ஸ்ட்ராபெர்ரி சாஸ்

This entry is part [part not set] of 28 in the series 20050526_Issue

திண்ணை சமையல்


Strawberry sauce

தேவையான பொருட்கள்

2/3 கோப்பை சர்க்கரை

1/2 கிலோ ஸ்ட்ராபெர்ரிகள்

1/3 கோப்பை தண்ணீர்

1 மேஜைக்கரண்டி எலுமிச்சை சாறு

செய்முறை

தண்ணீரையும் சர்க்கரையையும் ஒரு பாத்திரத்தில் வைத்து கொதி வரும் வரை சூடாக்கவும். அதன் பின்னர் தீயை மெதுவாக்கி, சர்க்கரை முழுவதும் கரையும் வரை வைக்கவும். சிரப் முழுவதும் குளிரும் வரை வைக்கவும்.

பாதி அளவு ஸ்ட்ராபெர்ரிகளை ஒரு மிக்ஸியில் போட்டு அடித்து அத்துடன் எலுமிச்சை சாறு, சர்க்கரை சிரப் ஆகியவற்றை சேர்க்கவும். மென்மையாகும் வரை மிக்ஸியில் அரைக்கவும். இதன் பின்னர் மீதமுள்ள ஸ்ட்ராபெர்ரிகளை கரடுமுரடாக அரைத்து இத்துடன் சேர்க்கவும். ஸ்ட்ராபெர்ரி சாஸ் தயார்

Series Navigation

கர்னாடகா சமையல்

கர்னாடகா சமையல்