங்கிணைந்த பண்பாட்டு பன்மை பேணல் குவிதன்மையற்ற மண்சார்ந்த தொழில்நுட்ப உருவாக்கலுக்கு முக்கிய பங்களிப்பவை. நமது மேன்மை தங்கிய பாரத குடியரசு தலைவரும் பாரத அரசின் முன்னாள் முதன்மை அறிவியல் லோசகருமான பாரத ரத்னா வுல் பக்கீர் ஜெயினுலாப்தீன் அப்துல் கலாம், யக்ஞசுவாமி சுந்தரராஜனுடன் இணைந்து எழுதிய ‘இந்தியா 2020 ‘ நூலில் நம் தேச உயிரிப்பன்மை குறித்தும் அவற்றைப் பேணி பாதுகாப்பதுடன் நம் தேச மேம்பாட்டிற்கு பயன்படுத்துவது குறித்தும் கூறுகிறார். டாக்டர் டி.என்.கோஷின் ய்வு அடிப்படையில் உயிரிப்பன்மைக்கும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்குமான ஒரு வரைகோவையினை (Graphic matrix) காட்டுகிறார். அதில் வடக்கு நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து ஜெர்மனி போன்றவற்றை தொழில்நுட்ப வளமும், உயிரிப்பன்மைத்தன்மையில் வறுமையும் கொண்டவை என்பதும், பாரதம் (மற்றும் சீனா, பிரேசில், எத்தியோப்பியா) உயிரிப்பன்மைத்தன்மையில் வளமும் தொழில்நுட்ப வறுமையும் அதிகமாக விளங்குவதையும் நாம் காணலாம் (இந்தியா 2020 பக். 183). இந்நிலையில் தொழில்நுட்ப முன்னேற்றம் பெருவதென்றால் உயிரிப்பன்மை வளம் பலியிடப்படுவதென்பது அவசியம் தானா ? முன்னேற்றத்திற்கான வழிமுறைகள் மேற்கத்திய அறிதல் மூலம் மட்டும்தான் பெற முடியுமா ? கலாம் & சுந்தரராஜன் கூறும் கருத்துகள் சூழலியலுக்கும், வளர்ச்சிக்கும், பண்பாட்டு பன்மைக்குமான உறவுகளை அடிகோடிட்டு காட்டுகின்றன. மேலும் இரு உலகின் பெரு நலன்களும் பெற நாம் நம் அறிவு அமைப்புகளின் அடிப்படையில் இயங்கி உலக முதன்மை பெற முயல வேண்டும். இதற்கான நடைபாதை வரை படத்தை அளிக்கின்றனர் அப்துல் கலாமும் சுந்தரராஜனும்: ‘நம் பண்டைய சமுதாயங்களின் திறமைகளும் அறிவாற்றலும் எல்லாம் பகுத்தறிவு அற்றவை என்றும் முழுவதும் நிரூபிக்கப்படாதவை என்றும் பல்வேறு காரணங்கள் அடிப்படையில் அறிவியல் அணுகு முறையாளர்களால் ரம்பக்காலங்களில் வெறுத்து ஒதுக்கப்பட்டன. பெரும்பாலும் அரைகுறை வளர்ச்சியுற்ற மேட்டுக்குடி மக்களும் இத்தகைய தொன்மையான திறமைகளையும் அறிவாற்றலையும் உதாசீனப்படுத்தினர். வளர்ச்சி அடைவதில் நாம் காட்டிய அவசரம் சில வளர்ந்த நாடுகளினைப் பிரதி எடுப்பது போன்ற போலித்தோற்றம் காட்டியது.
