ரஷீத் மாலிக் எழுதிய குவாதீம் ஹிந்துஸ்தான் கி டாரீக் கே சந்த் கோஷே – புத்தக அறிமுகம்

This entry is part [part not set] of 35 in the series 20030215_Issue

சயீத் மாலிக்


மாலிக் தன்னுடைய சமீபத்திய புத்தகம் ‘ஹிந்துஸ்தான் கீ தாரீக் : சந்த் கோஷே ‘ (இந்தியாவின் காலக் கிரமம்: சில குறிப்புகள்) என்ற இந்தியவியல் புத்தகத்துல் இசைவரலாற்றாசிரியர்களையும், எழுத்தாளர்களையும் விழிப்படையச் செய்திருக்கிறார். இவர் ஒரு வரலாற்றாசிரியர். இசைவரலாற்றியல் தெரிந்தவர். புனைகதைகளும் எழுதுபவர். ஆரியக் கோட்பாட்டுத் தோற்றம் பற்றி ஏற்படுத்தப்பட்ட பொய்களையும், ராகங்களுக்கிடையில் உள்ள உறவுகளையும் பற்றி பல கருத்துகளைக் கேள்விக்குள்ளாக்குகிறார். அவருடை முந்திய நூல் ஒன்றில் அமீர் குஸ்ரோ சாஸ்திரிய சங்கீதத்தைச் செப்பனிட்ட வரலாற்றை எழுதியுள்ளார். படித்த பலர் பாராட்டினாலும் , சார்பு நிலை கொண்ட இசையியல் அறிவாளிகள் சிலர் தைக் கண்டனமும் செய்தனர்.

இந்தியவியல் என்பது என்பது இந்தியத் துணைக்கண்டத்தின் தொல்வரலாற்றின் ஆய்வாகும். உலகில் வரலாறு பயிலும் கல்லூரி மாணவர்களுக்கு இது ஒரு கட்டாயபாடம். ஆனால் பாகிஸ்தானின் பாடத்திட்டத்தில் இது இடம்பெறவில்லை. ‘எகிப்தியல் ‘ ‘ சீனவியல் ‘ ‘சிந்துஇயல் ‘ போன்ற வார்த்தைகளை ஒப்ப இந்த வார்த்தையை உபயோகிக்கிறார்கள். பாகிஸ்தானின் இலக்கிய ஏடான ‘ஃபானூன் ‘ -ல் வெளிவந்த தொடர் இது. இது பற்றி மற்ற அறிஞர்கள் எழுதிய பல ஆய்வுகளையும் இவர் மேற்கோள் காட்டுகிறார்.

மதச்சார்பற்ற நூல்களைப் பற்றி பேசும்போது மாலிக் சில இந்து புனித நூல்களைக் குறிப்பிடுகிறார். ரிக் வேதம், சாம வேதம் , யஜ்உர் வேதம், அதர்வண வேதம் ஆகியவை இவை. பாகிஸ்தானின் வரலாற்றாசிரியர்களுக்கும் , மாணவர்களுக்கு இவை பற்றி எதுவும் தெரியாது. ஆயினும் இதை ஆதாரப்படுத்தியதாகச் சொல்லிக் கொண்டு இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாற்றை மாற்றி எழுத முயல்கிறார்கள். இவற்றை மட்டுமே நம்பி வரலாறு எழுதப் படுவதும் ஆபத்தானது என்கிறார் மாலிக். மொழிவெளியீடு மட்டுமே கொண்டு இவற்றை உபயோகிக்கக் கூடாது என்பது அவர் கருத்து.

உபநிடதங்களும், சூத்திரங்களும் மட்டுமே அல்லாமல், அகழ்வாராய்ச்சி, மானிடவியல், தொல்மானிடவளர்ச்சியியல் போன்றவற்றையும் இவற்றுடன் பொருத்திப் பார்த்துத் தான் முடிவுகளுக்கு வரமுடியும்.

