வைகுண்டக் குடும்பம்

This entry is part [part not set] of 31 in the series 20020623_Issue

அனந்த் (அனந்தநாராயணன்)


பாற்கடலில் படுத்திருந்த போது-அங்குப்
பருகவொரு சொட்டுங்கிடைக் காது

ஆயர்பாடி வந்துதித்தான்
அள்ளியள்ளிப் பால்குடித்தான்

பார்த்தஅன்னை கையில்அவன் காது!

***************

கையினிலே மாடுமேய்க்கும் கம்பு-செய்வான்
காலமெல்லாம் மாதருடன் வம்பு

கல்விகற்கும் காலமெல்லாம்
கண்டபடி போக்கினாலும்

கீதைசொல்ல அவனுக்குண்டு தெம்பு! (-அது
கடவுளுக்குத் தான்முடியும் நம்பு!!)

***************

மார்பினிலே அமர்ந்திருந்த மங்கை – தந்த
மயக்கத்திலே நழுவப்போன சங்கை

உந்தியிலே உதித்த மகன்
உடனெடுத்துக் கொடுத்துஇந்த

உலகுமெச்சச் செய்தானவன் பங்கை!

***************
ananth@mcmaster.ca

Series Navigation

அனந்த் (அனந்தநாராயணன்)

அனந்த் (அனந்தநாராயணன்)