விம்பத்தின் இரு விழாக்கள் : எழுத்தாளர் சந்திப்பும் குறுந்திரைப்பட விழாவும்

This entry is part [part not set] of 24 in the series 20051202_Issue

சி சுகுமார்


2005 டிசம்பர்; மாதம் 19-20 இரு நாட்களும் பிரித்தானியாவில் இயங்கும் விம்பம் கலாச்சார அமைப்பினர் இரண்டு நிகழச்சிகளை நிகழ்த்தினர். முதலாவதாக எழுத்தாளர் ஒன்று கூடல். அடுத்ததாக குறுந்திரைபபட விழா என இரண்டு நிகழ்வுகளையும் விம்பம் திறம்பட நடத்திக் காட்;டியது.; எழுத்தாளர்கள் சந்திப்புக்கு 25 பேர் வரையிலும் வருகை தந்திருந்தார்கள். திரைப்பட விழாவுக்கு 250 பேர் வரையிலும் பார்வையாளர்களாகக் கலந்து கொண்டார்கள்.

விம்பம் கலாச்சார அமைப்பினர் ஓழங்கு செய்த சுந்தர ராமசாமி அஞ்சலி நிகழச்சியும், தமிழக எழுத்தாளர்களான நாவலாசிரியர் நீல.பத்மநாதன் மற்றம் கி.அ.சச்சிதானந்தம் ஆகியோர் சந்திப்பும் நிகழ்ச்சியும் 2005 நவம்பர் 19 ஆம் திகதி மாலை ஐந்து மணிக்கு கிங்ஸட்ன் தமிழத் தகவல் நடுவத்தில் துவங்கியது.

நவஜோதி யோகரட்ணம் அமர்வுக்குத் தலைமையேற்று எழுத்தாளர்கள் குறித்தும்; பேச்சாளர்கள் குறித்தும் சுறுக்கமான அறிமுகங்களை வழங்கினார். சுந்தரராமசாமி குறித்த சொந்த அனுபங்களையும் கலை இலக்கிய அனுபவங்களையும்; அவரது நெருங்கிய நண்பர்களான மு.புஷ்பராஜனும், இ;.பத்மநாப ஐயரும் பகிரந்து கொண்டனர்.

பிறர் பால் அன்பும் பிறர் துன்பத்தைக் கண்டு கலங்கும் மனமும் கொண்டவர் என்பதை தனது சொந்த அனுபவங்களின் வழி எடுத்துக் காட்டினார் புஷ்பராஜன். எண்பதுகளில் தான் தமிழகம் சென்றிருந்த போதும் தொண்ணாறுகளின் மத்தியில் சுரா இலண்டன் வந்திருந்த போதும் சுராவுடன் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை பத்மநாப ஐயர் நெகிழச்சியுடன் பகிர்ந்து கொண்டார். சுரா மரணமுறுவதற்கு சில வாரங்களுக்கு முன் சுரா ஐயருக்கு எழுதிய மின்னஞ்சலை பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொண்ட ஐயர், அந்த மின்னஞ்சலுக்கு சரியான பதிலைத் தான் விடுக்குமுன்பாகவே சுரா மரணமற்றதை கலக்கத்துடன் தெரிவித்தார்.

சபேசன் சுராவுடனான தனது சந்திப்பு அனுபவங்களைக் குறிப்பிட்டார்.

நாவலாசிரியர் நீல பத்மநாபன் குறித்து மிகச் சுறுக்கமான குறிப்புகளை யமுனா ராஜேந்திரன் வழங்கினார். இபா.சுரா.ஜெயகாந்தன், தி.ஜ. போன்று இலட்சியவாதமும் இலக்கும் கொண்டு இலக்கியம் படைத்தவர்களில் நீல.பத்மாநாபனும் அடங்;குவார் என்று யமுனா ராஜேந்திரன் குறிப்பிட்டார்.

தனது இலக்கிய அனுபவங்கள் குறித்துப் பேசவந்த நீல.பத்மநாபன் தனது படைப்புகள் தன்னளவில் பேசட்டும். தனது படைப்புகள் குறித்து தான் விவரித்துப்; பேசுவதில்லை எனக் குறிப்பிட்டார். மெளனி கதைகளின் தொகுப்பாசிரியான கி.அ.சச்சிதானந்தம் அவையோருக்கு ஆச்சரியமான ஒரு ஆளுமை குறித்து சுறுக்கமாக ஆனால் செறிவுடன் பேசினார். மேற்;கத்திய ஆய்வாளர்களின் நோக்குக்கு மாற்றாக இந்தியக் கலைகளுக்கு என அதன் உள்ளார்நத தர்க்கங்கள் இருக்கிறது என நிறுவியதுதான் ஆனந்த குமாரசாமியின் மாபெரும் பங்களிப்பு என அவர் குறிப்பிட்டார்.

