ஸ்ரீபன்
ஆண்டு 2009 ற்கு
நண்பா
விடைபெறுகிறேன்
குருதி தோய்ந்த என் முகத்தை
நீ பார்க்க வேண்டாம்
துன்பங்களும் தோல்விகளும்
அனர்த்தங்களும் அழிவுகளும்
என்னிடமே தங்கிவிடட்டும்
நீ ஓட்டத்திற்கு தயார் எனில்
நம்பிக்கை என்ற கோலை மட்டும்
என்னிடமிருந்து பெற்றுக்கொள்
சுமக்கப்போவது
சிலுவைகளையா சிறகுகளையா
நீயே தீர்மானித்துக்கொள்
என்னைப்போல்
காடுகளிலும் பதுங்கு குளிகளிலும்
அகதியாக அலையாதே
மலைகள் மீதும் காடுகளிலும்
தீப்பந்துகளை வீசாதே
நாடுகளை எரியவிட்டு
குளிர்காயாதே
முடிந்தால் புறாக்களிடம்
சிறகுகளையும் அதன் உதடுகளையும்
கடன் வாங்கு
ஒலிவமரக் கிளைகளை பறித்துக்கொள்
குண்டுகள் துளைக்காத
கவசங்களை அணிந்துகொள்
பற
அலை
எங்கெல்லாம் ஒலிவன் கிளைகளை வீசமுடியுமோ
அங்கெல்லாம் வீசு
எங்கெல்லாம் எரிகிறதோ அங்கெல்லாம்
உன் உதடுகளால் ஊதி அணை
எங்கெல்லாம் சிலுவைகளை காண்கிறாயோ
அங்கெல்லாம் பூக்களைத் தூவு
போதும் மீண்டுமொரு மனிதன்
சிலுவையில் அறையப்பட வேண்டாம்
பதுங்கு குளிகளுக்காய் நிலங்கள் தோண்டப்படவேண்டாம்
முடிந்தால்
சுடுகுழலுக்கு முன்னால் பூக்களை நடு
அரபு தேசத்துக்கு ஒரு மலர்ச்செண்டை அனுப்பு
ஏகாதிபத்தியத்துக்கு சாவுமணி அடி
போ நண்பா
உனக்கான பாதை திறக்கப்பட்டுவிட்டது
கடைசியாக ஒரு வேண்டுகோள்
நான் சொன்ன இத்தனை விடயங்களையும்
உனக்குப்பின் வரப்போகும்
நண்பன் 2010ற்கு
விட்டுப்போகாதே
விடைபெறுகிறேன்
ஆண்டு 2008
stefiny20@hotmail.com
- எஸ் வைதீஸ்வரனுக்கு “விளக்கு” விருது
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பூர்வத் தோற்றப் பிரபஞ்சத்தில் நீர்மயச் செழிப்பு (Water Abundance in the Early Universe
- பின்னை தலித்திய நீதி:மாற்றுக்களை நோக்கி
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -17 << எப்படி வந்தான் என் மகன் ? >>
- தாகூரின் கீதங்கள் – 62 அவனைத் தேடும் பயணத்தில் !
- ‘வாசந்தி கட்டுரைகள்’ தரும் புதிய தரிசனங்கள்
- லூயி ப்ரெயிலின் 200ஆவது பிறந்த நாள் கொண்டாட்டம்
- முக்கோணக் கிளையில் மூன்று கிளிகள் !(பெருங்கதைத் தொடர்ச்சி பாகம் -5)
- மாவோவை மறத்தலும் இலமே.
- அண்ணா – ஒரு SWOT(சுவாட்) – அனாலிசிஸ்
- வார்த்தை ஜனவரி 2009 இதழில்…
- ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்) (1809-1865) காட்சி -2 பாகம் -5
- கதைகதையாய் சொல்லத் தெரிந்தவள்
- மாயமான் விளையாட்டு…
- மரணப்படுக்கையில் இருந்து ஒரு கடிதம்
- விடைபெறமுன்
- சாஸ்தாப் பிரீதி
- விஸ்வரூபம் – அத்தியாயம் இருபத்தொன்று
- இலங்கு நூல் செய்த எழுத்தாளர்கள்: – ‘புயலிலே ஒரு தோணி’ – ப. சிங்காரம்
- காலி செய்கிறேன்
- தீயின்மீது ஒரு உரையாடல்
- ‘தொகை இயல்’ – அ. பாண்டுரங்கன்: தொட்டனைத்தூறும் ஆய்வு மணற்கேணி
- தொல்காப்பியக் கவிதையியலும் தமிழ்ச்செவ்வியல் இலக்கியங்களும் கருத்தரங்கம்
- சதுரங்கம் என்னும் சர்வதேச மொழி