விதுரநீதி விளக்கங்கள் – 2

This entry is part [part not set] of 43 in the series 20110117_Issue

சேஷாத்ரி ராஜகோபாலன்


இரண்டாம் பகுதி:

தன் அழைப்புக் கிணங்கி, விதுரன் தன் அறைக்குள் வந்துவிட்ட ஓசையைக் கேட்டு, மிக மகிழ்ச்சியுடன் வரவேற்ற பிறவிக் குருடனான அரசன் திருதராஷ்ட்ரன், விதுரரிடம் “”அன்று அரசவையில் மனதிற்கொவ்வாத, வேதனையூட்டும் பழைய சம்பவங்கள் ஒன்றையும் நினைவில் கொள்ளாது, நான் அழைத்தவுடன், நீயும் வந்துவிட்டாய். ஏனெனில் நமக்குள் இருக்கும் பாசமும் அத்தகையது. என் குடும்பத்தில் நீயும் ஒருவன். நீதி தவறாத சிறந்த புத்திமான். இக்கட்டான சந்தர்ப்பத்தில் எனக்கு ஆறுதலோடு அறிவுரை வழங்க வந்தமைக்கு மிக்க நன்றி”” என அச்சமயத்தில் நெகிழ்ந்தே கூறியவாறு காணப் பட்டான். திருதராஷ்ட்ரனை சஞ்சயன் சந்தித்த பின், மன அமைதி இன்றி, உறக்கமின்றித் தவிப்பதாகவும், இச்சமயத்தில் தனக்கு உற்ற அறிவுரைகளை வழங்க வேண்டு மென கேட்டுக் கொண்டான்.
விதுரர், திருதராஷ்டிரனுக்கு அளித்த முதல் அறிவுரை: உறக்கமின்மை, மன அமைதியின்மை ஏன் ஏற்படுகிறதென்ற காரணத்தை ஆராய விதுரர் ஆரம்பிக்கிறார்.
எப்போதும் இறுமாப்பு, வீறாப்பு மிக்க உள்ளவனுக்கு முற்றிலும் பாதகமாக, இப்படியொரு இக்கட்டான சமயம் திடீரென எதிர் பாராமல் வாழ்க்கையில் ஏற்பட்டு விட்டால், அப்போது மனதுக்குள், வெளியில் சொல்லமுடியாத குற்ற உணர்ச்சியில், மன அழுத்தம் உண்டாகும். ““இந்த நிலைக்கு என்னுடைய பழைய செயல்களே முக்கிய காரணங்களாக இருக்கலாமோ?”” என்ற எண்ண எழுச்சி உண்டாகலாம். முன் நடந்த நிகழ்ச்சி, எண்ணப் பதிவிலிருந்து, ஒரு எண்ணத் தொகுப்பாக மனத் திரையில் அடுத்தடுத்து மீண்டும் மீண்டும் தோன்றத் தொடங்கினால், இந்த பலவீனத்தில், உறக்கமின்மை, மன அமைதியின்மை ஆகியவைகளில், இயற்கை-விளைவாக ‘உள்ளப் பதற்ற மன நிலை’ (stress) தானே உண்டாகி விடுகிறது.
[[[தற்காலத்திற்குப் பொருந்தும் வகையில் விளக்கமளித்தால், இந்த ‘உள்ளப் பதற்ற மன நிலை’ நம் உடலில் இயற்கையாக அமைந்திருக்கும் “நோய் தடுப்புப் பாதுகாப்பு ஒழுங்கு முறை”யைக் (in-built immune system) சீர்குலைத்து விடுகிறது. வெகு நாட்களாக தொடர்ச்சியாக ‘இம் மன நிலை’ நீடித்தும் விட்டால் நமது உடலில் குண்டிக்காய் (kidney) சுரப்பிகளில் சுரக்கும் “கோர்டிசோல்”, சம நிலையில் இல்லாது போய்விடும். இது அபாயத்திற்கு அறிகுறி. இதே நிலை தொடர்ந்தால், மலட்டுத் தன்மை, தசை-எலும்பு வலி போன்ற நோய்களால் நாம் எளிதில் தாக்கப் படலாம். இதனால், நம் உடலுக்கு வேண்டிய நல்ல prostaglandinsஐக் குறைத்துவிடும். இது ‘நோய் தடுப்புப் பாதுகாப்பு ஒழுங்கு முறை’க்கு உதவும் காரியங்களில் கேடு விளைவிக்கக் கூடும். மையமான இருதய வழியாக, உச்சந்தலையிலிருந்து, உள்ளங்கால் வரை எளிதாக நீரோட்ட வகையில் (easy flow), உடல் முழுதும் ரத்தக்குழாயில் ரத்தம், ஒரே சீராகப் பாயாமல், நடுவில் அடைப்புக் கோளாறு உண்டாக்கி விடுகிறது. இந்த ரத்தக்குழாய் அடைப்பு, சுவாசப் பாதிப்பு, மாரடைப்பு (heart attack) ஆகியவைகளாக விளைந்து விடுகிறது. (இதற்கு மேல் அதிகமான பிரச்சனைகளை இங்கே விவரிக்க வில்லை). – அதாவது Stent fixing, By-pass surgery, & Open heart Surgery). (cortisol=An adrenal-cortex hormone (trade names Hydrocortone or Cortef) that is active in carbohydrate and protein metabolism) (prostaglandins = Potent hormone-like substance found in many bodily tissues (and especially in semen); produced in response to trauma and may affect blood pressure and metabolism and smooth muscle activity. ‘Good’ prostaglandins are localized hormone like cellular messengers that support immune function, dilate blood vessels, inhibit ‘thick’ blood and are anti-inflammatory)]]]
ஆக பிரச்சனைகளுக்கெல்லாம் இடங்கொடுத்து வியாதிகளை நமக்கு நாமே வரவழைத்துக் கொள்கிறோம் எனத் தெரிகிறதல்லவா!. எல்லா விசித்திர விபரீதங்களுக்கும், அல்லது எல்லா நல்ல நடப்புகளுக்கும் நாம் தான் ஆதி மூல காரணம். நமக்கே கட்டுப்பாடு தேவை.
மேற்சொன்ன விபரீதங்களைத் தீர்க்க:
‘உள்ளப் பதற்ற மன நிலை’யை குறைக்க, யோகப்பயிற்சி, தியானம், வாய்விட்டுச் சிரிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்ற ஒரு மூதுரையும் உண்டு. இதெல்லாம் இன்னலைப் போக்கும் வழிகள் மட்டுமே. ஆனால், இன்னல் வராமலே இருக்க நம்மை நாமே சீரான நிலையில் வைத்துக்கொள்ளப் பழகிக் கொண்டு விட்டால், நோய் ஏது? அல்லது இன்னலைப் போக்கும் வழிகள் தான் எதற்கு?
