விமர்சனக் கடிதம் – 3 (பாரதிமணியின் ‘பல நேரங்களில் பல மனிதர்கள்’ கட்டுரைத் தொகுப்பை முன் வைத்து)

This entry is part [part not set] of 36 in the series 20090611_Issue

வே.சபாநாயகம் –


‘நான் பார்த்த ரோஜாவின் ராஜா’ என்கிற கட்டுரையும் உங்களது அதிர்ஷ்டவசமான வாய்ப்புகள் பற்றி சிலிர்ப்பான சம்பவங்களைச் சொல்கிறது. 21 வயதில் தில்லி நாடகக்குழு பழக்கத்தால் மோதிலால் நேருவின் நூற்றாண்டு விழாக் கமிட்டியில் இடம் பெற்றதும் அது தொடர்பான ஏற்பாடுகளின்போது பார்வையிட வந்த நேருஜியிடம் அறிமுகமும் நேரடி பாராட்டும் பெற்றதும் அரிய வாய்ப்புகள்தான். தொடர்ந்து உங்களது நாடகங்களை அவர் பார்த்துப் பாராட்டியதுடன் உங்களது தோள்மீது கைபோட்டுக்கொண்டு படம் எடுததுக்கொண்டதும் யாருக்கு வாய்க்கும்?

அடுத்து அன்னை தெரஸாவோடு நேர்ந்த விமானப்பயணத்தில் அவரது இருக்கைக்கு அடுத்து அமரும் பாக்யம் கிட்டியதும் அவர் சிறு பைபிள் புத்தகமும் ஜெபமாலையும் தந்து உங்களை ஆசீர்வதித்ததும் குருட்டு அதிஷ்டம் என்று சொல்ல முடியுமா?

எல்லோருக்கும் அந்தக் கொடுப்பினை வாய்த்து விடுவதில்லை.

அடுத்து வங்கபந்துவின் மகளான ஷேக் ஹசீனாவின் சந்திப்பும் தொடர்ந்த நான்கு ஆண்டு நட்பும் உங்களுக்கு மட்டும் எப்படி சாத்யமாகிறது என்ற வியப்பை ஏற்படுத்துகிறது. தில்லியில் மறைவாக அவர் இந்திரா அம்மையாரின் பாதுகாப்பில் இருந்தபோது கடுமையான கட்டுக்காவலுக்கிடையே அவரைச் சந்திக்க நேர்ந்ததும் பின்னர் பங்களாதேஷ் போய்த் திரும்பிய போதெல்லாம் அவருக்கு மிகவும் பிடித்தமான ‘ஹீல்ஸா மீன்’பார்சலைத் தவறாமல் கொண்டு வந்து கொடுத்ததும் பெரிய சாகசம் போல வியக்க வைக்கிறது. அவருடனான சந்திப்பின் போது நம் தமிழர் போலல்லாமல் ஒரு ஆங்கிலச்சொல் கூடக் கலக்காது தம்மொழியில் மூன்று மணி நேரம் பேசியது நம் டாக்டர் ராமதாசை மகிழ வைத்திருக்கும் என்ற உங்கள் விமர்சனத்தையும் ரசித்தேன்.

அடுத்த கட்டுரையான ‘நான் வாழந்த திருவாங்கூர் சமஸ்தானம்’ பல புதிய ரசமான தகவல்களைத் தருகின்றன. 1940களில் இந்தியாவில் மதிய உணவுத்திட்டம் முதன்முதலில் அறிமுகப்படுத்தபட்டது திருவிதாங்கூரில்தான் என்கிற தகவல் இன்றைய ‘மூன்று முட்டைத் திட்டம்’பற்றி உரிமை கொண்டாடுபவர்க்கு மட்டுமல்ல நமக்குமே புதியதுதான்.பத்மநாபசுவாமிகோயில் பக்கத்தில் உள்ள பத்மதீர்த்தத்தில் குளித்தவர்களில் பத்துக்கு நாலுபேருக்காவதுயானைக்கால் நோய் இருந்ததும் பலருக்கு விரைவீக்கம் காரணமாய் பெரியமூட்டையைக்காலிடுக்கில் சுமந்த சோகத்தையும்பற்றிச் சொல்கையில் அது சார்ந்து நீங்கள்குறிப்பிட்டுள்ள பழமொழி ‘பத்மதீர்த்தத்தில் குளிச்சால், ஸ்ரீபத்மநாபன் கடாட்க்ஷிச்சு வெச்சுஎழுதான் மேசைவேண்டா’ குபீர்ச்சிரிப்பை உண்டாக்குகிறது. அடுத்து இந்தியத் தலைநகரங்களிலேயே சேரிகள் இல்லாத நகரமாக திருவனந்தபுரம் திகழந்தது எனபதும் வியப்பான செய்திதான். மற்றுமமுறைஜபம் நடக்கும் நாட்களில் கோயில் ஊட்டுப்புரையில் தினமும் ஆயிரக்கணக்கானவருக்குஅன்னம் வழங்க உணவு தயாரிக்கிற பிரம்மாண்டத்தைப் பற்றி சிறுவயதில் நீங்கள் உங்கள்தகப்பனாரைக்கேட்ட கேளவியும் அதற்கு அவர் சொன்ன பதிலும் கூட நினைக்கும்தோறும் சிரிப்பை வரவழைப்பதாகும். ஆயிரக்கணக்கானவருக்குச் சமைக்க நாம் வசிக்கும் அறையின் கொள்ளளவுகொண்ட பெரிய வெண்கல உருளிகளில் , சாம்பார், ரசத்துக்காகப் புளி கரைக்க இரண்டுமூட்டைப் புளியைப்போட்டு ஆட்கள் உள்ளெ இறங்கி காலால் மிதிப்பதைபற்றி ‘அந்த சமயத்திலே அவங்களுக்கு ஒண்ணுக்கு வந்தா என்னப்பா செய்வாங்க?’ என்ற குழந்தைத்தனமான கேள்வியும்’அது எனக்குத் தெரியாதததனாலேதாண்டா நான் ஊட்டுபபுரையிலெ சாப்பிடறதேயில்லே’ என்றஉங்கள் தந்தையார் பதிலும் எந்த உம்மணாமூஞ்சியையும் சிரிக்க வைத்துவிடும்.

இன்னும், உங்கள்தகப்பனாரின் சிக்கன நடவடிக்கையால் S.S.L.C வரை முழுப்பென்சிலையே உபயோகித்ததில்லைஎன்பது இன்றைய தலைமுறையால் நம்பமுடியாதுதான்! திருவனந்தபுரம் மகாராஜா, மற்றும்திவான் சி.பி.ராமஸசாமி அய்யர் பற்றிய ரசமான புதிய தகவல்கள் தனி அத்தியாயம். அது அடுத்த கடிதத்தில்.

– தொடர்ச்சி அடுத்த
கடிதத்தில்.

Series Navigation

வே.சபாநாயகம்

வே.சபாநாயகம்