இந்த நூலின் ஒரு பகுதி என்றும் தீராத ஆரிய இனப் பிரசினை பற்றியும் பேசுகிறது. மொழியை இனவரலாற்றின் அடிப்படையாய்க் கொள்வது பற்றியும் மாலிக் கேள்விக்குள்ளாக்குகிறார். ஆரிய இனவாதம் மொழியை மட்டுமே அடிப்படையாய்க் கொண்டிருப்பது என்று கூறி, இந்தச் சந்தர்ப்பத்திம் சிந்திகளின் தோற்றம் பற்றிப் பேசுகிறார்.

சிந்தி மொழி பேசும் மக்கள் ஓர் இனம் என்று கூற முடியுமா ? இது போன்ற ஒரு கேள்வியை லாகூரில் பிறந்த இந்திய வரலாற்றாசிரியர் ரோமிலா தாபரும் எழுப்புகிறார் என்று தெரிவிக்கிறார். அமெரிக்காவில் ஸ்பானிஷ், இதாலியர்கள், ஆப்பிரிக்கர்கள் போன்ற பலரும் ஆங்கிலம் பேசுகின்றனர் என்பதால் எல்லோரையும் ஓர் இனம் என்று அழைக்க முடியுமா என்பது தாபரின் கேள்வி. மாலிக் 19ம் நூற்றாண்டுக்கு முன்னால் ஆரியன் என்ற வார்த்தையோ அதை ஒத்த வார்த்தையோ புழக்கத்தில் இல்லை என்று தெரிவிக்கிறார். இந்த வார்த்தை சமஸ்கிருதம், இந்தி, பெர்சியன் தமிழ் போன்ற எந்த மொழியிலும் புழக்கத்தில் இல்லை. 19-ம் நூற்றாண்டில் தான் இந்த வார்த்தையே வருகிறது. ரிக் வேதத்தின் கிட்டத்தட்ட 1530,000 வார்த்தைகளில் ஆரியன் என்ற வார்த்தை வெறும் 36 தடவைகள் தான் வருகிறது. பிரிட்டிஷ் இந்தியவியலாளர்களின் கற்பனையில் தோன்றி உதித்தது தான் இந்த வார்த்தை என்பது மாலிக்கின் முடிவு. ஆரிய இனவாதம் வடக்கு இந்திய மக்களுக்கும் , தென்னிந்திய மக்களுக்கும் இடையே ஓர் அகழியை உருவாக்க பிரிட்டிஷ் இந்தியவியலாளர்கள் இட்டுக்கட்டிய ஒரு சொல் இது.

‘தெற்காசியாவில் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி தன் மேலாண்மையை நிறுவிய பிறகு, ஆரியர்கள் இந்தியாவின் பூர்வகுடிகள் என்று அழைக்கப் படுவது அவர்களுக்குப் பிடிக்கவில்லை. ஆரியர் என்று அழைக்கப் பட்டவர்கள் இந்தியத் துணைக் கண்டம் மட்டுமின்றி எல்லாத் திசைகளிலும் மத்திய கிழக்கு, கிரீஸ், எகிப்து என்று பரவியிருப்பதும் அவர்களுக்குப் பிடிக்கவில்லை ‘ என்பது மாலிக்கின் ஆய்வுக் குறிப்பு. கம்பெனி இந்த அடையாளச் சிக்கலை விடுவிக்குமாறு மாக்ஸ் முல்லரைக் கேட்டுக் கொண்டார்கள். அவரும் அடி பணிந்து ஆரிய இனக் கோட்பாட்டை உருவாக்கி , இந்தியாவில் ஆரியர்கள் அதாவது ஐரோப்பியர்கள் படையெடுத்து வந்து , பூர்வ குடிகளை – அதாவது திராவிடர்களை , இந்தச் சொல்லும் 1830 வாக்கில் கிருஸ்தவ பிரசாரகர்களால் பிரபலப் படுத்தப் பட்ட சொல் தான் –தெற்கு நோக்கித் துரத்தி விட்டதாகக் கட்டுக்கதையை எழுதினார்.

