மலர் மன்னன்
சாதியின் அடிப்படையில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு தொடர்பாக எச்.ஜி. ரசூல் கட்டுரையினைப் படித்தேன். எனக்குத் தெரிந்ததையும் திண்ணை வாசகர்களுடன் சிறிது பகிர்ந்து கொள்ளலாம் எனத் தோன்றியது.
பழங்குடியினர் எனக் கூறப்படும் வனவாசிகளைப் பொருத்த மட்டில் அவர்கள் சார்ந்துள்ள மதம் கருத்தில் கொள்ளப் படுவதில்லை. வனவாசிகளுக்கு சாதி என்ற கட்டமைப்பு ஏதும் பதிவாகவில்லையாதலால் ’பழங்குடியினர்’ பட்டியலில் இடம் பெறுள்ள எல்லா வனவாசிப் பிரிவினருமே ஒதுக்கீடு சலுகைக்குரியவர்களாகவே அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். பொதுவாக வனவாசிகள் அனைவருமே மிகவும் பின்தங்கியிருப்பதாகக் கொள்ளப்படுவதால் அவர்களுக்கு இவ்வாறான பரிவு காட்டப் படுகிறது. இந்த வாய்ப்பு தலித்துகளுக்கு இல்லை. ஏனெனில் அவர்கள் சாதி என்ற கட்டமைப்புக்குள் வந்துவிடுகின்றனர். அட்டவணைச் சாதியினர் பட்டியலில் இடம் பெறும் தலித்துகளில் ஹிந்துக்களாக நீடிப்பவர்களூக்கு மட்டுமே இட ஒதுக்கீடு கோரும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. காரணம், கிறிஸ்தவம், முகமதியம் ஆகிய மதங்களில் சாதி உணர்வு நிலவிய போதிலும் சமூக ஆவணப்படி சாதியமைப்பு இல்லை. ஆகவே சாதியின் பெயரால் புறக்கணிப்பு இருப்பதாக கிறிஸ்தவராகவோ முகமதியராகவோ மதம் மாறிய தலித்துகள் சாதியின் பெயரால் இட ஒதுக்கீடு சலுகை கோரும் உரிமையினை இழந்தவர்களாவார்கள். மேலும் எங்கள் மதத்தில் சாதியில்லை , சாதியடிப்படையில் ஏற்றத் தாழ்வுகளும் இல்லை என்று ஆசை காட்டியே தலித்துகள் மத மாற்றம் செய்யப்படுவது வழக்கத்தில் இருந்து வருகிறது.
இட ஒதுக்கீடு சலுகை கோரும் உரிமையைப் பெற வேண்டும் என்பதற்காகவே மதம் மாறிய தலித்துகளைத் ’தாற்காலிகமாக’ ஹிந்து மதத்திற்குத் திரும்புமாறு ஆலோசனை கூறும் கிறிஸ்தவ குருமார்களும் உள்ளனர். .
சாதி-மத வேறுபாடின்றி இட ஒதுக்கீடு சலுகை பெறும் வாய்ப்பு வனவாசிகளுக்கு இருப்பதால் மலைப் பிரதேசங்களில் பழங்குடி யினர் என அறியப்படும் வனவாசிகளிடையே வாழும் கிறிஸ்தவர் களாக மதம் மாறிய தலித்துகள், தம்மையும் வனவாசிகளாக அறிவிக்கும் சான்றிதழை லஞ்சம் கொடுத்தோ அதிகார செல்வாக் கின் துணையுடனோ பெற்று கல்வி, வேலை வாய்ப்புகளில் வனவாசிகளுடன் போட்டிக்கு வந்துவிடுகிறார்கள். இதனால் வனவாசிகளுக்கும் தலிதுகளுக்கும் இடையே மோதல் உருவாகிறது. ஒரிஸ்ஸாவின் கண்டஹார் மாவட்டத்தில் இதுதான் நடக்கிறது. வனவாசிகளான காண்டோக்கள் பெரும்பான்மையினராக உள்ள அந்த மாவட்டத்தில் பாணோ என்ற கிறிஸ்தவராய் மதம் மாறிய தலித்து சாதியினர் பிற