விஜயகாந்த் – ரஜினி ஒரு ஒப்பீடு…!!!

This entry is part [part not set] of 53 in the series 20040827_Issue

கோச்சா ( எ ) கோவிந்த்


கூரை ஏறி கோழி பிடிக்காதவன் வானம் ஏறி வைகுண்டம் போனானாம்….!

அது போல் இந்த ரஜினி காந்த் கதை.

அவர் தான் சார்ந்த சினிமாத் தொழிலில் செய்தவற்றைப் பார்ப்போம்.

—-

ரஜினி – விஜயகாந்த இருவரும் பிரபலமான பின் நடந்த முறைகளைப் பார்ப்போம்.

ரஜினி- ஏவிஎம், சத்யா மூவிஸ், கவிதாலயா, சுஜாதா பிலிம்ஸ் போன்ற தயாரிப்புகளில் தான் நடிப்பார். அவரால் எந்த ஒரு புதிய தயாரிப்பு நிறுவனமும் மேல் வந்ததில்லை.

விஜயகாந்த்- அம்மா மூவிஸிலிருந்த நடித்ததில் 80% புதிய பேனர்களே.

ரஜினி:: புதிய இயக்குனர்கள் யாரையுமே அறிமுகப்படுத்தியதில்லை.

விஜயகாந்த்: ஆபாவாணன், செல்வமணி தொடங்கி பல இளம் இயக்குனர்களின் சினிமா வாழ்க்கைக்கு காரணமானவர்.

முண்ணணியில் இருந்த போது சரத்குமார், போன்றோரை தைரியமாக அறிமுகப்படுத்தினார் (வில்லனாக) விஜயகாந்த்.

ரஜினி எந்த ஒரு நடிகரையும் அறிமுகப்படுத்தியதில்லை.

வளசரவாக்கத்தில் ஒரு மருத்துவமனையை ஆரம்பித்து, அதில் ஏழைகளுக்கு இலவச மருத்துவம் பார்க்க ஏற்பாடு செய்தார் விஜயகாந்த்.

திரையுலகமே வேலை நிறுத்தத்தில் இருந்த போது உல்லாசபுரி அமெரிக்காவில் சுதந்திரமாய் இருந்தவர் ரஜினி.

ஆனால், அந்தப் பிரச்சனையில் இறங்கி தீர்வு காண தோள் கொடுத்தவர் விஜயகாந்த்.

எம்ஜிஆருக்குப் பின், சினிமா அலுவலகம் வருபவர்களுக்கு வாய், வயிரார உணவு தந்தவர் விஜயகாந்த்.

வேறுபாடுடன் உணவு பரிமாறப்படும் சூழல் மாற்றி, படப்பிடிப்பில் கறி சோறு அனைவருக்கும் முதலில் போட்டவர் விஜயகாந்த்.

ரஜினிகாந்த் மற்றவருக்கு என்ன உணவு கிடைக்கிறது என்பது பற்றிய கவலை இல்லாதவர்.

காவிரிப் பிரச்சனையில் தமிழர்களை மிரட்டியவர் ரஜினிகாந்த்.

அய்யா அய்யா என்று காலில் விழுந்து விட்டு, கருணாநிதி முதுகில் குத்தியவர் ரஜினிகாந்த். கருணாநிதியின் தொகுதியிலேயே, இரட்டை இலைக்கு வாக்களித்ததாகச் சொன்னவர்.

கார்கிலுக்கு 5 லட்சம் தானம் கொடுத்து, வீரர்கள் உடல் வரும் போது நேரில் போய் அஞ்சலி செலுத்திய விஜயகாந்த் எங்கே, கருணாநிதி முன்னிலையில் , பொதுகூட்டத்தில் அறிவிப்புடன் 2 லட்சம் தந்த ரஜினி எங்கே… ?

யாருடனும் முகம் கொடுத்துப் பேசாத, திரையுலகப் பிரச்சனைக்கு வந்து உதவாத ஒரு மனிதர் ரஜினிகாந்த்.

அவரின் பயத்தின் மெளனத்தை மோனம் என்று தப்பர்த்தம் பண்ணிவிட வேண்டாம்.

வானத்தில் பெரிதாய் பறக்கும் பலூன் மாதிரி தான் அவரின் தோற்றம் மீடியா எனும் காற்றின் உதவியுடன் இருந்தது. அதில் போன தேர்தலில் விட்ட அவரின் சொந்த வாய்ஸ் குண்டூசியாக மாறிக் குத்தியதில் புஸ் என்று காற்றுப் போன பலூனான இன்று இருப்பது தான் அவரின் உண்மை நிலை.

முதலில், குழம்பாமல் ஒரு திரைப்படத்தை எடுத்து முடிக்கட்டும்.

இவர் யோசிசிசிசிக்கும் நேரத்தில் விஜயகாந்தும், கமலும் பல படங்கள் வெற்றிகரமாக எடுத்து விட்டார்கள். இது மாதிரி மக்கள் பிரச்சனையில் யோசித்தால், பி.எஸ்.வீரப்பா பாணியில் சொல்வதானால் ‘ நாடும் மக்களும் நாசமாகி விடுவார்கள் ‘.

கல்மனத்தையும் கரைத்த கும்பகோணம் வராதவர். இவர் வந்தால் பிரளயம் நடக்கும் என்ற நினைப்பு மட்டும் இன்னும் பொழைப்பைக் கெடுக்கிறது.

மக்களின் நல்லது கெட்டதுகளில் பங்கேற்காத ரஜினி, துறவுக்கும் போகாம, இல்லறத்துக்கும் போகாம குழப்பும் ரஜினியை, மனிதாபிமானமுள்ள , தலைமைப் பண்புள்ள விஜயகாந்துடன் ஒப்பிட்டு சிரிக்க வைக்காதீர்கள்.

கோச்சா

— பி.கு: 1. இந்த கடிதம் ரஜினி – விஜய்காந்த் ஒப்புமை பற்றி மட்டுமே. விஜயகாந்தின் அரசியல் பிரவேசம் பற்றியதல்ல.

2. ஊமை விழிகள் பாத்திரப்படைப்பு பற்றி ஞாநி சொல்வது அவரின் சொந்தக் கற்பனையே. அந்த காலங்களில், ஆர்.வி.உதயகுமார், ஆபாவாணன், ரவியாதவ், ரமேஷ், அரவிந்த்ராஜ் அவர்களுடன் பழகியதால், அந்தப் படக்கதை எம்.ஜி.ஆர், கருணாநிதி நினைத்து செய்ததல்ல.

மேலும், பொதுவாக இன்று வரை சினிமாவில் நல்ல அரசியல்வாதி என்றால், கதர் & காங்கிரஸ் குறியீட்டுடன் படைப்பது வழக்கம். அதும் போக வில்லத்தனமான அரசியல்வாதி பாத்திரம் கண்டால் காங்கிரஸ் அல்லாத கட்சினரை நினைப்பதற்கு மக்களே பொறுப்பு.

Series Navigationரவி சுப்பிரமணியன் கவிதைகள் >>

கோச்சா (எ) கோவிந்த்

கோச்சா (எ) கோவிந்த்