1 அல்லது 2 பாகற்காய்கள்
1/2 தேக்கரண்டி உப்பு
1/2 தேக்கரண்டி மஞ்சள்தூள்
1 நடுத்தர அளவுள்ள சீனிக்கிழங்கு
1 பெரிய உருளைக்கிழங்கு
சிறிதளவு பீன்ஸ்
நடுத்தர அளவுள்ள ப்ரோக்களி broccoli
3 மேஜைக்கரண்டி நெய் அல்லது எண்ணெய்
1 தேக்கரண்டி கரம்மசாலா
1 தேக்கரண்டி இஇஞ்சிநறுக்கியது
1 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் நறுக்கியது
1 பிரியாணி இலை
2 தேக்கரண்டி உப்பு ருசிக்கேற்ப
2 தேக்கரண்டி வெல்லம்
செய்முறை
பாகற்காயை வட்டம் வட்டமாக நறுக்கி அதில் உப்பு மஞ்சள் தூள் தடவி வைக்கவும். உருளைக்கிழங்கை உரித்து சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். பீன்ஸ்களை சிறிய துண்டங்களாக வெட்டிக்கொள்ளவும். பிரோக்களி காம்பை வெட்டி சிறிய துண்டங்களாக வெட்டிக்கொள்ளவும்.
ஒரு வாயகன்ற வாணலியில் எண்ணெய் அல்லது நெய் ஊற்றி அதில் பாகற்காய் துண்டங்களைப் போட்டு வறுக்கவும். பொன்னிறமாகும் வரை வறுத்து அதனை எடுத்து எண்ணெய் எடுத்து காகிதத்தில் வைக்கவும். மீத எண்ணெயை ஊற்றி அதில் கடுகு உளுத்தம்பருப்பு போட்டு தாளித்து அதில் இஞ்சி. சிவப்பு மிளகாய் பிரியாணி இலை ஆகியவற்றைப் போட்டு சற்று வதக்கவும். இதில் வெட்டிவைத்த காய்கறிகளைப் போட்டு 5 அல்லது 8 நிமிடங்கள் வதக்கவும். உப்பு, வெல்லம், ஒரு கோப்பை சுடுதண்ணீர் ஆகியவற்றைச் சேர்க்கவும். பாக்ற்காயையும் சேர்த்து மூடி கரம்மசாலா சேர்த்து மிருதுவாக வேகும்வரை வைக்கவும்.
இறுதியில் ஹாட் மஸ்டர்ட் என்ற திரவத்தை ஒரு தேக்கரண்டி சேர்த்தும் பறிமாறலாம்.
***
- கல்வெட்டுகள்
- சின்னச்சின்ன ஆசை
- மனைவி…
- இலையுதிர் காலங்கள்
- கோலத்தைப் புறக்கணித்த புள்ளிகள்.
- கொள்கை பரப்புதலில் கொங்கை பற்றிய கோட்பாடுகள்…
- ‘திண்ணை ‘க்கு ஒரு குறிப்பு.
- தேவதேவனின் வீடு :ஒரு குறிப்பு
- எளிமையின் உறையும் மேன்மை (எனக்குப் பிடித்த கதைகள் – 22 -ஸெல்மா லாகர்லாவின் ‘தேவமலர் ‘)
- தன்படை வெட்டிச் சாதல் [தளைய சிங்கம் விமரிசனக்கூட்டப் பிரச்சினை பற்றி]
- வங்காள முறை பாகற்காய் கறி
- அறிவியல் மேதைகள் -இப்போகிரட்ஸ் (Hippocrates)
- விண்ணோக்கிக் கண்ணோக்கும் ஹப்பிள் தொலை நோக்கி
- நான்காவது கொலை!!! (அத்தியாயம் : இரண்டு)
- வந்ததும் சென்றதும்
- என் வேலை
- தீ, திருடன், சிறுத்தை
- ஆத்ம தரிசனம்
- தேவதேவன் கவிதைகள் : வீடு
- ஒரு ஜான் வயிரும் சில கோரிக்கைகளும்.
- வீடு வேண்டி
- என்னவள்
- இந்திய மார்க்சீயமும் அம்பேத்காியமும்
- உலக நாடுகளின் கடன் – ஆரம்பமும், தொடர்ச்சியும் – ஒரு எளிய முன்னுரை – பகுதி 3
- இந்த வாரம் இப்படி – ஆகஸ்ட் 12 2002
- பிரம்ம புரம்