இப்பலவீனம் நிகழ்வதற்கான சாத்தியக் கூறுகளில் சிலவற்றை இதற்கு உதாரணமாக, விவரிக்கிறார். விறகு வெட்டிக்குத் தன் கோடரியை இழப்பதால், பேராசைக்காரனுக்கு செல்வம் சேராத நிலை உண்டானால், (ஓரிடந்தனிலே, நிலையில்லாத உலகினிலே, உருண்டோடும் பணம் காசெல்லாம் உருவமான பொருளே….எனும் சொல்லுக்கிணங்க, “செல்வோம்” எனச் சொல்லி செயலில் காட்டும் செல்வம் போல — அன்று, திருமுருக கிருபானந்த வாரியார் பிரசங்கத்தில் சொன்னது) திருடனுக்கு இடையீடற்ற எளிதாகத் திருடும் சந்தர்ப்பம் கை நழுவிச் செல்லும் போது, (இவைகள் போன்ற ஒத்த நிலையில் நடந்த நிகழ்ச்சிகளாலும்) உறக்கமின்மை, மன அழுத்தம், அமைதியின்மை உண்டாவது இயல்பு தான் என விதுரர் விளக்கிச் சொல்கிறார். அவர் அன்று சொன்னதை இன்று நாமே பலதடவை, பட்டறிந்திருக்கிறோம். இவைகள் போன்ற நிகழ்ச்சிகள் நேர்ந்துவிடாமல் இருக்க, நாம் தான் கவனத்துடன் நம் காரியத்தில் முழுமனதுடன் ஈடுபட வேண்டும்.
நல்ல பண்புகளுடைய ஒரு நாட்டின் தலைவன் எந்த பிரச்சனைக்கும் எல்லோருக்கும் நியாயமான தீர்ப்பை வழங்கவேண்டும். இப்பேற்பட்டவனைத்தான் நல்ல பண்புகளுடைய ஒரு நாட்டுத் தலைவன் என மனதாரச் சொல்லுவார்கள். நாட்டு மக்களைத் தன் சொந்த மக்களைப் போலப் பேணிக் காக்க வேண்டும். அநாவசியமாக நாட்டைவிட்டே விரட்டிவிடக் கூடாது. சகுனி மாமா அவ்வப்பொது கௌரவர்களுக்குத் தூண்டிக் கொடுத்தவாறு, வெவ்வேறு விதத்தில், பாண்டவர்களை வலுச்சண்டைக்கு இழுத்து சித்திரவதை செய்யும் போது திருதராஷ்ட்ரன் – அரசன் என்ற முறையில் “இது தவறு” என தடுத்து நிறுத்தாமல், கௌரவர்களை இன்னும் கொடுமைகளை அதிக அளவு செய்ய, ஊக்கப்படுத்தி இருந்ததைச் சுட்டிக்காட்டினார்.
என்ன தான் இருந்தாலும், அவர்களும் இந்நாட்டு மக்கள் தானே! சகோதரனின் மக்கள் எனக் கூடக் கொள்ள வேண்டாம். தவறு செய்யாதவர்களையுமா தண்டிக்க வேண்டும்? புறக்கண்களில் பார்வை குன்றலாம், அல்லது பார்வையே இல்லாமலே போயிருக்கலாம், ஆனால் தன்னைத் தானே பழிவாங்கிக் கொள்வது போல, அதாவது கூரிய கத்தி போன்ற மிகக் கீழ்த்தரச் சிந்தனையால் அகக் கண்களையுமா, குத்திக் குருடாக்கிக் கொள்ளவும் வேண்டும்? (அதாவது மனசாட்சியையுமா குருடாக்கிக் கொள்ளவும் வேண்டும்?) குடிமக்களை தன் மக்கள் போலக் காத்திருக்க வேண்டுமென மறைமுகமாக மனதில் உறைக்கும் வண்ணம் இடித்துச் சொல்கிறார். அரசுத் தீர்ப்புகளில் பிள்ளைப் பாசத்திற்கோ சொந்த பந்தங்களுக்கோ லாப நஷ்டத்திற்கோ, இடமில்லை. மேலாக, பொது நலத்தில் சுய நலம் கூடவே கூடாது. இவைகளைத் தவிர, பாண்டவர்கள் எல்லோரும் மனசாட்சிக்கும், கடவுளுக்கும் பயந்தவர்கள். (கழகப் பகுத்தறிவாளர்கள் போலல்ல). “நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்லா” தவர்கள் என்று கௌரவர்கள் மனதார அறிந்திருந்தும் அவர்களுக்கு தீங்கிழைக்கத் தேவையில்லை. இதில் விதுரர் சொல்லாமல் சொன்னது: திருதராஷ்ட்டிரனுக்கு, புறக்கண்ணும் இல்லை, அககண்ணுமே இல்லை, என பொருள் கொள்ளலாம்.
[[[இத் தருணத்தில், தற்பொதைய இந்திய பிரதம மந்திரி மன் மோகன் சிங்ஜி, கழக – முதல்வர் கருணாநிதி, 2G Spectrum ஆண்டிமுத்து ராசா, முதலியோர் உங்கள் ஞாபகத்தில் தானாகவே உதிக்கிறார்களா? தங்கள் சுய நலத்தால், நிரபராதிகளான இந்திய நாட்டு மக்கள் ஏமாற்றப் படுகிறார்களென மன சாட்சி கூட இவர்களுக்கு கொஞ்சமும் இல்லையே!]]]
திருதராஷ்டிரன் அஸ்தினாபுர அரசின் உண்மை அதிகாரத்தையும் வலிமையையும் நாட்டுப் பொறுப்பையும், அவ்வப்போது ஏதோ முறையான பணிமாற்றமாகக் கருதி, சகுனி, துரியோதனரன், துச்சாதனன், கர்ணன் போன்றவர்களிடம், ஒன்று சேர ஒப்படைத்தது என்பது, அத்துடன் மன்னனுக்கு வேண்டிய மன நிம்மதியையும் அவர்களுடனேயே ஒப்படைத்து விட்டது எனவே நேர்ந்து விட்டது. இதனால் தான், நிம்மதியின்மை, தூக்க மின்மை என்பது தன்னிச்சையாக தொற்றிக்கொண்டு விட்டதென வெளிப்படையாகவே விதுரர் குற்றம் சாட்டுகிறார். தர்மம் நியாயம் ஆகியவைகளில் பற்றுள்ள ஒரு நாட்டுத் தலைவன், தன் நிலையிலிருந்து கொண்டே பிறரையும் தன் போல நோக்கும் பண்பு படைத்தவனாக இருக்க வேண்டும், (empathy); தனக்கென வாழாது பிறருக்காக வாழ்பவனாகவும்; நேர்மை தவறாதவனாக லட்சியப் பிடிப்பிலிருந்து வழுவாது இருக்க வேண்டுமென விதுரர் கூறுகிறார். விதுரர் கூறாமல் கூறியது: இவைகளில் திருதராஷ்ரனிடம், எவை இருந்தன என சீர்தூக்கிப் பார்க்க மறைமுகமாகச் சாடுகிறார்.
நாட்டுத் தலைவன் எல்லோராலும் விரும்பப்படும் இயல்புடன், போலி நடிப்பில்லாத சிந்தனை, சொல், செயலுடன், மனசாட்சிக்குப் பயப்படும் தலைவனாக இருக்க வேண்டும்.
एकस्मात् व्रुक्षात् यज्ञपात्राणि राजन् , स्रुक् च द्रौणी पेषणीपीडने च |
एकस्मात् राजन् ब्रुवतो मे निबोध , एकस्माद्वै जायते असच्च सच्च ||
ஏகஸ்மாத் வ்ருக்ஷாத் யஜ்ஞபாத்ராணி ராஜந் , ஸ்ருக் ச த்³ரௌணீ பேஷணீபீட³நே ச |
ஏகஸ்மாத் ராஜந் ப்³ருவதோ மே நிபோ³த⁴ , ஏகஸ்மாத்³வை ஜாயதே அஸச்ச ஸச்ச ||
மரம் ஒன்றுதான். அதிலிருந்து கிடைக்கும், அடிமரத்திலிருந்து, “யாக” (sacrifices to God) காரியங்களுக்கான மரப் பாத்திரங்களையும், மரக் கரண்டிகளையும், தண்ணீரில் எளிதில் செல்லக் கூடிய படகையும், உண்டாக்க முடியும். அதே சமயத்தில், ஒருவரை அடித்துத் துன்புறுத்த, பிறரை அழிக்கும் சாதனங்களான வில், அம்பு (உருண்டைக்கட்டை!!) முதலிய ஆயுதங்களையும் உண்டாக்க உபயோகப்படுத்த முடியும். மெய்யும் பொய்யும் ஓரிடத்திலிருந்து தான் உற்பத்தியாகின்றன.