அமர்;வின் இறுதில் இ.பத்மநாப ஐயர் கூட்டத்திற்கு வந்திருந்தவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

இலண்டன் குளிரும் தமிழர் நிகழச்சிகளின் இயல்புத் தன்மையும் கலந்து அறிவிக்கப்பட்டதிலிருந்து ஒரு மணித்தியாலம் பின்பாகவே டிசம்பர் 20 ஆம் திகதி லூயிசம் சிவன் கோவில் மண்டபத்தில் குறுந்;திரைப்படவிழா துவங்கியது. நிகழ்ச்சிகைளை சபேசனும் நடா மோகனும் தொகுத்த வழங்கினர்.

விருது பெற்ற திரைப்படங்கள் உள்பட 15 குறும்படங்கள் அன்றைய விழாவில் திரையிடப்பட்டன.

உலகமெங்கும் பரந்துகிடக்கின்ற எம் தமிழர்கள் தங்களுக்கான அடையாளங்களைத் தேடி தலைப் பட்டுக் கொண்டிருக்கின்றனர். எமக்கான கலாசாரம் பண்பாட்டு விழுமிய அடையாளங்களை தங்கள் தங்கள் சூழலில் தாங்கள் சாாந்த துறைகளில் தனித்துவ மிக்கதொரு முன் எடுப்புக்களில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இந்த ஒரு இடத்தில்தான் எங்களுக்கான சினிமா என்ற சிந்தனை முன் வைக்கப்படுகின்றது.

தமிழ் நாட்டுச் சினிமாக்கள் முழுக்க முழுக்க வர்த்தக மயப்பட்டு தொழிற்பட்டுக் கொண்டிருக்கின்ற ஒரு சூழலிலும், அது காதலையும் மனித உணர்வுகளின் வக்கிர உணர்வுகளுக்கான தூண்டலையும், அதனு}டாக யதார்த்த வாழ்வுபற்றிய சிந்தனையையும் முன்னெடுக்காத சூழலிலும், எம் ஈழத்தமிழர்களின் பிரச்சனைகளையும் பேசமுடியாமற்போய் விட்ட ஒரு சூழல்லில் எமக்கான சினிமாவை நாங்களே உருவாக்குவோம் என்ற உணர்வு ஈழத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் ஆணித்தரமாக வேரூன்றத் தொடங்கியுள்ள கால கட்டத்தில் நாம் இன்று நின்று கொண்டிருக்கின்றோம். என்று விழாவின் தேவை குறித்து விம்பம் அமைப்பாளர்கள் அறிவித்தனர்..

எம்மவர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமான முயற்சிகளை விவரணப் படங்களாகவும், குறும் படங்களாகவும், முழு நீளப் படங்களையும் உருவாக்கத் தொடங்கியிருக்கின்றனர். குறிப்பாக குறும் படங்கள் இன்று ஈழத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் அதிகமாக வெளிவரத்தொடங்கி இருக்கின்றது. முழு நீளப் படங்கள் பேச முடியாத அல்லது பேசாமல் விட்டுப்போன விடயங்களை இந்தக் குறும்படங்கள் பேசத் தலைப்பட்டிருக்கின்றன. இக் குறும் படங்கள் இன்று எம் மத்தியில் பல தாக்கங்களை ஏற்படுத்தத் தலைப்பட்டிருக்கின்றது. இருந்தாலும் இதன் போதாமையையும் சினிமாத் தொழில் நுட்பக் குறைபாடுகளையும் பார்க்க முடிகின்றது. விம்பம் இந்த இடத்தில் நின்று சிந்தித்துப் பார்க்கத் தொடங்கியது. இக் குறும்பட முயற்;சிகளில் ஈடுபட்டிருக்கும் எல்லோருமே. ஆர்வம் மிக்கவர்கள் சினிமாவுக்கான பலமான அடித்தளத்தை தேடிக்கொண்டிருப்பவர்கள் இவர்களின் ஆர்வத்தையும், தேடலையும் முன்னெடுப்புக்களையும் தூண்டிவிட்டு எமக்கான சினிமாவுக்கான அடையாளத்தை நோக்கிய பயணத்தில் அவர்களுக்கு உதவுவதே விம்பம் நடாத்தும் இந்த குறும்படவிழா என விழா அமைப்பாளர்கள் அறிவத்திருந்தனர்.

திரையி;டல்கள் மாலை 6.30 மணிக்குத்; துவங்கியது.

