பசுபதி
தண்டமிழில் கவியாப்போர் தவறி ழைத்தால்
. . தள்ளிடுமோர் சங்கத்துப் பலகை இல்லை ;
வென்றிக்கோர் விலையாகப் புலவர் காதை
. . வெட்டிடுமோர் குறடுகொண்ட வில்லி இல்லை ;
குன்றனைய குற்றங்கள் குவிக்கும் என்னைக்
. . குறைகூறக் கூரறிவுக் கீரன் இல்லை ;
மின்குப்பை ஜல்லியடி வீணர் மேயும்
. . மின்வலையில் மேதையென மின்னு வேனே — வெறும்
. . மேம்புல்மேய்ந் தேகாலம் தள்ளு வேனே ! (1)
செருகலெனச் சீறும் ‘டி. கே.சி. ‘ இல்லை ;
. . சிரச்சேதம் செய்ஒட்டக் கூத்தன் இல்லை ;
கருத்துகளைக் கேலி செய்யக் ‘கல்கி ‘ இல்லை ;
. . கடிந்துவசை சொல்காள மேகம் இல்லை ;
விருத்தமென்று வருத்தப்பா வீச லாமே ;
. . வீரபத்ரர் விதியெல்லாம் மீற லாமே!
இறுமாப்பை ஒளிவளையம் என்ற ணிந்தே
. . இணையத்தில் இரவியென இலங்கலாமே ! — இங்கே
. . எளிதாக ஏமாற்றிப் பிழைக்க லாமே ! (2)
அம்பலத்தில் அங்குமிங்கும் அஞ்சல் மூலம்
. . அன்றாடம் அரங்கேறி ஆடு வேனே !
தம்பட்டம் தட்டுவதைத் தவமாய்க் கொண்டு
. . சளைக்காமல் தற்பெருமை சாற்று வேனே !
சம்பந்தம் சற்றுமின்றிச் சான்றோர் பேரைச்
. . சட்டென்று தகவலிலே சொருகு வேனே !
வம்புகளை வாய்மையென மாற்று வேனே!
. . வலைஞனென மாபெரும்பேர் வாங்கு வேனே ! — வைய
. . வலைதந்த வரமெனமார் தட்டு வேனே ! (3)
****
வீரபத்ரர்= ‘விருத்தப்பாவியல் ‘ ஆசிரியரான வீரபத்திர முதலியார்;
ஒளிவளையம் = halo;
வலைஞன் = வலைக் கலைஞன் .
- வலைதந்த வரம்
- கவிஞர் ம திலகபாமா நூல் வெளியீட்டு விழா
- பிறவழிப் பாதைகள் (தேவநேயப்பாவணர், பாரதியார் விருது)
- அம்மா வந்தாள்: மரபும் மனப்போராட்டமும்
- ‘கண்ணகி என்ற ஒரு கற்பு இயந்திரம் ‘ – ஒரு கடிதம்
- கத்தரிக்காய்ப் பச்சடி
- அரைத்துவிட்ட முட்டைகுழம்பு
- வெண்டைக்காய் அவியல்.
- மாபெரும் பூகம்பங்கள் பழங்காலச் சமுதாயங்களை அழித்திருக்கலாம்
- எபோலா வைரஸ் நோய் வெகுவேகமாக காபோன் நாட்டிலிருந்து பரவி வருகிறது
- அண்டார்டிகாவில் உருகும் பனிப்பாறைகள் கடல் மட்டத்தை உயர்த்துகின்றன என நிபுணர்கள் கூறுகிறார்கள்
- தட்பவெப்பத்தில் திடார் மாறுதல்கள் நடப்பதற்கும் அதனால் பேரழிவுக்கும் அதிக வாய்ப்புகள் இருக்கின்றன
- கால்களை வாங்கியவன்
- டெங்கே காய்ச்சல்
- இதம்
- என் மண் மீதில்…
- இந்த வாரம் இப்படி – டிசம்பர் 17, 2001
- இந்திய பாராளுமன்றத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்.
- சீனாவை நம்பி இருக்கும் பர்மா
- எங்கிருந்தோ வந்தவர்களும் இங்கிருக்கும் ஏமாற்றுக் காரர்களும்
- மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கவனத்துக்கு உதகை பற்றி
- ஒளவை – 9,10
- மேசை என்றால் மேசை (Ein Tisch ist ein Tisch)
- கழிமுகம்