தொழில்நுட்பங்களின் அதீத வளர்ச்சிப் பெருக்கமும், அதன் விளைவாக எழுந்த அபாயகரச் சுற்றுச்சூழலும், ஏனைய பிரச்சினைகளும் சிந்தனையாளர், விஞ்ஞானியர் தொழில்நிபுணர் போன்றோர் தம் ஒற்றை வழித்தட அறிவுத்தேடல் அணுகுமுறை மீதே வினாக்கள் எழுப்ப வழி வகுத்தன. அதனைத் தொடர்ந்து பழங்குடி இனத்தவரிடை புழக்கத்தில் இருக்கும் தொன்மையான அறிவுத்தளங்கள் மறுபார்வைக்கு உள்ளாயின. பாரம்பரிய மருந்துகள், மூலிகைப்பயன்பாடுகள் – அன்றியும், உலோகவியலிலும் கூட நம் முன்னோரின் அறிவுத்தகவல்கள் திரட்டப்பட்டன. இத்தகைய தகவல் வடிவங்களைப் பகுத்து ராய்ந்திட வேண்டும். பின்னர், இந்தத் தொல்லறிவுக்கும், அனுபவ ஞானத்திற்கும் உள்மதிப்பு கூட்டுவதற்காக நவீன அறிவியல் செயல்முறைகளையும், புதிய தொழில்நுட்ப வழிமுறைகளையும் நாம் எடுத்தாளலாம். இதுவே வேம்பு, புளி, மஞ்சள் பாசுமதி அரிசி போன்றவை தொடர்பாக பிற நாடுகள் மேற்கொண்ட ஒவ்வொரு கண்டுபிடிப்புப் பிரவாகத்திலும் நாம் கண்டறிந்த உண்மை.” (இந்தியா 2020, பக். 184-185) எந்த தொழில்நுட்பமும் வெற்றிடத்தில் எழுவதில்லை. மேலும் மக்கள் வாழ்வோடு ஒரு தொழில்நுட்பம் இசைவடைந்திட ஒரு சந்தையின் பலமான விசைகள் மிகவும் அவசியம். மிகவும் அத்யாவசியமான மண்ணோடொத்த தொழில்நுட்பங்களும் கூட சோஷலிச சர்க்கார் இயந்திரத்தால் பரப்பப்பட இயலாமல் தோல்வியடைந்ததை நாம் சாணஎரி வாயு குறித்த கட்டுரைத்தொடரில் கண்டோம். அதற்கு மாற்றாக எத்தகைய சமுதாய அமைப்பினை குவித்தன்மையற்ற தொழில்நுட்ப வளர்த்தெடுப்புக்கு முன்வைக்கலாம் ?
லாபத்தை தேடுதல் என்பது மானுடத்தின் அடிப்படை விழைவுகளில் ஒன்று என்பதனை பாரத தத்துவம் ஏற்றுக்கொள்கிறது. நமது தொழில்நுட்பம் இலாபத்தை தேடுபவர்களுக்கு ஈர்ப்பாக அமைதல் வேண்டும். அதே சமயம் எந்த இன்பவிளைவையும் தர்மத்திற்கு கீழாக்குகிறது கண்ணன் வாக்கு. ‘தர்மத்திற்கு ஊறில்லாத இன்பவிழைவே இறை வெளிப்பாடு ‘ என்கிறது பகவத் கீதை. எது தர்மம் ? பலவித தர்மங்கள் பல சாத்திரங்களில் பேசப்பட்டாலும் அனைத்துயிர்களுக்கும் தீது செய்தாது வாழ முயல்வதே பரம தர்மமாக எக்காலத்திலும் தொடர்ந்து முன்னிறுத்தப்படுகிறது. (அகிம்சையே பரம தர்மம்). இத்தனிமனித லாப விழைவு தர்மத்தை கணக்கில் கொண்டதாக அமைகையில் சுபம் லாபத்தினை விட முன்னிலை பெறுகிறது. இத்தகைய வாணிப முயற்சிகளால் அமைக்கப்படும் சந்தை உண்மையான பாரதிய சந்தையாக எழ முடியும். இந்திய சோஷலிச அமைப்பின் அரசு ‘இயந்திரமும் ‘ சரி அதற்கு முந்தைய காலனிய அரசு இயந்திரமும் ‘ சரி மக்களிடமிருந்து அன்னியப்பட்ட அமைப்புகளாக, அறிவிலி ஜன மந்தைகளை அடக்கிளும் அறிவுக்குழுக்களாக தம்மை சித்தரித்தே இயங்கியுள்ளன. இதற்கு மாறாக மக்களையும் அதிகாரிகளையும் தலைவர்களையும் இணைக்கும் ஒரு அடிப்படையாக புண்ணியம் எனும் தளத்தின் அடிப்படையில் அரசு இயங்கவேண்டும் என்கிறார் கலாம். இத்தகைய நம் பாரம்பரியம் சார்ந்த அமைப்புகளை அவற்றின் குறைகள் களைந்து நம்மால் உருவாக்க முடியுமெனில் நம் நாட்டினையும் அதன் வளர்ச்சிப்பாதையையும் மற்ற வளரும் நாடுகளுக்கும் ஒரு சிறந்த முன்மாதிரியாக காட்டத்தக்க விதத்தில் நாம் வளங்குன்றா வளர்ச்சியை நமது வருங்கால சந்ததியினருக்கு அளிக்கலாம்.
