விழுவதால் விருதா ?

This entry is part [part not set] of 28 in the series 20020518_Issue

சேவியர்.


வெற்றியை எப்படிப்
பெற்றுக் கொள்கிறாய்
நீ

வெற்றிக்காய்
வெறியோடு
வேட்டையாடுகிறாயா,
இல்லை
நெறியோடு தான்
நடைபோடுகிறாயா ?

0

சொல்.

இங்கே பலர்,
எதிராளியைத் தோற்கடிப்பதில்
வெற்றி பெறுகிறார்கள்,
சிலர்
வெற்றி பெறுவதால்
எதிராளி தோற்றுப் போகிறான்.

தோற்கடிக்கும் வித்தையை விட
வெற்றி பெறும் வேட்கையை
வளர்த்துக் கொள்.

0

சின்ன கோட்டுக்கு அருகே
பெரிய கோடு வரைவது
அறிவு,
பெரியகோட்டை அழிப்பதால்
சின்ன கோடு பெரிதாவது
அழிவு.

உன் வெற்றி
தோற்பவனின்
தோல்விகளால் கிடைப்பதைவிட
உனது
வெற்றியால் கிடைக்கட்டுமே.

0

வெட்டுவதால் வெற்றிபெறும்
சதுரங்கம்,
வீழ்த்துவதால் எழும்
கபடி,
விளையாட்டுகளின் பாடம்
விளையாட்டோடு போகட்டும்.

0

உன் கண்களுக்கு
பள்ளங்கள் தெரிகிறதென்றால்
நீ
மேட்டை அடைந்து விட்டாய்.

உன் கண்களுக்கு
மேடு மட்டுமே
தெரிகிறதென்றால்
இன்னும் நீ
பள்ளத்தாக்கில் தான்
பயணித்துக் கிடக்கிறாய்.

0

உன் வெற்றிக்கு வாழ்த்துகிறேன்
உன் சிந்தனை
இமயமலை ஏறுவதைப் பற்றி
யோசித்து நடக்கட்டும்
சிகரத்தைச்
சரிப்பதைப் பற்றி
சிந்தித்துக் கிடக்கவேண்டாம்.

0

மொட்டுக்கள்
பூக்களோடு நடத்தும்
போராட்டம்,
எரிப்பதில் இருப்பதை விட
விரிப்பதில் இருக்கட்டும்.

0

Series Navigation

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்