வேத வனம் விருட்சம் 27

This entry is part [part not set] of 37 in the series 20090312_Issue

எஸ்ஸார்சி


ஞானக்குடை
செய்தவம்
எங்கும் நிறைவு
துக்கங்கள் தொடராமை
ஆனந்தக்களிப்பு
இவை ஐந்தும்
வாழ்வில் விடுதலை
பேற்றோர் மட்டுமே
எய்தும் திரு

நீயே சாட்சி அனைத்திற்கும்
நீயே அனைத்தையும் காண்போன்
உன்மையுள் உறைபவன்
விடுதலை உணர்பவன்
யாதுமாகிய ஞான சக்தி
தளைகள் விடுத்தோன்
சுயஞ்சோதி
மாசிலான்
மகிழ்ச்சி வெள்ளத்து உள் நீ. -ஜ்யோதிர்பிந்து உபநிசத் 15-16

பிரம்மம் ஆனந்தம்
பிரம்மம் ஆனந்தமயம்
அதுவே அதி ஆனந்தம்
அனாதி ஆனந்தம்
உச்ச ஆனந்தம்
விஞ்சிவிடா ஆனந்தம்
பகுபடா ஆனந்தம்
எப்போதும் உறை ஆனந்தம்.

தோழிக்கு த்தன் மணாளனை
கூடிய கூட்டத்தின் இடை
காட்டுவது எங்ஙனம்
அங்ஙனம் அமைதியில்
தோய்ந்து மட்டுமே சுட்டுவன
எழுதிய ஏடுகள் பிரம்மத்தை.
மாசிலா மெய்ஞானம்
ஆரம்பம் முடிவு இடை
எங்கணும் தான் அறியாச்
ஒளிச் சுயம்புவே அது.

ஊனக்கண் தோற்கும்
ஐம்பொறிகள் தோற்கும்
மனமும் வெளியும்
தாண்டிய சூக்குமம் அது.
அவித்தைத்திரை
அவிழத்
தூய மனம்
துய்க்கும் அது
வசமாக நினக்கு
கேளா ஒன்று கேட்கும்
காணா ஒன்று காட்சிப்படும்
சிந்தனைக்கெட்டா ஒன்று
சிந்தனையில் சினைப்படும்
அறியா ஒன்று அறிய வரும்
பகுபடா பிரம்மத்தை
பற்றிக்கொள். நீ.

அலைபாயும் மனம்
புரட்டிப்போடும் புலன்
விட்டு நீங்காது
அறப் பயிற்சி
நின் கை வாராது
அதுவாதல் முற்றாய்
இயலாது நினக்கு.. – ஆனந்த பிந்து உபநிசத் 1-5


essarci@yahoo.com

Series Navigation

எஸ்ஸார்சி

எஸ்ஸார்சி