விரல்கள்

This entry is part [part not set] of 59 in the series 20050318_Issue

பவளமணி பிரகாசம்


கோலங்கள் போடும் தளிர் விரல்கள்
அசப்பில் இளம்பிஞ்சு வெண்டைக்காய்கள்
அவை செய்யும் பல அதிசய வேலைகள்
சரஞ்சரமாய் நாரில் பூத்தொடுக்கும்
வண்ண வண்ணமாய் நூலில் பின்னலிடும்
வீணையின் தந்தியோடு மனதை மீட்டும்
அமிர்தமாய் சமைத்து பசியாற்றும்
கணிணியில் நாட்டியம் ஆடிக்காட்டும்
தொட்டிலில் குழந்தையை ஆட்டிவிடும்
அப்படியே அழகாய் உலகை நடத்திடும்

Pavalamani Pragasam
Pavalamani_pragasam@yahoo.com

Series Navigation

பவளமணி பிரகாசம்

பவளமணி பிரகாசம்