நமக்குப் பாடமாக: நாட்டுத்தலைவன் தன் சுய புத்தியுடன், தன் சுய பலம், மனசாட்சி ஆகியவைகளின் அடிப்படையில் எக்காரியத்திலும் நியாமான தீர்ப்பு வழங்க வேண்டும்.
[[[ஜனநாயக முறைக்குத் தக்கவாறு, ஆட்சியில் அமர்த்தப்படுபவர், வம்சம்-பரம்பரை எனும் கருத்துப்படி தேர்ந்தெடுக்கப்படுவது தவறு. அப்படி நேர்ந்து விட்டால், அதன் விளைவு மன்னர் அரசராட்சி போல அல்லது சர்வாதிகாரச் சுரண்டலில் தான் முடிவடையும். ஜனநாயக முறையில், மக்களாகவே, மக்களுக்காக, மக்களால் தகுதி பெற்ற பொருத்த மானவர்களிடம் தான் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்திருக்க வேண்டும். வம்ச பரம்பரையில் ஆட்சிப்பொறுப்பையும், எல்லா அதிகாரத்தையும் கைப்பற்றி, எல்லா முடிவு களையும் தீர்மானிக்க, எவ்வித பொறுப்பும் இல்லாமல், வெளி நாட்டிலிருந்து வந்து இந்நாட்டு மக்கள் மீது வம்ச பரம்பரை எனும் கருத்துத்தை உண்மையில் தொடர, மக்கள் மீது தன்னையே திணித்துக் கொண்டிருக்கும், “ சோனியா ” என்பவருக்கும், மகாபாரதத்திலுள்ள “சகுனிமாமா” வுக்கும் உள்ள வித்தியாசம் அதிகம் ஒன்றுமில்லை.
• ராஜீவ்ஜியை மணந்ததால், “சோனியாஜி”, இத்தாலிய நாட்டிலிருந்து இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டார் ஆனால்,
• சகுனிமாமாவோ, காந்தாரத்திலிருந்து பாரதத்திற்குள் அன்று இறக்குமதி செய்யப்பட்டவன். துரியோதனின் அன்னை காந்தாரியின் உடன்பிறந்த சகோதரன் தான் – சகுனி மாமா.
அவ்வளவே தான்!!
இன்னொன்றை கவனித்தீர்களா? இந்தியாவின் பிரதம மந்திரியாக உள்ளவரோ, மக்களால் ஜன நாயக முறை நேர் தேர்தலில் தேர்ந்தெடுக்கப் படாது ராஜ்ய சபா அங்கத்தினராக ஆக்கப் பட்டு, அதன் மூலம் (கொல்லைப்புற ராஜ்ய சபா வாயிலாக) பிரதம மந்திரி யானவர், இரண்டாவதாக, மாமியார் மெச்சிய மருமகள் சோனியாஜி கூட [இவர் உண்மை இத்தாலியப் பெயர் – “”எட்விக் அண்டோனியோ அல்பினோ மைனோ”” – Edvige Antonia Albina Maino], நேரு குலத்தில் உதித்த ராஜீவ்ஜியை இங்கிலாந்தில் கல்லூரியில் படிக்கும்போதே காதலித்து பின் மணந்தார். சோனியாஜி கூட அங்கிருந்த சிற்றுண்டி சாலையில் பரிமாறும் பணிபுரியும் போதே ராஜீவ்ஜியைக் காதலித்தும் இருக்கிறார். பிறகு கல்லூரிப் “பட்டம்” – டிகிரி” கிடைத்ததா அல்லது ‘விண் காற்றில் பறக்க விடும் பட்டம்’ தான் கிடைத்ததா? இதற்கு பதில், பகிரங்கமாக சொல்லிக் கொள்ளக்கூடியதாக ஒன்றுமில்லை
கத்தோலிக்க கிருஸ்தவ முறையில் “”எட்விக் அண்டோனியோ அல்பினோ மைனோ”” (சோனியா) ராஜீவ்ஜிக்கு “ராபர்டோ” எனும் ஒரு இத்தாலிய கிருஸ்தவப் புதுப் பெயரை சர்சில் முதலில் நடைபெற்ற “வெட்டிங்” அன்று (wedding) கூடுதலாகச் சூட்டிவிட்டு, பின்னர், முன் நாள் பிரதம மந்திரி இந்திராஜி யும் தனது பங்கிற்காக, தன் இத்தாலிய மருமகளுக்கு ஹிந்து முறைப்படி ராஜீவை க் கடி-மணம் செய்வித்து – “சோனியா” எனும் புதுப் பெயரை செல்லமாக சூட்டினார். (“சூனியா” அல்ல)
இதற்குப் பிறகு, இந்திய குடிமையை பெற்றுக் கொள்வதா வேண்டாமா என்று நீண்டகால இழுபறிக்குப் பின்னர், இத்தாலிய-இந்திய என இரு நாட்டு ‘’பயண இசைவுச் சீட்டுடன்’’ (Passport), காங்கிரஸ் கட்சி வேட்பாளராக பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடவும், காங்கிரஸ் கட்சித் தவைவராக ஆவதற்கான இந்திய குடிமகளுக்கான உரிமைக்காக கடைசியில் வாங்கியும்விட அண்மையில் நேர்ந்து விட்டது. இதற்கும் பிறகு காங்கிரஸில் உள்ள “ஆமாஞ்சாமி” களால் ஏகோபித்து அளிக்கப்பட்ட தலைமைப் பதவியை அனுபவித்துக் கொண்டு நேரு-வம்ச உரிமை என இந்தியாவின் ஆட்சியை கைப்பற்றி யுள்ளார். தன்னைப் போலவே, ராகுல் காந்தியையும் தயார் செய்து இதே நேரு-வம்ச ‘தர்பார்’ ஆட்சி நீண்டகாலம் தொடர வேண்டிய ஏற்பாடு நடந்து வருகிறது.
இவர்களைப் பற்றி இவ்வாறு நாம் ஏன் விமரிசனம் செய்ய வேண்டும்? ஏனெனில், இவர்கள் பொதுவாழ்வில் ஈடுமட்டுள்ளனர். இவர்களுடைய ஒவ்வொரு செய்கையும் நாட்டிலுள்ள 100 கோடி மக்களையும் பாதிக்கிறது என்பதால் தான். இவர்கள் செய்கைகளைப் போல நாட்டில் பலர் தங்கள் சொந்த விஷயங்களில் நடந்து கொள்கிறார்கள். அதன் விளைவு ஓரளவிற்கு மட்டுமேதான்! அவர்களைப் பற்றி பகிரங்கமாக எல்லோருமாக இம்மாதிரி கருத்து பரிமாறிக் கொள்வதில்லை. அததது அவரவர்கள் சொந்த விஷயம் என விட்டு விடுவது வழக்கம். ஆனால், இவர்கள் செயல்-பின்னணிப் பாணிகள் இந்திய நாட்டுக்கே தீங்கு விளைவிக்கும் சுய நல அந்தரங்க நோக்கங்களுடன் செயல் படுவதால் தான் மக்கள் விமரிசனத்திற்கு ஆட்படுகிறார்கள். இவர்கள் மீது உள்ள குற்றச்சாட்டுகளை தக்க பல ஆதாரங்களுடன் பலர் நிரூபிக்கிறார் களே! அல்லது சூழ்நிலைகளிலிருந்து நிரூபிக்கப் படும் சாட்சியங்கள், மக்களுக்கு இவர்கள் மேலுள்ள சந்தேகங்களை இன்னும் வலுப்படுத்துகின்றனவே!! இவர்கள் முகத்திரையைக் கிழித்து இவர்களையும் ஒரு வழிப்படுத்தும் வரை, மக்களே இனி ஓயமாட்டார்கள். மக்கள் விழிப்புடன் உண்மையைக் காண விழைகிறார்கள். இது தவறா?]]].

