வேத வனம் விருட்சம் 9

This entry is part [part not set] of 45 in the series 20081023_Issue

ராமச்சந்திரன் சுந்தரேசன்


எண்ண அலைகளை
ஒழுங்கு படுத்துவதே
யோகம்.

ஆசான் வழி
அறி நீ யோகத்தை.

நினைவோட்டம்
ஔயாச்சுழல்

கட்டுக்குள் வை
எண்ணமே ஒரு பொருள்
ஔயா இயக்கம்

புரிதல் என்பது
ஒரு பொருளை
மனம் தன் கணக்கில்
வரவுகொள்வதே.

விடுபடு
இன்பமும் துன்பமும்
இணைச்சங்கிலிகள்

நன்னெறி ஆள்நெறி தாழ்நெறி
தடங்கள் மூவகை
மனம் விரையும் பாதை

தாரணை என்பது
மனம் ஒருப்படுதல்
எதன் மீதாகிலும்

தைல ஒழுக்காகும்
தியானம் என்பது
ஒரே சிந்தயை
ஒக்கக்காத்தல்.

சமாதி நிலை இருவகை
சவிகல்பம்
நிர்விகல்பம்
அறிவோன் அறிபொருள் அறிவு
மூன்றும் பயில்
சவிகல்பம்

பிறவிப்பெருங்கடல்
அது கடக்கத்துணை வரும்
நிர்விகல்பம்.

நன்நெறி ஆள்நெறி தாழ்நெறி
மேலெழு
கைவல்யம் சமீபிக்கிறது

நன்நெறி ஆன்மத்தேடல்
ஆள்நெறி ஆளுகைத்தேடல்
தாழ்நெறி தள்ள வேண்டுவன த:ளையாதல்

ஆள்நெறி தாழ்நெறி
வெல்லுக
வைராக்கியமும் ஒயாப்பயிற்சியும்
ஆயுதங்கள்.
– யோக சார உபநிசத்

Series Navigation

ராமச்சந்திரன் சுந்தரேசன்

ராமச்சந்திரன் சுந்தரேசன்