ஸைலோசைபின்: C12H17N204P – க்கு அப்பால்

This entry is part [part not set] of 35 in the series 20060922_Issue

மண்ணாந்தை



காளான்களின் வாழும் தெய்வத்தைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

அந்த தெய்வம் காளான்களில் வசித்திருக்கும்.

ஏதென்றறியா உணர்வொன்று உந்தித் தள்ள
வேச அனுபவம் தேடும்
மானுடக் கரங்களுக்காக காத்திருக்கும் காளான்களில் அந்த தெய்வம்.
பறிக்கப்பட்ட காளான்களில் விதம் விதமான சடங்குகளில் மகிமைப்பட்டு மானுடத்தில் உள்ளேறும்.
யிரமாயிரம் வண்ணங்களில் வெடித்துச் சிதறும்.
காலவெளியின் சட்டகங்கள் இரும்பிழந்த இருப்படையும்.
கற்பனையும் கண்டறியா பூக்கள் உயிர் துடிப்புடன்
நட்சத்திரங்களாகி அக வானை நிரப்பும்.
பின் அவை வண்ணத்து பூச்சிகளாகி பறந்து மறையும்.
ஒற்றைக் கொம்புடன் பாதரசக் கடலில் நீந்தும் குதிரைகள்.
காளான் தெய்வத்தின் வியர்வை முத்துக்கள்.
உச்சவெளியில் மனம் அடங்க
எழும் கவிதை வேசமாக தரிசிக்கும்
ஏதுமற்ற எதுவுமான ஏதோவொன்றின்
இருப்பினை அல்லது இருப்பின்மையை.
அனைத்து உச்சங்களும் உன்னதத்தைத் தொட்டகல
நனவும் கனவென ஆழம் கண்ட அதி-கனவின் வெளி அகலும்.

ஆனால் காளான்களின் வாழும் தெய்வத்தின் வரலாற்றைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

பெருங்கப்பல்கள் வரும் எங்கிருந்தோ
அவற்றில் இறங்கும் சீருடைகளின் கரங்கள்
வேசம் வேண்டாத
உறைந்த அதி ஒழுக்க அதிகாரக் கரங்கள்
கூர்மையான உலோக யுதங்களுடன்
தேடி எரித்தழிக்கும் காளான் தெய்வத்தை.
என்றாலும் எப்படியோ
மறைந்து மறைக்கப்பட்டு மீண்டும் எழும் காளானின் தெய்வம்
சிலுவைகளும் இரத்த உடன்படிக்கைகளும் இல்லாத உயிர்த்தெழுதல்
விசுவாசம் வேண்டாது அனுபவத்தேடலில் எழும் உயிர்த்தெழுதல்
அலை கடலோரம் கரையோரம் அமைந்த மணல் அறைகளில்
வெள்ளைச் சீருடை உபாசகர்கள்
விசித்திர சங்கிலி வடிவங்களில் காளான் தெய்வத்தின்
உட்கூறுகளை கண்டறிந்து வடித்தெடுக்க
மீண்டும் காளானில் உறையும் தெய்வத்தின் உயிர்த்தெழுதல்
அல்லது சிறைப்படுதலா?

ஆனால் காளான்களின் வாழும் தெய்வத்தின் வருங்காலத்தைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

மூலக்கூறு வடிவங்களுக்கும்
பதிப்புரிமைகளுக்கும் சட்டங்களுக்கும்
தப்பி
உயிர்த்தெழுந்த காளான் தெய்வம் உள்ளெங்கும் அதிரும்
நியூரானிய மின்னணுக் கோலங்களுக்கு அப்பாலான
ஏதுமற்ற தானாகும் அனுபவத்தின் ஏணியாக
மீண்டும் மானுடமெங்கும்.

“Magic mushrooms really cause ‘spiritual’ experiences’” – நியூ சயிண்டிஸ்ட், 11 ஜுலை 2006.

– மண்ணாந்தை

Series Navigation

மண்ணாந்தை

மண்ணாந்தை