இனி, நாட்டுத் தலைவன் நல்ல புத்திமானாக இருக்கவேண்டிய அவசியத்தையும், அவன் எப்படி இருக்கவேண்டுமென அடுத்து எடுத்துரைக்கிறார்.
புத்திமானான தலைவன், தன் லட்சியத்தியத்திலிருந்து பின்வாங்காமல், இருக்க வேண்டும். இவன் அரசாங்க ராணுவ வழிமுறைகளில், இருக்க வேண்டிய ரகசியத்தைக் காத்து, கடைபிடித்து, ஆனால் இவைகளைச் செயலாகக் காட்டும்போது ரகசியத்தின் சிறப்புகளை மக்களைத் தானாகவே உணரும்படிச் செய்யவேண்டும். பொதுவாக எங்கும் எதிலும், ஒரு ஒழுங்கு முறையென ஒளிவு மறைவின்மை, அல்லது தெளிவுடைமை (transparency) வேண்டும்.
நல்ல தரமுள்ளோர், எவரானாலும், அப்பேற்பட்ட சிறந்தவர்களைப் பொறுக்கி எடுத்து, இனம், இடம், என குறுகிய மனப்பாங்கின்றி, பரந்த திறந்த மனத்துடன் பகிரங்கமாகப் பாராட்டுகிற குணம் பொருந்தி இருக்க வேண்டும்.
இனி, முட்டாள்களுடைய இயல்புகளையும் கூறுகிறார். இது பொதுவாக எல்லோருக்கும் பொருந்தும். (அரசனுக்கு மட்டுமின்றி மற்றோருக்கும் ஏற்றது).
• கல்வி கேள்விகளில் ஆய்வுணர்வுத் திறன் இல்லாதவன்;
• தன்னைப்பற்றி மிக உயர்வாக எண்ணி மிக கர்வமுள்ளவன்;
• தன் கொள்கைகளில் பிடிப்பு இல்லாதவனாக இருப்பவன்; அல்லது கொள்கையே இல்லாதிருப்பவன். [= CHAMELEONS கழக வழி போல, “காட்ட வேண்டியதைக் காட்டி, பெற வேண்டியதைப் பெறலாம்” என கொள்கையில் எவ்வித வழிமுறைகளையும் பின்பற்றத் தயங்காதவன். (‘ஹிந்தி’ ஒழிப்பையே முக்கிய கோட்பாடக் கொண்டு 1967 மாநிலத் தேர்தலில் கழகம் வெற்றி பெற்று, தமிழ்நாட்டு ஆட்சியைக் கைப்பற்றிய அதே கழக முக்கியத் தலைவர், 2010இல், இன்றோ-“ஹிந்திக்கு நாங்கள் (தமிழ் மக்கள்) எதிரிகளல்ல, ஆனால் அதை எங்கள் மீது சுமத்துவதைத் தான் அன்று எதிர்த்தோம்; ஹிந்தி இசையைக் கேட்பதற்கும், பாடுவதற்கும் நன்றாக இருக்கிறது.” என முதல்வர் முக அவர்கள் (திருவாய் மலர்ந்து) இந்நாட்களில், முத்துதிர்க்கிறார். – எப்படி!! (CHENNAI, New Indian Express, 30-Dec-2010 Centre page 9). (சொல்லாமல் சொன்னது: ”அன்று எதிர்த்தோம், அன்று இம்மாதிரி சொன்னதால் தான், நாங்கள் வெறுப்பைக் கிளப்பி கழகத்தையும், எங்கள் குடும்ப சொத்துக்களையும் வளர்க்க முடிந்தது; இன்று எதிர்க்கவில்லை, காரணம், ஹிந்தி பேசுபவர்கள் தயவு தற்போது எங்களுக்குத் தேவை. நமக்கு வேண்டியதை வேண்டிய வகையில் செய்யத் தயங்க மாட்டோம். எப்படியும் எங்கள் காரியம் ஆக வேண்டும். அவ்வளவு தான்! அந்தந்த சமயத்தில் எங்கள் கொள்கைகளை மாற்றிக்கொள்ளத் தயங்க மாட்டோம்” என்ற மாறாத ஒரே கொள்கை)].
• எதிராளி என்னென்ன திட்டங்களை என்னென்ன விதத்தில் செயல்பட இருக்கிறான் என்பதையே எண்ணி அதில் தீங்கான கவனம் செலுத்துபவன்;
• எப்போதும் பிறரை அண்டிப்பிழைப்பவன்,
• பேசுவதற்கும்-செயலில் காட்டுவதற்கும் முற்றிலும் முரண்பாடாக நடப்பவன்
• நண்பர்களை சமயத்தில் ‘அம்போ’ என நட்டாற்றில் கைவிட்டுபவன்,
• தன் மீதே தனக்கு நம்பிக்கை இழந்தவன்,
• தன்னைவிட திறமைசாலிகளிடம் பொறாமை உடையவன்,
• இறந்துபோன தன் பெற்றோருக்கும், மூன்று தலைமுறையினருக்கும் (பித்ருக்கள்) வருடாந்திர தெவசம் (சிரார்த்தம்) செய்யாதவன்,
• குல தெய்வத்தை பூஜிக்காதவன்,
• எப்போதுமே சமுதாயத்துகே தீங்கு செய்பவர்களிடம் சேர்க்கையை உடையவன்
• அழையா விருந்தாளி,
• எதிலும் எவரிடமும் தலையிட்டு காரியங்களைக் குட்டிச்சுவராக்குபவன்,
• தன் பலமும், பலவீனமும் தெரியாதவன்,
• பொறாமைகொண்டு தவறான வழிகளில் செல்வத்தை அடைய முற்படுபவன்……..,
• தனக்குத் தெரியாதவற்றில், பிறருக்கும் உபதேசம் செய்பவன்
• வரையறையின்றி பெரும்தீனியான், (glutton) பெரு வேட்கையான்,
என முட்டாள்களைப் பற்றி விலாவாரியாக எடுத்துக் கூறியுள்ளார்.
கீழ்க்காணும் இந்த ஸ்லோகம்
• முதலாவதாக, மிக அருமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
• இரண்டாவதாக இதில் அடங்கிய பொருட்கள் எல்லோருக்கும் அந்தந்த படிநிலைக்குத் தகுந்தவாறு மிக பயன்படத் தக்கது.
• இது அரச நிர்வாகத்திற்கு வேண்டிய செயல் நெறித் திட்டமாகக் கூடக் கொள்ளலாம்.
• பொதுவாக, மக்களாலும் தங்களுக்கு ஏற்றவாறு பின்பற்றத் தக்கது.

