யாரிந்த நீதிபதிகள் ?

This entry is part [part not set] of 43 in the series 20070104_Issue

சி. ஜெயபாரதன், கனடா


உங்களில் தூயவன், உத்தமசீலன்
எவனோ
அவன் மட்டும்
முன்வந்து
இந்தக் கல்லை எடுத்து
அந்த
வேசியின் மீது
வீசட்டும் என்று
ஏசு பெருமான்
வேண்டிக் கொண்டார்!
வெள்ளை மாளிகை
பேரழிவுப் போராயுதம் கர்ப்பத்திலே
உருவாக்கிப்
பெற்றெடுத்துக் குண்டாக்கிச்
நேராகப் பயமுறுத்தும்
பேராற்றல் பிதா,
ஆயிரம், ஆயிரம்
பிரளயக் கணைகள் பெருக்கி
பிறருக்குப்
பாதை காட்டிய
பார்த்த சாரதி!
ஹிரோஷிமா, நாகசாகி மீது
கோரக் குண்டுகள் போட்டப்
பூதப் பேரரசு!
துச்சக் காசுக்கு
நச்சு வாயுப்
பிச்சு வாக்களை
சதாமுக்கு விற்ற நண்பன்!
வியட்நாம் மாந்தர் மேல்
விஷ வாயு
வில்லைகளை
விமானத்தின் மூலம் கொட்டிய
விடுதலைப் போராளிகள்!
இந்த அரக்க வம்சம்
எப்படி
கட்டளை இடலாம்,
கயிறைக் கொடுத்துச்
சதாம்
கழுத்தை நசுக்க?

***********

S. Jayabarthan (jayabarat@tnt21.com) Jan 1, 2006

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா