யோனி பிளஸ் முலை = நாஞ்சிலார் பிளஸ் சிபிச் செல்வன் = பாராட்டுகள்

This entry is part [part not set] of 53 in the series 20040827_Issue

குட்டி பத்மா


முலை ஏய் எனக்கு ஆதரவா என்னை ஒருத்தர் உயிாமையில் பேசியிருக்காரே பாத்தியா ?

யோனி என்னன்னு பேசியிருக்காரு ?

முலை என்னுடைய உண்மையான பேரைச் சொன்னா பச்சையா கொச்சையா இருக்குன்னு எல்லாரும் ஏசுவாங்க. ஆனா

இப்ப அப்படி சொன்னா தப்பில்லைன்னு நாஞ்சில் நாடன் பேசியிருக்காரு.

யோனி பரவாயில்லையே. ஏற்கெனவே ஒன்னை இறுகக் கட்டி அடக்கி வைச்சிருக்காங்க. அதையே வெறிக்க

வெறிக்க பாப்பாங்க. ,இனிமே தைரியமா ஒன்னைத் தொட்டே பேசுவாங்க. கேட்டா இதிலே என்ன தப்பு

இருக்கு ? ம்பாங்க. நம்ம நண்பா செயப்பிரகாசம் சொன்னது மாதிா காது வாய் மூக்கு மாதிரி இதுவும் ஒரு

உறுப்புதானேன்னு சொல்லித் தப்பிச்சுடுவாங்க.

முலை நாஞ்சில் நடன் சொல்றது மாதிாயும் சொல்லலாம்..குட்டி ரேவதி சொல்றது மாதிரியும் சொல்லலாம்.

ஆண்டாள் சொல்றது மாதிரியும் சொல்லலாம்.

யோனி ஆமாமா எனக்குப் புரியுது.எப்படின்னா பூவை புச்பம்னும் சொல்லலாம் புய்ப்பம்னும் சொல்லலாம்

முலை அட நீ வேற எனக்கு என்னென் பேரு அழகழகா வைச்சிருக்காரு தெரியுமா ?

யோனி என்ன மாாபகம்இ கொங்கை கலசம் அப்டி இப்டின்னு இருக்கும்.

முலை அய்யோ அதெல்லாம் ஓல்டு பேசன். நியூவாக எனக்கு என்னென்ன பேர் தெரியுமா ?

யோனி அட சொல்லித்தான் தொலை

முலை தொங்கு முலை , கூா முலை, துவண்ட முலை, நீண்ட முலை, வற்றிய முலை, குண்டு முலை, சப்பை முலை,

மொக்கை முலை

ஆடு முலை , ஆடா முலை, காற்று இடை புகா முலை

யோனி நிறுத்து நிறுத்து பலே கில்லாடிதாம்ப்பா நாஞ்சில் நாடன், எத்தனை முலையைப் பாத்திருக்காரு. .

சா எனக்கு ஒரு சந்தேகம். அதாவது பிராவுக்குள்ளே நீ அடக்கமா ஒக்காந்திருக்கே. ஒன்னைக் கூப்பிடப்

போறது ஒன்னோட வீட்டுக்காரன். ஆனா இவரு எதுக்கு ஊரு முலைக்கெல்லாம் வக்காலத்து வாங்கிட்டு இருக்காரு ?

முலை ஏன்னா இன்னிக்கு திரைப்படம் ஓடறதுக்கு காரணமே நாங்கதான்னு நாஞ்சில் நாடன் நல்லா ஆராய்ச்சி

பண்ணிியிருக்காரு துமட்டுமில்லே. திரைப்படத்திலே காண்பிச்சா தப்பில்லே. அதுக்கு பழனி பாரதி

பாட்டெழுதினா தப்பில்லே. ஆனா எங்க குட்டி ரேவதி எங்களை ஆதரிச்சு முலைன்னு பொத்தகம் போட்டாங்க.

அதைத் தப்புன்னு பெரிய ஆாப்பாட்டம் பண்ணினாங்கன்னு உதாரணத்தோட நாஞ்சிலாரு வெளுத்து வாங்கிட்டாரு

யோனி சரி சரி நீ ஒன்னும் பெருமை பித்திக்காதே என்னைப் பத்தி அருமையா எழுதியிருக்காரு சிபிச்

செல்வன்

முலை என்னனுன்னு ?

யோனி நீர் பிளஸ் நெருப்பு = யோனி அப்டின்னு தலைப்பே கொடுத்திருக்காரு பன்முகத்திலே

முலை அப்படியா ரொம்ப இன்ஸ்ட்ரஸ்ட்டா இருக்கே

யோனி நாளைக்கு நான் மீதியப் வந்து பேசுறேன் இப்ப டைம் ஆகிடுச்சு

( தொடரும் )

rawkutty04@hotmail.com

Series Navigationரவி சுப்பிரமணியன் கவிதைகள் >>

குட்டி பத்மா

குட்டி பத்மா