एकया द्वे विनिच्चित्य त्रीन् चतुर्भि: वशे कुरु |
पञ्च जित्वा, विदित्वा षट सप्त हित्वा सुखी भव ||
ஏகயா த்³வே விநிச்சித்ய த்ரீந் சதுர்பி⁴: வஸே² குரு |
பஞ்ச ஜித்வா, விதி³த்வா ஷட ஸப்த ஹித்வா ஸுகீ² ப⁴வ ||
இந்த சுலோகத்தின் பொருள்:
1. ஒன்றைத் தன் வசமாக்கி,
2. இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து,
3. மூன்றை
4. நான்கால் வென்று விடல். பின்,
5. ஐந்தை அடக்கி,
6. ஆறைத் தெரிந்து கொண்டு,
7. ஏழு வகை தவறானவைகளையும் ஒருங்கே நீக்கிவிட்டால்,
சுகமாக வாழலாம்.

— இப்படி ஏழு வழி முறைகளை அறிந்து நடக்கும் சிற்றரசன் கூட, போகப்போக பேரரசனாக ஆக முடியும் என இந்த ஸ்லொகத்தில் மறைபொருளாகத் தனி மொழியில் இங்களிக்கப் பட்டுள்ளது. இது ஒரு விடுகதை போன்று தோன்றும். ஆனால் இதிலுள்ள ஆழ்ந்த கருத்துகள் எல்லோராலும் சிந்தித்து பின்பற்றத் தக்கவைகள். மேலே படியுங்க்கள் புரியும்.
1. ஒன்று = நுண்ணறிவு; = இதை வசமாக்குதல்
2. இரண்டு = உகந்து=ஏற்கத் தக்கது என்றோ அல்லது தவறானது; = இவ்விரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுத்தல்;
3. மூன்று = தோழன், விரோதி, மிக்க வலிமையுள்ளவன் = எனும் மூன்றை நான்கால் ஜெயித்து விடுதல்;
4. நான்கு = நடந்துகொள்ளும் முறைகள் நான்கு, (1) சமாதானம், (2) அருளிரக்கம்,
(3) கலந்து பேசுதல், பிளவு உண்டாக்குதல்; (4) ஒறுதல், அதாவது தண்டித்தல்
= இதைத் தான், சாம, தான ,பேத, தண்டம் என சொல்வதுண்டு; இவைகளால்
ஜெயித்து விடல்
5. ஐந்து = (1) காமம், (2) க்ரோதம், (3) மதம், (4) மோகம், (5) மாச்சர்யம் என ஐந்து
குணங்கள் = அடக்கிக் கொள்ளுதல்
6. ஆறு = அரசனுக்கு வேண்டிய ஆறு இன்றியமையாத நடவடிக்கைகள், (1) உள் நாட்டில் அமைதி, (2) எப்போதும் போருக்குத் தயார் நிலையில், வேண்டிய ஆயுதங்கள், தளவாடங்களுடன் இருக்கச் செய்தல், (3) தேவைப்படும் போது முன் எச்சரிககையாகத் தாக்குதல் நடத்துவது, (4) விழிப்பு நிலையில், பின் வரும் காலத்திற்கு ஏது உகந்ததோ அவைகளை வேண்டிய ஏற்பாட்டுகளுடன் வைத்திருந்தல் அல்லது ஆயத்த நிலையில் முன்னதாகவே தயாராக இருத்தல், விளக்கிச் சொன்னால், எந்த ராணுவத்திலும், கீழ்க்கண்ட கோட்பாடுக்ளைக் கட்டாயமாக அனுசரிப்பார்கள்: {As a Main rule in any Armed Forces – During times of War, Fight for Peace; During times of Peace, Prepare for War}
• போரின் போது சமாதானத்திற்காக சண்டையிட வேண்டும்,
• சமாதான தருணத்தில், போருக்கான கடுமையான பயிற்சி, போருக்குத் தேவையான தளவாடங்கள், ஆகியவைகளைத் தயார் செய்து கொண்டே இருக்க வேண்டும்.
(5) தந்திரத்தை கையாளுதல், (6) பணியவைக்கும் முறைக்கு வேண்டிய சமயோசித திட்டம், அல்லது பணிந்துவிடுவதோ, இதில் எது வேண்டுமோ அவற்றை சமயத்திற்குத் தக்கவாறு தேர்ந்தெடுத்து கொள்ளுதல்
7. ஏழு = இவைகளை எல்லாமே விட்டு விட வேண்டியவை (1) வேசிகள் உறவு; (2) மது அருந்துதல்; (3) வஞ்சகம் (4) காட்டு மிருகங்களை வேட்டையாடுதல்; (5) மனக் கசப்பு ஏற்படுத்தக் கூடிய சொற்களைச் சொல்லா திருத்தல்; (6) கொடு வெறி கொண்டு சிறிதும் பொருந்தாத கொடுந் தண்டனையை அளித்தல், அதாவது பிறர் துன்பத்தில் தான் இன்பம் துய்த்தல்; 7) உல்லாச வாழ்க்கை வாழ்தல்.

நச்சு அதை உண்டவர்களை மட்டுமே பாதிக்கிறது. அந்த கால யுத்தத்தில் அந்தந்த ஆயுதம் குறிபார்த்து செலுத்தப்பட்டவரை மட்டுமே பாதித்தது. (அதாவது இக்கால யுத்தத்தில் அல்ல) ஆனால், அரச ரகசியங்கள் வெளிவரப் போமானால், இது நாட்டையே அழித்துவிடும்.

அடுத்தது அரச ரகசியங்களைக் காத்தல் பற்றி சிறு விளக்கம்:

[[[ரகசியங்களைக் காத்தல் என்பதற்கும், “”இந்திய நாட்டுக் கஜானாவுக்கே, பெரும் இழப்பை உண்டாக்கி, வரி ஏய்ப்புகள், சட்ட விரோதச் செய்கைகள், லஞ்ச லாவண்யங்கள், கருப்புப் பணப் புழங்கல்கள், சுங்க வரி கொடாமல் (ஏற்றுமதி, இறக்குமதிகளில்) கள்ளக் கடத்தலில் ஈடுபடுதல், அந்நிய நாணய செலாவணிப் பதுக்கல்கள், போன்ற பலதரப்பட்ட துரோகச் செயல்களில் இறங்கி, அதேசமயத்தில், சுய நலத்துடன் தனக்கும் தன்னைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே குறுக்கு வழியில் பணம் பண்ணும் மாபாதகத் தில்லுமுல்லு கள் தன் கண்முன்னே நடக்கும் போது, அதை பிரதம மந்திரி என்ற பதவி, அதிகாரங்கள் என கிடைத்த, இத் தருணத்திலும், இந்த கேடுகளை முளையிலேயே கிள்ளி எறியாமல் அல்லது நிறுத்தாமல், இவைகளைத் தெரிந்து வைத்திருந்தும் ஒரு நடவடிக்கையையும் எடுக்காமல் இருப்பது என்பது”” — ரகசியம் காத்தல் என்பதாகாது. மேலும், பெரும் அகில இந்திய பெருங்கட்சித் தலைவர், அடுத்து ஒரு மாகாணக் கட்சித் தலைவர் ஆகிய இருவரும், இந்த குளறுபடியில் முக்கிய, உடந்தை / பங்குதாரர் என அரசல் புரசலாகத் தெரிந்த தகவல்களை அன்றே அறிந்து வைத்திருந்தும், ஒன்றுமே அறியாதது போல இருந்துவிட்டால், இந்த பகல் கொள்ளையையும் ரகசியம் காத்தல் எனக் கொள்ள முடியாது. இவைகனைத்தும் தெரிந்த பின்னர், அடுத்த கேள்வி, குற்றம் செய்தவர்களோடு பிரதம மந்திரி மன் மோகன் சிங்ஜியோ அல்லது இவருக்கு நெருங்கிய உறவினர் யாராகிலும் ரகசிய உடந்தையா? எனக் கேட்க வைத்து விடுகிறது. இப்படி நினைப்பவர் களைத் தவறாக எடை போடுவதும் தவறு தான்]]].
எல்லோருக்கும் உகந்தவாறு செயலாற்ற வேண்டும். எல்லோருடன் கூடி வாழ வேண்டும், உங்களிடம் உபரியாக உள்ளதை பிறரிடம் தந்தளித்து களிப்படைய வேண்டும்; தனியாக நீண்ட பயணத்தை மேற்கொள்ளக் கூடாது. (“போகாத இடந்தனிலே போக வேண்டாம்”, என உலக நாதர் இயற்றிய நீதிநெறியில் இருப்பதுபோல) தூங்கும் போது தூங்கி, எழும் நேரத்தில் இழுந்திட வேண்டும். மற்றொரு விதத்தில் சொன்னால், பிறர் தூங்கும் போது தான் மட்டுமே விழித்திருத்தல், பல கெட்ட செய்கைகளைத் துண்டிவிட ஏதுவானது. இது நல்லதல்ல. பிறர் தூங்கும் போது விழித்திருப்பவர்களை “நிசாசரர்கள்” (நிசி=இரவு; சரர்=சஞ்சரிப்பவர்கள்) அதாவது இரவில் நடமாட்டம் செய்யும் ‘ராக்ஷசர்கள்’ எனக் கூறுவர். ராக்ஷசர்கள் எப்போதுமே மற்றவர்களுக்கு இடையூறு செய்வதில் காலங்கழிக்கும் தன்மையோர். தங்களை (கழகங்களை) இவர்களையும் (நிசாசரர்கள்=ராக்ஷசர்கள்) வழி வந்தவர்களென உறவு கொள்ளும் கழகங்கள் தமிழ் நாட்டில் மட்டுமே உண்டு. இந்த சுய-விமரிசனமும் சரிதானோ என்னவோ?!
புண்ணிய உலகம், சுவர்க்கத்தை அடைய ஒரேஏணி தான் உள்ளது. அது தான் சத்யம் எனும் ஏணி. இது சமுத்திரத்தைக் கடக்க உதவும் கப்பல் போலவும் சொல்லலாம்.