‘2020 ம் ண்டு அல்லது அதற்கு முன்னதாகவோ ஒரு வளர்ந்த பாரதம் உருவாகும் என்பது வெறும் கனவு அல்ல. இது இந்தியர் பலரின் உள்ளங்களில் இருக்க வேண்டியதோர் தொலைநோக்குக் கூட அல்ல. ஒரு பணிஇலக்கு.இதனை நோக்கி நாம் அனைவரும் ஒன்றாய்ச் சேர்ந்து செயல் படுவோம். – வெற்றி காண்போம். ‘
– ஏ.பி.ஜெ.அப்துல் கலாம்
இதுகாலும் நாம் கண்டவற்றை பின்வருமாறு காட்டலாம்:
***
- சொல்லாடலும், பிலிம் காட்டுவதும்
- தாய்மைக் கவிதை
- மனிதனாக வாழ்வோம்
- உருவாக்கம்
- அறிவியல் மேதைகள் – ஓட்டோ வான் கியூரிக் (Otto Von Guericke)
- சனிக்கோளை நெருங்கும் காஸ்ஸினி ஹியூஜென்ஸ் விண்வெளிக் கப்பல் [Cassini Huygens Spaceship Approaching Saturn Planet in 2004]
- ஜெயகாந்தனின் இந்திய முற்போக்கு அழகியல் — 2
- அழித்தலும் அஞ்சுதலும் (உமா வரதராஜனின் ‘எலியம் ‘ எனக்குப் பிடித்த கதைகள் – 72 )
- நாவலும் யதார்த்தமும்
- மனசெல்லாம் நீ!
- தஞ்சைக் கதம்பம்
- வாரபலன் ஆகஸ்ட் 14, 2003 (ஆவணப்படம், ராஜராஜன், மருத்துவ ஜோதிடம், சோடியவிளக்கு)
- பசுமைப் பார்வைகள் – சுற்றுச்சூழல் அரசியல் – 12
- சங்கப் பாடம்
- பாரதி இலக்கியச் சங்கம், சிவகாசி
- ஆடு புலி ஆட்டம்
- என்று உனக்கு விடுதலை
- நல்லவர்கள் = இஇந்தியர்கள்
- 4. இராட்டை – ஒரு வருங்கால தொழில்நுட்ப குறியீடாக
- அப்பா
- விடியும்! நாவல் – (9)
- அரசூர் வம்சம் – அத்தியாயம் பத்தொன்பது
- ஞாநியின் பார்வையில் பெரியாரின் அறிவு இயக்கம் : சில கேள்விகள்
- கடிதங்கள்
- எழுத்தாளர் கோபிகிருஷ்ணன் குடும்ப நிதி அளிக்கும் நிகழ்ச்சி
- குறிப்புகள் சில 14 ஆகஸ்ட் 2003 எம்.ஐ.டி பிரஸ் – வேனாவர் புஷ் – ஒரு கட்டுரையும், அதன் தாக்கமும் பன்னாட்டு நிதிக்கணக்காய்வு நிறுவ
- சமூக நல்லிணக்கத்திற்கு ஒரு நீண்டகால அரசியல் திட்டம் – மதச் சிறுபான்மையினர் தம் பிரசினைகளை, தோல்விகளை, வளர்ச்சிக்கான முயற்சிகளை வ
- வழியில போற ஓணான…
- சிவ -சக்தி- அணு – காஷ்மீர் சைவம் பற்றி சில குறிப்புகள்
- சட்ட பூர்வமான வரதட்சணை! வரதட்சணைத் தொகைப் பதிவு! முதலிரவு முன் ஒப்பந்தம்! பெண்வீட்டார் மனமுவந்து ஒப்புக் கொள்ளும் இவற்றை முதலில்
- வேர்களைத் தேடி… – பயணக் குறிப்புகள் 3
- தாயே வணங்குகிறோம்
- ராஜீவின் கனவு
- எந்திர வாழ்க்கை
- சுவைகள் பதினாறு
- செயலிழந்த சுதந்திரம்.