எஸ்ஸார்சி
அக்கினியே வீரன்
பசுமை த்திரவியங்கள் காக்கப்படுக
ராட்சதர்களும் தீமையே புரிவோரும்
சாம்பலானார்கள்
நிலைத்தவன் அக்கினி
நிலம் நிலைபெறுக
ஆயுள் நிலை பெறுக
மக்கள் பேறு நிலைக்க
மனம் ஒருமைப்பட்டோர்
எசமானனுக்குக்கீழாய் வருக ( கிருஷ்ணயஜுர் 1/7)
யக்ஞ அனலே
விரிந்து செல்வோன்
அவி சுமப்போன்
இனியவன் ஞானி
அகிலம் அறிந்தோன்
கவிஞன் அவன்
கருமை தருவோன்
விசாலி அவன்
சுத்திகரிப்போன்
சத்திய சொருபன்
ஏக பாதன் இவ்வக்கினி ( கிருஷ்ண யஜுர்1/31)
பாரத த்தீயே
உச்ச பட்ச இளமையே
வளமை தா
வானில் தோன்றி
வேள்வியில் வந்து
நீரில் வாழ்வோன் நீ
நல்ல வீரர்க்குயிங்கு
செல்வம் நிறைக ( கி, ய 1/42)
வேள்வித்தீயே
என் பெற்றோரிட்ட பெயர்
நினதாகட்டும்
நின் பெயர் யான் கொள்கிறேன்
அக்கினி எதிரி இல்லாதவன்
அதி பராக்கிரமன்
எப்போதும் வெல்வோன்
புனிதன் கந்தர்வன்
தேவர்களின் காப்பு
வேள்வி எங்கு செய்யப்பட்டதோ
அங்கே பயன் அதிகம் திரும்புகிறது ( கி.ய. 1/92)
தேவர்கள் ருத்விக்குகள்
கீழ்த்திசையில்
மாதங்கள் பிதிர்க்கள்
தென்திசையில்
வீடும் பசுவும்
மேல் திசையில்
நீரும் விருட்சமும்
வடதிசையில்
காத்திடுக என்றும் எம்மை
மாலின் பாதமே
பகையொழிக்கும்
மாலின் பாதமே
தீயன தீர்க்கும்
மாலின் பாதமே
அரக்கனையொழிக்கும் ( கி. ய. 1/99 )
வலிமையின் நிலையமே
இனிய மனையாளே
சொர்க்கம் புகுவோம் வா
இன்பத்தின் மூலம் பலம்
பலத்தின் மூலம் அறிவு
பிராண அபான
வியானம் பலம் பெறுக
கண்ணும் செவியும்
மனமும் வாக்கும்
ஆன்மாவும் வலிமை பெறுக
வேள்வித்தீயே
உணவுக்கு நல் உணவுக்கு போருக்கு
வெற்றி தருக ( கி. ய. 1/103 )
வேள்வித்தீயே
புவிக்கும் வானுக்கும்
தாயுக்கும் தந்தைக்கும்
யான் செய்த பிழையினின்றும்
என்னக்காத்திடுக ( கி.ய 1/111 )
உருத்திரன் வேள்வியின் காவலன்
பசு குதிரை ஆடு மாடு
மனிதர்க்கு அவுடதம் ஆகுக
திரியம்பகனை எம்மை
வலிமை செய்வோனை
முக்காலம் அறிந்தோனை
வணங்குவோம்
வெள்ளரிப்பழம் கொடியினின்று
விடுபடுதல் போலே
மரணத்தினின்று விடுபடல்
வேண்டும் யான்
அமிருதம் எப்போதும் எம்துணை ஆகுக ( கி. ய.1/112)
தாய் ஒப்பாள் பூமி
எம் வணக்கம் பூமிக்கு
புவித்தாயை இம்சிக்காதீர்
புவியும் எம்மை
இம்சித்தல் தவிர்க்கட்டும் ( கி. ய 1/120)
—————————————————————————-
- அணு ஆயுதப் போரில் விளையும் பேரழிவுகள்(கட்டுரை: 4).
- இடைத்தேர்தல்: சில பாடங்கள்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) கவிதை -2 பாகம்-5 மதுக்குடி அங்காடி (The Tavern)
- நல்லானின் புனித மோசடி கட்டுரைக்கு மறுப்பு: புதுவகை நோய்: இமி-3
- நல்லானின் புனித மோசடி கட்டுரைக்கு மறுப்பு: புதுவகை நோய் : இமி – 2
- நல்லானின் புனித மோசடி கட்டுரைக்கு மறுப்பு: புதுவகை நோய் : இமி – 1
- எனது பர்மா குறிப்புகள்
- அன்புள்ள ஆசிரியர்
- அவதார் – பழங்குடி மூதாதையர்களின் சொற்களும் அரசியலின் பிரமாண்டமும்
- “சந்திர யோகம்”
- கவிராஜர்களின் பார்வையில் விலைராணிகள்
- நவம்பர் 2009 குறுக்கெழுத்து புதிருக்கான விடை
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << ஆத்மாவின் உபதேசம் எனக்கு >> கவிதை -22 பாகம் -2
- அரேபிய ராசாக்கள்..
- இதற்குத்தானா ; இதெல்லாம் இதற்குத்தானா…….?
- வேத வனம் விருட்சம் 66
- விழுங்கப்பட்ட வாழ்வு
- காரண சரித்திரக் கவிதை
- விளம்பரங்களில்
- நுகர்வு கலாச்சாரமும் அதற்கு வள்ளுவர் தரும் மாற்றும்
- முள்பாதை 11
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) நாலங்க நாடகம் அங்கம் -4 காட்சி -4
- என் வீட்டில் வளர்ந்த ஒரு பூச்சாண்டி
- தொழில் நேர்த்தி
- தூண்டில்
- கீழ்க்கணக்கு