இனி பொறுமையின் மேன்மையை விளக்குகிறார்.
• பொறுமை துன்பக்கடலைத் தாண்டவல்லது. பொறுமையுள்ளவனால் எப்போதுமே அமைதியுடன் இருக்க முடியும்.
• இக்குணம் உள்ள பெருந்தகைமை உடையோனுக்கு மட்டுமே உரித்தானது. இது அவனுக்குத் ஆத்ம திருப்தி அளிப்பதோடு மல்லாமல், பிறருக்கு துன்பம் இழைக்காதிருக்கும் போது அவனுக்கே மன மகிழ்ச்சியையும் தரவல்லது.

[[[ஆங்கிலத்தில் ஓருரை உண்டு = Patience & civility are not weaknesses, they is controlled strength என்பதுண்டு. பொறுமை எனும் குணத்தை மிக்க மனத் திண்மையுள்ளவர்களால் தான் காக்க முடியும். இவனால் செயலாற்றப் படும் ஒவ்வொரு செய்கையும், அவனுள் எவ்வளவு பலமிருந்திருக்கிறது எனும் சீரிய தரத்தை, வெளிப்படுத்தும். இன்னொரு இடத்தில் சில சமயங்களில் இவ்வாறு ஆங்கிலத்தில் சொல்வதுண்டு. “His silence was very eloquent”= அச்சமயத்தில் அவன் பேசாதிருந்ததே வெடி குண்டு போன்று பேரொலியுடன், அவனுடைய நாவன்மையைப் பற்றி முழங்கிக் காட்டிற்று என இலக்கிய நயத்துடன் கூறுவதும் உண்டு.]]]
பொறுமையுள்ளவன் தகுந்த நேரத்தில் தகுந்த காரியத்தில் இறங்கும்போது அதாவது தாங்கொண்ணா துன்பத்தை எதிரிகள் இழைக்கும் போது, பொறுமையுள்ள வனுக்கு – எவ்வாறு ஒரே பாம்பு பல எலிகளை விழிங்கிவிடுவது போல, பூமி எவ்வாறு எலிகளையும், பாம்புகளையும் உள்ளடக்கி வைத்திருப்பது போல எதிரிகளனைவரையும் ஒரே சமயத்தில், தன் சமயோசித புத்தியாலும், போர்த் திறம் சார்ந்த நடவடிக்கைகளால், சமாளிப்பவராக இருப்பார்கள்.
மக்கள் மத்தியில் கீழ்க்கண்ட குணமுள்ளோர் என்றென்றும் புகழப்படுகின்றனர்.
1. கடுஞ்சொல் சொல்லாதவர் 2. தகுதி இல்லாதவரைப் புகழ்ந்து, அதனால் லாபமடையாதவர்.
ஒன்று, இரண்டென பத்துவரை பற்பல ஸ்லொகங்கள் விதுர நீதியில் உள்ளன. முன்னரே அறிவித்திருந்த படி, விதுர நீதியிலுள்ள எல்லா சுகோகங்களின் பொழிப்புரை களையும் அளிக்காமல், அவைகளிலிருந்து பொறுக்கி எடுத்த சில முக்கிய ஸ்லோகங்களே இங்கே தரப்பட்டுள்ளன. இவைகளில், ஒன்பது. பத்து (9,10) ஆகியவற்றைப் பற்றி இங்கே தந்திருக்கிறேன்.
ஒன்பதில் கூறியுள்ளவை:
नवद्वारमिदं वेष्म त्रिस्थूणं पञ्चसाक्षिकम् |
क्षेत्रज्ञाधिष्टितं विद्वान् यो वेद स पर:कवि: ||
நவத்³வாரமித³ம்° வேஷ்ம த்ரிஸ்தூ²ணம்° பஞ்சஸாக்ஷிகம் |
க்ஷேத்ரஜ்ஞாதி⁴ஷ்டிதம்° வித்³வாந் யோ வேத³ ஸ பர: கவி: ||

நமது உடலில் ஒன்பது வெளிச்செல்லும் வாயில்கள் உள்ளன. இரு கண்கள், இரு காதுகள், இரு மூக்கு த்வாரங்கள், ஒருவாய், ஒரு மலவழி, ஒரு சிறு நீர் வழி என ஒன்பது வழிகள் உள்ளன. இந்த உடலுக்குள் நம்மைத் தாங்க மூன்று தூண்கள் உள்ளன. அவைகள்: कप, पित्त वायू – கபம், பித்தம், காற்று என மூன்று தூண்கள், ஐந்து சாக்ஷிகள்: நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என பஞ்ச பூதங்கள் சாட்சிகள் இருக்கின்றன. ஆனால், இவையனைத்திற்கும் உடைமை உரிமையாளர் – ஆன்மா (ஒவ்வொரு உயிருக்குள் உயிராக இருக்கும் கடவுள்) என உணர்ந்தவனே அறிவாளியாகிறான்.
ஒவ்வொரு உயிருக்குள் உயிராக இருக்கும் கடவுள் எனும் கருத்தை பல கடவுளாக (polytheism) மக்கள் நினைத்து உருவகப் படுத்தித் தொழுவதும் உண்டு. போகப் போக இந்த உருவகமே அகத்திலும், புறத்திலும் பதியவைக்கும் வடிவமாகி நாளாவட்டத் தில் ஒரு மாபெரும் சக்தியாகிறது.
ஒருவருக்கும் தெரியாமல் பாப காரியங்களைச் செய்தால் தன்னை யாரும் கண்டுபிடிக்க முடியாது என சில நேரங்களில் சில மனிதர்கள்….. நினைப்பதுண்டு. குறைந்தது ஒவ்வொரு மனிதனுள் இருக்கும் ஒவ்வொரு ஆன்மா எனும் மனக் கடவுளுக்கு உடனுக்குடன் தெரியாமல் ஏதாவது நடந்துவிட இயலுமா? இதே இறைவனால், ஒவ்வொருக்குள் பிரத்யேகமாக அமைக்கப் பட்டுள்ள “தானியங்கும் மன ஒழுங்கு முறை எச்சரிக்கை” (mental auto-warning in-built system) அதாவது மன சாட்சி எனலாம். மனசாட்சிக்கு பதிலளிக்கும் முறையை, பழக்க வழக்கத்தால் செயலாற்றி, எச்சமயத்திலும், ஆயத்த நிலையில் வைத்திருக்க வேண்டும். எந்த கருவியானாலும் அததை தயார் நிலையில் வைத்திருந்தால் தான், வேண்டும் போது வேலை செய்யும். மனசாட்சியையே ‘நல்லது கெட்டது’ என அறிவிக்கும் சமசீர் நிலைக் கருவி (Thermostat) எனக் கொள்ளலாம். நம் எல்லை எது என அறிவிக்கும் இச்சீர் நிலைக் கருவி தெரிவிக்கும் எச்சரிக்கையையும் மீறி, பலதடவை நாமே நேர்மாறான செயலிலும் இறங்கி விடுகிறோமல்லவா? மேலே இதன் தொடர்ச்சியை நீங்களே உய்த்துணர்ந்து பாருங்கள்.
இப்படி நமக்கு நாமே “நல்லதையும், கெடுதலை”யும் உண்டாக்கி அதன் வினைப் பயனையும் நாமே அனுபவிக்கிறோம் எனத் தெரியலாம்!. இதனால், இங்கு நாம் இன்னொன்றையும் அறியலாம். அதாவது, இறைவனே நம் ஒவ்வொருவரையும் நம்மை நாமே சுதந்திரமாகக் கட்டுப்படுத்தி (நல்லது கெட்டது இவைகளில் எது சிறந்தென தேர்ந்தெடுக்கும்) கூறுபடாத முழுமையான தனித்தன்மையுள்ளவராக உண்டாக்கியுள்ளார் (self contained unit) எனவும் அறிந்து கொள்ள முடியும்.
இவ்வறிதலில், இப்படி நமக்கு நாமே நமக்கு “நல்லதையும், கெடுதலை”யும் செய்து அதன் வினைப் பயனையும் நாமே அனுபவிக்கிறோம் என அறியலாம். இறைவனே நமக்காக என்னென்ன வகைதுறை ஏற்பாடுகளைச் (Systematic arrangement) செய்துள்ளார் என நினைக்கும் போது அவர் செயல் நடை நம்மை எப்போதுமே பிரமிக்க வைக்கிறது. இறைவனே தனியாக வந்து ஒவ்வொரு தீவினைக்கும் “கியாம நாளன்று” (Day of Judgement) நம்மை குற்றக் கூண்டில் ஏற்றி, குற்றப் பத்திரிக்கையை படித்து, பின் தண்டனையை ஒவ்வொருவருக்கும் தனியாக உச்சரிக்கப் போகிறார் என எண்ண வேண்டவே வேண்டாம். நமக்கு நாமே தண்டனை அளித்துக் கொள்ளத்தான் போகிறோம். அப்பணியாற்றவே, நம் உடலாகிற வீட்டின் நடுவே மிக்க விழிப்புணர்ச்சியுடன் உள்ளத்தில் வீற்றிருக்கும் கடவுளே ஒவ்வொருவரிடமும் தனியாக நம்முள்தான் உள்ளாரே! அவரே தக்க வெகுமதிகளையும், தண்டனைகளையும் அளித்து நம்மை கவனித்துக் கொள்வார். ஒன்று திரட்டிய (cumulative) இந்த கருத்துப்படிவம் (concept) நமது எண்ணத்தில் எப்போதுமே தங்கி இருக்கவேண்டும். அப்போது தவறு நடந்துவிடுமா? இத்துடன் ஒன்று திரட்டிய (cumulative) என்பதை ஹிந்து மத கோட்பாடான மீண்டும் பிறவி மீண்டும் இறப்பு எனும் கருத்தையும் சேர்த்து எண்ணிக்கொள்ள வேண்டும். தனிப்பட்ட முறையில், இவைகளையும் மீறி தவறான சுய நலமெனும் சிந்தனைகளில், சொற்களில், மேலும் செய்கையில் ஈடுபட்டால், அதற்குத் தக்க தண்டனையை நாமே அளித்துக்கொள்ளப் போகிறோம் என்பதையும் நாம் அறிந்து கொள்ளல் வேண்டும்.
இதை அறியாதோர், பல நூற்றாண்டுகளாக பல மதங்களின் பெயரால் போதனை என ஏதேதோ சொல்லி மக்களுக்குள் குழப்பத்துடன் அழிவையும், தீவிர வாத வன்முறை களையும் உலகில் எங்கும் வேண்டுமென்றே இழைக்கின்றனர். இங்கு யார் யாரைக் குறியிட்டுச் சுட்டிகாட்டுகிறேன் என வெளிப்படையாகச் சொல்லவும் வேண்டுமா? ஆகவே எதையும் சீர் தூக்கிப் பாருங்களெனச் சொல்கிறேன்.

அடுத்தது பத்து பற்றி உள்ள நல்லுரை:

दश धर्म न जानन्ति धृतराष्ट्र निबोध तान् |
मत्त: प्रमत्त: उन्मत्त: श्रान्त: क्रुद्ध: बुभुक्षित: ||
त्वरमाणश्च लुब्ध्श्च भीत: कामी च ते द्श |
तस्मादेतेषु भावेषु न प्रसज्जेत पण्डित: ||
த³ஸ² த⁴ர்ம ந ஜாநந்தி த்⁴ரு«தராஷ்ட்ர நிபோ³த⁴ தாந் |
மத்த: ப்ரமத்த: உந்மத்த: ஸ்²ராந்த: க்ருத்³த⁴: பு³பு⁴க்ஷித: ||
த்வரமாணஸ்²ச லுப்³த்⁴ஸ்²ச பீ⁴த: காமீ ச தே த்³ஸ² |
தஸ்மாதே³தேஷு பா⁴வேஷு ந ப்ரஸஜ்ஜேத பண்டி³த: ||
கீழ் கூறிய பத்துவிதமானவர்கள் அறியமாட்டார்கள்: ஆகவே இவைகள் ஒருவரையும் அணுகாதவாறு கவனமாக இருக்க வேண்டும்.
1. குடிமயக்கத்திலுள்ளவன்
2. எதிலும் கவனமின்றி இருப்பவன்
3. பயித்தியம்
4. களைத்து இருப்பவன்
5. முன்கோபி,
6. பசியுள்ளவன்
7. அவசர அவசரமாக எதையும் செய்பவன்
8. பேராசையுள்ளவன்
9. அஞ்சியவன்
10. சிற்றின்பத்தில் நாட்டமுள்ளவன்

அடுத்து எங்கும் எதிலும் வெற்றி வாகை சூடவேண்டுமென எண்ணுபவன், எப்படி இருக்க வேண்டுமென ஒரு மிகப் பெரிய பட்டியலாகக் கொடுத்து விதுரர், விளக்குகிறார். இவைகளைக் கொண்டு, நம் நாட்டில் தலைமை (பீட) இருக்கையை சிக்கெனப் பற்றித் தன் உடைமையாக்கி, ஆட்சியில் அமர்ந்துதோரை, அல்லது ஆக்ரமித்து அனுபவித்துக் கொண்டுள்ளோரை மதிப்பிட்டுக் கொள்ளலாம்.