பகுதிகளிருந்து வந்து குடியேறியதுமல்லாமல் காலப்போக்கில் தாமும் வனவாசியினரே என்று கூறிச் சான்றிதழ் பெறத் தொடங்கினார்கள். மிஷனரிகளின் செல்வாக்கு இதற்குப் பக்கபலமாக இருந்தது. இதன் விளைவாகக் காண்டோக்களுக்கும் பாணோக்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல்தான் கிறிஸ்தவர் கள் மீதான தாகுதல் எனத் திரித்துப் பிரசாரம் செய்யப்பட்டது. பலம் வாய்ந்த பொய்ப் பிரசாரத்தின் ஆரவாரத்தில் உண்மை அமுங்கிப் போனது. இந்த மோதல் சமயத்திலும் அதன் பிறகு 2009 பிரவரி மாதமும் காண்டஹார் மாவட்டத்திற்குச் சென்று பல நாட்கள் தங்கியிருந்த நான் நேரில் கண்டறிந்த நிலைமை இது. மத்தியப் பிரதேசம், பிஹார் ஆகிய மாநிலங்களில் தனி நபராக நான் வனவாசிகள் நலனுக்காக சக்தி வாய்ந்த மிஷனரி களை எதிர்த்துப் போராடி வந்த கால கட்டத்திலும் ஆங்காங்குள்ள கிறிஸ்தவராய் மதம் மாறிய தலித்துகளை வனவாசிகள் பகுதி யில் குடியமர்த்தி, அவர்களுக்கும் வனவாசிகள் எனச் சான்றிதழ் கிடைக்கச் செய்யும் முறைகேட்டில் மிஷனரிகள் ஈடுபட்டு, தமது பணபலம், அதிகார வட்டாரச் செல்வாக்கு ஆகியவற்றைப் பயன் படுத்தி, தம்து முயற்சியில் வெற்றி பெறுவதையும் நேரில் கண்டு எதிர்ப்புத் தெரிவித்துக் கடும் விளைவுகளையும் சந்தித்திருக்கி றேன்.
உயர் சாதி மயமாக்கம், சமஸ்க்ருதமயமாக்கம் என்பதெல்லாம் மெத்தப் படித்த அறிவாளிகள் கண்டுபிடித்து உபயோகப்படுத்திக் காலாவதியாகிப் போன சமாசாரங்களாகும். இன்று சாதி அடிப் படையில் கணக்கெடுக்காமலேயே தாம் சிறுபான்மையினர் என்பதை உயர் சாதியினர் மட்டுமின்றி ஆட்சியாளரும் அறிந்தே உள்ளனர். வாய்ப்புக் கிடைத்தால் பிற்படுத்தப்பட்ட சாதி என்று சான்றிதழ் பெற உயர் சாதியினர் பலரும் தயாராக இருக்கிறார்கள் என்பதும் தெரிந்த விஷயம். அவ்வாறு பலர் தமது சாதியில் ஏதேனும் ஒரு உட்பிரிவு பிற்பட்டோர் பாட்டியலில் இருப்பதைக் கண்டு அந்த உட்பிரிவுச் சாதியைச் சொல்லிச் சான்றிதழ் பெறுவதும் வழக்கத்தில் உள்ளது.
சாதியின் அடிப்படையில் கணக்கெடுப்பு விவரங்கள் வெளிவருமா னால் பெரும்பான்மை-சிறுபான்மைச் சலுகைகள் கோரி ஹிந்துக் களிடையே சண்டை சச்சரவுகள் மிகுதியாகும். ஏற்கனவே ஒற்றுமை போதாத ஹிந்துக்களிடையே ஒற்றுமையின்மை மேலும் தீவிரமடைவதற்குத்தான் சாதிவாரிக் கணக்கெடுப்பு வழிசெய்யும்.
ஹிந்து சமுதாயத்தில்தான் சாதி என்ற கட்டமைப்பு வெளீப்படை யான பதிவாக இருந்து வருகிறது. சாதியின் அடிப்படையில் கணக்கெடுப்பு கோருபவர்கள் ஹிந்துக்களை சாதி என்கிற கட்டமைப்பில் நிரந்தரமாகப் பிரித்து வைக்க வேண்டும் என்று விரும்புபவர்களாகத்தான்.இருக்கக்கூடும்.