ஆகஸ்ட் 1947-க்குப் பிறகு இந்தக் கருத்து ஒரு புதிய திருப்பத்தை இந்தக் கருத்துக்குக் கொடுத்து , இந்தியாவின் தேசிய வரலாற்றாசிரியர்கள் ஆரிய படையெடுப்பு நடக்கவே இல்லை , ஆரியர்கள் இந்தியாவின் பூர்வ குடிகள் என்று எழுதினார்கள்.

ராகினிகள் பற்றிய தன் அத்யாயத்தில், ராகங்கள், ராகினிகள் அவற்றின் உபராகங்கள் ஆகியவற்றைப் பற்றிய பல பிரமைகளினை உடைக்கிறார். இந்த தேற்றமும் இன்னொரு கட்டுக்கதை எனக்கூறி, இந்து இசையியலாளர்கள் மற்றும் மானுடவியலாளர்களின் ஞானத்தை கேள்விக்குள்ளாக்குகிறார். துணைக்கண்ட மெலோடி வரிவடிவத்தில் மட்டுமே ராகங்கள் இருக்கின்றன என்றும் நிரூபிக்கிறார். இந்த கருத்துருவம் நம் இசையில் சுமார் 10ஆம் நூற்றாண்டில்தான் புகுத்தப்பட்டது என்றும், ராகம் என்ற வார்த்தை இசை பற்றிய எந்தப்புத்தகத்திலும் இல்லை என்றும், ராகினிகளும் அவற்றின் உற்பத்திகளும் இசைபற்றிய புத்தகங்களில் சுமார் 14ஆம் நூற்றாண்டில்தான் புகுத்தப்பட்டன என்றும் கூறுகிறார். இந்த இரண்டு வார்த்தைகளும் உவமையாகத்தான் உபயோகிக்கப்பட்டிருக்கின்றன.

நாஸிர் ஜைய்ராஜ்பாய் எழுதிய வட இந்திய ராகங்கள் பற்றிய புத்தகத்திலும் இதையே குறிப்பிடுகிறார் அவர். ‘கவித்துவமான கற்பனை வளமை கொண்டு ராகங்கள் இந்து கடவுள்களோடும், வண்ணங்களோடும், நட்சத்திரங்களோடும் இன்னும் இருக்கும் இயற்கை மற்றும் இயற்கை மீறீய விஷயங்களுடன் இணைக்கப்பட்டு பல ராக மாலையாக ஓவியங்கள் தீட்டபட்டு அவற்றின் காணும்படிவத்தால் அடையாளப்படுத்தப்பட்டது ‘

ராகா-ராகினி என்ற கருத்துருவம் என்பது 7 ஸ்வர ராகினி 5 அல்லது 6 ஸ்வர ராகங்களின் அடிப்படியிலிருந்து வருகின்றது என ராக-ராகினி பற்றிக்கூறுபவர்கள் கூறுகிறார்கள். எப்படி 5 ஸ்வர ராகம் 7 ஸ்வர ராகினியைக்கொடுக்கமுடியும் என்று கேட்கிறார். இது வெறும் இந்து கட்டுக்கதைதான் என்று கூறுகிறார்.

ரஷித் மாலிக் அவர்கள் பல புத்தகங்களை ஆராய்ந்து பல புத்தகங்களிலிருந்து மேற்கோள்களுடன் இந்தப்புத்தகத்தை எழுதியிருந்தாலும் மேற்கோள்காட்டும் புத்தகங்கள் எளிதில் கிடைப்பதில்லை என்று கூறவேண்டும். இந்தப் புத்தகம் இந்தியத்துணைக்கண்டத்தில் இசையைப்பற்றியும் பழைய வரலாற்றையும் கற்கும் பலருக்கும் இது மிகவும் உபயோகமான புத்தகம்.

Qadeem Hindustan ki taareekh ke chand goshay (Indology – a few peeps into ancient Indian history)

By Rashid Malik

Fiction House, 18 Mozang Road, Lahore

Tel: (042) 7237430

312pp. Rs200

****

Exploding Old Myths – Rashid Malik, reviewed by Sayeed Malik 09 February 2003 Sunday Dawn

Series Navigation

சயீத் மாலிக்

சயீத் மாலிக்