இப்பட்டியலில் உள்ளவைகளை அரசியல் செயலாட்சி திறத்தில் அல்லது சாதுர்யமாக நடந்து கொள்ளுதலில் வழிகாட்டியாகவும் (GUIDE / LESSONS ON DIPLOMACY) கொள்ளலாம்:
விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டவன்; சினம் கொள்ளாதவன்; நல்ல வகையில் தேடிய செல்வத்தை பாதுகாப்பாக முதலீடு செய்பவன்; நுழைபுலமிக்க பகுத்தறிவாளன். பகுத்து அறியும் அறிவு என்பதற்கு இச்சொல்லை கழகங்கள் தவறாக உபயோகிப்பது போலல்ல. கழகங்களுக்கு: “எந்தக் கொள்கைப் பிடிப்பும் இல்லாதிருப்பதே, கழகத்தின மிக முக்கியக் கொள்கை”. இது தான் கழகப் பகுத்தறிவு. அடிக்கடி சட்டையை மாற்றுவது போல அவ்வப்போது தேவையான கொள்கைகளை அவ்வப்போது மாற்றிக் கொள்வது, முன் முழு மூச்சுடன் ஏற்றுக்கொண்ட கொள்கைகளையும் சௌகரியம் போல கற்றில் பறக்க விட்டும் விடுவது – இது பகுத்தறிவல்ல, அது வடிகட்டிய சுத்த அயோக்கியத்தனம்); http://www.haindavakeralam.com/HKPage.aspx?PageID=3733&SKIN=I
(and other articles of Author on கழகம்)

கல்வி கேள்விகளில் சிறந்தவன் – இவனையே மக்களும் தங்களுக்குத் தலைமைப் பொறுப்பை ஏற்று நடத்த ஆற்றல் படைத்தவன் என எண்ணுவர்.
பிறரை நம்பவைப்பதற்காக நடிக்காதவர்; குற்றம் புரிந்தவரைப்பற்றி தக்க பரிசோதனை செய்த பின், குற்றத்திற்குத் தக்க தண்டனையளிப்பவன்; மேலாக தண்டனையின் எல்லையையும் நிர்ணயிக்கத் தெரிந்தவன்; மன்னிக்க வேண்டிவைகளை மன்னிக்கவும் தெரிந்தவன்; இவரைத் தேடி நேர்வழியில் செல்வமும் வந்து விடும்.

குயுக்தியாக சிந்தனை, சொல், செயலில், இறங்காதவன்; தன் போலவே வசதி, எதிரியிடம் இல்லாவிடினும் அவனை மதிக்கத் தெரிந்தவன்; தன்னவிட வலிமை வசதி நிறைந்தவரிடம் தானே வலுச்சண்டையில் மடத்தனமாக ஈடுபடாது, மாட்டிக் கொள்ளாது, காத்திருந்து வெற்றிபெறும் தருணத்தில், நடவடிக்கைகளில் இறங்குவான்; “ஔவையார்” அருளியது போல:
“” அடக்கமுடையார், அறிவிலார் என்றெண்ணிக்
கடக்கக் கருதவும் வேண்டா – மடைத்தலையில்
ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும்
வாடியிருக்குமாம் கொக்கு””
நெருக்கடி நிலையிலும் கலங்காது, வெற்றிக்கான வேலையில் ஒருமுகப்படுத்துபவன்; பரந்த மனத்தவன்; எத்தகைய இடரையும் சகித்துக்கொள்வான்; உரிமையுள்ள இடத்தில் பொறுப்பும் உளது என உணர்ந்தவன் (சோனியாவைப் போலல்ல); இவ்வலிமை எவனிடம் உள்ளதோ அவனே வெற்றி கொள்வான்.

வெளியில் அநாவசியமாக இராத்தங்காதவன் (விளம்பரத்திற்காக ராகுல் காந்தி போலல்லாது; பிறர் உலோக சட்டியில், தனக்கு பிளாஸ்டிக் சட்டியில் சுமந்து (மண் என) செல்லும் காட்சி போன்று); சூழ்ச்சிசெய்யாதவன்; களவாடாதவன்; புறங்கூறாதவன்; பிறர்மனை நோக்காதவன்; மது அருந்தாதவன்;

இவன் உண்மையில் ஓரு மதி நுட்பமுள்ள முதிர்ந்தவன்: மூன்று பிரிவான: தர்ம அர்த்த காமத்தில் (அறம், பொருள் இன்பம்) அவசரமாக காரியத்தில் இறங்காதவன்; கேட்கப்படும் போது மட்டுமே தக்க பதிலளிப்பவன் (speaking when spoken to); நண்பனுடன் வாக்குவாதத்தில் இறங்காதவன்; தன்னைப் புகழாதவர்மீது சீற்றம் கொள்ளாதவன்

காழ்ப்புணர்ச்சியற்றவன், பொறாமையால் அவதூறு பேசாதவன்; தனக்குத் தேவையான வலிமையில்லா விட்டால், பிறருக்காக உத்திரவாதத்தையோ அல்லது பிணைப் பொருளாக எதையும் அளிக்காதவன்; கருத்துப் பரிமாறிக்கொள்ளும் போது அது முறிந்து போகும் நிலையிலும் பொறுமையைக் காத்து நிலைகுலையாது உறுதியுடன் இருப்பவன்; பாராட்டுக்குரியவனாக இருப்பவன்;

மக்கள் யாவரும் இப்பேர்ப்படவரிடன் மிக அன்புடன் இருப்பார்கள்:

செருக்குணர்வு அற்றவன், எவரையும் அவன் இல்லாத போது மறைவிலும் மறந்து கூட தரக்குறைவாகப் பேசாதவன், (போகவிட்டுப் புறஞ்சொல்லித்திரிய வேண்டாம்-உலகநாதர் நீதி நெறிகள்).

பழைய கோளாறுகளை கண்டபோது கண்டபடி எதிரிகளுக்கு எதிராக உபயோகிக்காதவன்; “சங்கு சுட்டலும் வெண்மைதரும்” என்பது போல வசதி இன்மையிலும், தன் கம்பீரமான பெருந்தன்மையுடையவன்;

தன் நல்ல நிலைமையிலோ அல்லது மற்றொருடைய கெட்ட நிலையிலோ மகிழ்ச்சி கொள்ளாதவன்; பிறருக்கு இனாமாகக் கொடுத்ததைப் பற்றி பின்னர் வருந்தாதவன்

கீழே கொடுக்கப்பட்டவைகளில்: எவனால் மக்கள் தலைவனாக ஆக முடியும் என்பது பற்றி விதுரர் விளக்குகிறார்:

அந்தந்த இடத்து ஒழுகலாறுகள், தன் இன பழக்கவழக்கங்களையும் கடைபிடிப்பவன்; செய்த கெட்ட செய்கைகளுக்காக வருந்தி பிராயச்சித்தம் செய்பவன்; தன்னை நம்பியவர்களுக்கு துரோகம் செய்யமாட்டான்; எப்போதுமே மென்மையுடன் நடந்து, இவைகளைத் தன் சிந்தனை சொல், செயல்களில் காண்பிப்பவன்.

பெரியோர் மொழி / வழி : எவ்வாறு நம் புலங்களை (sense) செயல் ஒழுங்கு சுய கட்டுப்பட்டுடன் வைத்திருப்பது என்பது பற்றி, கீழ் கூறியவற்றை பெரியோர்கள் சொல்வதுண்டு. (இது விதுர நீதியில் இல்லை)
• நம் உடலே ரதம் (chariot)
• நம் உயிருக்குள் உயிராக இருக்கும் “ஆத்மா’ (கடவுள்) தான் நம் உரிமையாளர் (owner)
• நம் எண்ணங்களே (mind) உடல் எனும் ரதத்தை ஓட்டுனர் (charioteer)
• நம் புலங்களே (sense) இந்த ரதத்தை இட்டுச் செல்லும் குதிரைகள்
• நம் (heart) இதயமே, புலன்களைக் கட்டுப்படுத்தும் கடிவாளங்கள் (reins)
• நம் செல்வழிகளே (ways) புலன்கள் எனும் குதிரைகள் ஓடும் பாதை (Road)
• இனி நல்ல/கெட்ட இடத்தை போய் அடைவது, (destination) நம் வசத்தில் தான் உள்ளது.
இக்கருத்து முன்னரே இப்பகுதியில் கூறப்பட்டுள்ளது.
(இனி, மூன்றாவது பகுதி தொடரும்)

Series Navigation

Josh Schrei தமிழாக்கம்: சேஷாத்ரி ராஜகோபாலன்

Josh Schrei தமிழாக்கம்: சேஷாத்ரி ராஜகோபாலன்