இன்று சாதியற்ற சமுதாயம் காணும் கருத்தாக்கம்தான் நாடெங்கிலும் வலுப்பெற்று வருகிறது. எனவே சாதியின் பெய்ரால் பிரிவினை உணர்வை வலுப்படுத்தலாகாது என்பதால்தான் சாதியின் அடிப்படையில் கணக்கெடுப்பு வேண்டாம் என வலியுறுத்தப்படுகிறது. காலம் காலமாக இருந்துவரும் தெருப் பெயர்களில் சாதியை அழிப்பது மட்டுமே சாதியொழிப்பு என்று கருதுபவர்கள்தான் இன்று சாதிகளைக் கட்டி அழுகிறார்கள். இவர்கள்தான் சாதியின் அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுக்கப்பட வேண்டும் என்கிற கோரிகைக்கும் வலுவேற்றி வருகிறார்கள்.
ஹிந்த்துக்களா? அவர்கள் எங்கே இருக்கிறார்கள்? அய்யர், அய்யங்கார், முதலியார், செட்டியார், வன்னியர், பிள்ளைமார் , நாடார், தாழ்த்தப்பட்டவர்கள் என்றெல்லாம்தான் இருக்கிறார்களே யன்றி, மற்றபடி ஹிந்துக்கள் என்பதாக யார் இருக்கிறார்கள்? என்று எகத்தாளமாகக் கேட்பவர்கள் நம்மிடையே இருக்கிறார்கள். அவர்களையெல்லாம் மகிழ்விப்பதற்கும் சாதியின் பெயரால் ஹிந்துக்கள் தமக்குள் சச்சரவிட்டுக்கொண்டு பிறர் முன்னிலை யில் நகைப்புக்குள்ளாவதற்கும்தான் சாதியின் அடிப்படையிலான கணக்கெடுப்பு பயன்படும்.
++++ .
- சார்த்தர், பூவாஹ், எங்கல்ஸ் – நேர்மையும், உதாரண புருஷர்களும்
- நண்பர்கள் வட்டம்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரவில் அடிக்கும் காற்று கவிதை -11 – பாகம் -3
- வேத வனம் விருட்சம் 89 –
- நடப்பு
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) என்னைப் பற்றி – போதை மருந்துகளும் பிளக்கும் கத்திகளும் கவிதை -29 பாகம் -3
- பரி நகரில் கம்பராமாயாணம் முற்றோதல் நிறைவு விழாவும்
- To Kill a Mockingbird
- சாகித்ய அகாதெமி இலக்கிய நிகழ்ச்சி
- அன்புடையீர்
- சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -18
- செவ்வாய்க் கோளைச் சுற்றிவரும் இரு வக்கிரச் சந்திரன்கள் ·போபாஸ் & டைமாஸ் (Mars Two Irregular Moons : Phobos & Deimos)
- குழந்தைகள் எப்போதும் மூக்கை குடைவது ஏன்?
- நடக்கப்பழகியிருந்தேன்…
- உஷ்ண வெளிக்காரன்
- கால தேவன்
- விஸ்வரூபம் – அத்தியாயம் அறுபத்தைந்து
- காதலில் விழுந்தேன்
- ரிஷி கவிதைகள்
- சுவடு
- குமிழ் மொட்டெனப் பூத்த பால் வீதி..!
- ஹிந்துக்களா? அவர்கள் எங்கே இருக்கிறார்கள்?
- ஆதியோடு அந்தமுமாக ஒளிவு மறைவில்லாத இந்து சமய தத்துவங்கள் God Project: Hinduism as Open-Source Faith
- அந்தமானில்……
- முள்பாதை 33
- களம் ஒன்று கதை பத்து – 4 ஆப்பிள் அறிவித்த ஏவாள்
- ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -21
- காகிதக் கால்கள்
- ஆட்டோ பயோகிராபி ஆப் சைல்ட் 1 (சைப் டைட்டில் : நித்திய சோதனை)
- நடுக்கடலில்…
- ஏ.தேவராஜன் 2 கவிதைகள்