விழாப் போட்டிக்கென வந்திருந்த படங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 13 குறும்படங்கள் அன்றைய விழாவில் திரையிடப்பட்டன. திரைப்படங்கள்; மூன்று பகுதிகளாகத் திரையிடப்பட்டன. திரையிடல்களுக்கு இடையில் அருணா செல்லத்துரை, மு.புஷ்பராஜன், ச.வேலு, யமுனா ராஜேந்திரன், கங்காதரன் போன்றவர்கள் குறும்படத்தின் இன்றைய நிலையும் அது தமிழ் சமூகத்தில் செலுத்தி வரும் தாக்கங்கள் மற்றும் அதனது அழகியல் பிரச்சினைகள் குறித்த சிற்றுரைகளை வழங்கினார்கள்.

படவிழாவில் இடம் பெற்ற விருதுக்குரிய படங்களை நடுவர் குழவினர் பிரத்யேகமான திரையிடலின் வழி விழாவுக்கு முன்பாகவே தெரிவு செய்திருந்தனர்.. நடுவர்களாக மு. நித்தியானந்தன் ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் யமுனா ராஜேந்திரன் மு. புஸ்பராஜன் ரஜிதா சாம்பிரதீபன் ச. வேலு போன்வர்கள் பெறுப்பேற்று விருதுக்குரிய படங்களைத் தெரிவு செய்திருந்தனர்.

திரைப்படவிழாவினை மேலும் செழுமைப்படுத்துவது தொடர்பான பாரவையாளர்களின கருத்துக்களை நடா. மோகன் கேட்டுப் பெற்றார். விழாவுக்கு வந்திருந்த பார்வையாளர்களைக் கவர்ந்த படமாக இலங்கயைில் தயாரிக்கப்பட்ட கிச்சான் படமே இருந்தது. கிச்சான் படம் தெரிவு செய்யபட்டமை மட்டக்களப்பிலிருந்து திரைப்படவிழாவில் கலந்து கொள்ள வந்திருந்த இயக்குனர் விமல்ராஜ்க்கு இன்ப அதிர்ச்சியாகவே இருந்திருக்கும்.

பார்வையாளராகவே வந்து கலந்து கொண்டிருந்த விமல்ராஜின் படமான கிச்சானுக்கு மூன்று விருதுகள் கிடைத்தன. சிறந்த இலங்கைப் படம், சிறந்த பிரதி மற்றும் சிறந்த நடிகர் போன்றவற்றுக்கான விருதுகளும், படத்தில் மூதாட்டியாக நடித்தவருக்கான சிறப்புவிருதினையும் அவரது படம் அள்ளிக் கொண்டு சென்றது.

விருது வழங்கலுக்கு ஈழத்தினது நவீன நாடகத்தின் பிதாமகன் தாசீசியஸ் தலைமையேற்றார். தாஸீசியஸ் புகலிடத்தின் முதல் தமிழ் ஊடகத்தைத் துவங்கியவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும். தாசீஸியஸ் ஒரு நெகிழ்ச்;சியான உரையை நிகழ்த்தினார். இந்த நிகழ்ச்சியில்; கலந்து கொள்வதையிட்ட தமது உளப்பூர்வமான மகிழச்சியை அவர் தெரிவித்துக்கொணடார்.

விருதுகளாக விலையுயர்ந்த கண்ணாடியில் அமைந்த விம்பத்தின் உருவமும் விருதுகளின் விளக்கமும் பொறிக்கப்பட்ட சின்னங்களை படைப்பாளியான விமலும் ,பிற படைப்பாளிகள் சார்பில் பிறரும் பெற்;றுக் கொண்டனர். விருது வழங்கும் நிகழ்ச்சியை சுஜிதா சாம்பிரதீபன தொகுத்து வழங்கினார்.

விருதுகளின் விபரங்கள் வருமாறு :

VIMBAM AWARD – 2005

Tamil Short Film Festival

1 Best Film – Sri Lanka

KITCHAN

Mr A Vimalaraj (SRI LANKA)

2 Best Film – India

BIRTHDAY STORY

Mr K Muthukumar (INDIA)

3 Best Film – Exile

BR(A)ILLIANT

Arun Vaidiyanathan (USA)

4 Best Director

Mr K Muthukumar

(Birthday Story) (INDIA)

5 Best Editor

Patric Pathmanathan

(Antha Orunaal) (CANADA)

6 Best Cameraman

Mr Panner K Selvam

(Elamai) (INDIA)

7 Best Script

Mr A Vimalaraj

(Kitchan) (SRI LANKA)

8 Best Actress

Mrs S Bhawani

(You 2) (CANADA)

9 Best Actor

Master Delushanth MohaN

(Kitchan) (SRI LANKA)

—-

kkrajah2001@aol.com

Series Navigation

சி சுகுமார்

சி சுகுமார்