வேத வனம் – விருட்சம் 42

This entry is part [part not set] of 39 in the series 20090716_Issue

எஸ்ஸார்சி


பிரகசுபதியின் புகழ் போற்று
போஷி இணங்கியிரு
வீரம் வரும் வல்லமை கூடும்
பகைவர் அழிவர்
பிரம்மனை ஆராதிக்கும் அரசன்
சொந்த மனையில் சிறக்கிறான்
புவி எப்போதும் அவனுக்குக் கனி வழங்கும்
மக்கள் வலிய வந்து அவன்முன்
வணக்கம் சொல்வர் ( ரிக் 4/50)

சூரிய க்குமாரிகள்
இவ் உஷைகள்
இருட்டை மறைப்பவர்கள்
யான் கவுதமன்
வேள்வியை அறிவிப்பவன்
சனம் நடுவே எமக்குப்
புகழ் நிலைக்க
வீரப்புதல்வர்கட்கு
யாம் தலைமை பெறுக ( ரிக் 4/51)

சவிதா வை புகழ்வோம்
மநுவின் சந்ததிகட்குச்
செல்வம் அருள்பவன் சவிதா
அறிவின்மை அசக்தி அகம்பாவம்
இவைகொண்டு
யாம் சவிதாவுக்கும்
பிற மனிதர்க்குமிழைத்த குற்றங்கள் போக்குவான்
ஒளிக்கிரணங்களைப் பரத்துபவன் சவிதா
புவி வளம் பெறுதல்
அவனாலே சித்திக்கிறது ( ரிக் 4/54 )

நிலப்பரப்பின் தலைவனே
தேனாய் பசுநெய்யாய்
இனிய நீர்
சொரிக எமக்கு
செடிகொடிகள் இன்பம் தருக
எருதுகள் சுகம் பெறுக
கலப்பை பிணிக்கும் கயறுகள்
சுகமாய்ப்பொருந்துக
எருதேவும் சாட்டை சுகம் தருக
உழவர் எம்மொழியால் சிறப்பெய்துக
சீதா
நீயே உழுகலப்பை
நீயே வேளாண்மை
இந்திரன் நின்னைப்பற்றுக
பூஷா செலுத்துக நின்னை
பால்வளம் சிறக்கட்டும் மண்மீது. ( ரிக் 4/56 )
——————————————————–

Series Navigation

எஸ்ஸார்சி

எஸ்ஸார்சி